1 நாளாகமம் 8

fullscreen1 பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும்,

fullscreen2 நேகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.

fullscreen3 பேலாவுக்கு இருந்த குமாரர் ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள்.

fullscreen4 அபிசுவா, நாமான், அகோவா,

fullscreen5 கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர்.

fullscreen6 கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.

fullscreen7 கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டுபோனபின்பு, ஊசாவையும், அகியூதையும் பெற்றான்.

fullscreen8 அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊகிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகளைத்தவிர,

fullscreen9 தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலே யோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும்,

fullscreen10 எயூசையும், சாகியாவையும், மிர்மாமவையும் பெற்றான். பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர்.

fullscreen11 ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.

fullscreen12 எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.

fullscreen13 பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள்

fullscreen14 அகியோ, சாஷாக், எரேமோத்,

fullscreen15 செபதியா, ஆராத், ஆதேர்,

fullscreen16 காயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் குமாரர்.

fullscreen17 செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,

fullscreen18 இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் குமாரர்.

fullscreen19 யாக்கிம், சிக்ரி, சப்தி,

fullscreen20 எலியேனாய், சில்தாய், எலியேல்,

fullscreen21 அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர்.

fullscreen22 இஸ்பான், ஏபேர், ஏலியேல்,

fullscreen23 அப்தோன், சிக்ரி, ஆனான்,

fullscreen24 அனனியா, ஏலாம், அந்தோதியா,

fullscreen25 இபிதியா, பெயேல் என்பவர்கள் ஆஷாக்கின் குமாரர்.

fullscreen26 சம்சேராய், செகரியா, அத்தாலியா,

fullscreen27 யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எராகாமின் குமாரர்.

fullscreen28 இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள்.

fullscreen29 கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின்பேர் மாக்காள்.

fullscreen30 அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப்,

fullscreen31 கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள்.

fullscreen32 மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலே தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள்.

fullscreen33 நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.

fullscreen34 யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான்.

fullscreen35 மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள்.

fullscreen36 ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான்.

fullscreen37 மோசா பினியாவைப் பெற்றான், இவன் குமாரன் ரப்பா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.

fullscreen38 ஆத்சேலுக்கு ஆறுகுமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் குமாரர்.

fullscreen39 அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே

fullscreen40 ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பெளத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.