யோசுவா 13

fullscreen1 யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது, கர்த்தர் அவனை நோக்கி: நீ வயதுசென்றவனும் முதிர்ந்தவனுமானாய்; சுதந்தரித்துக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரமாயிருக்கிறது.

fullscreen2 மீதியாயிருக்கிற தேசம் எவையெனில், எகிப்துக்கு எதிரான சீகோர் ஆறுதுவக்கிக் கானானியரைச் சேர்ந்ததாக எண்ணப்படும் வடக்கேயிருக்கிற எக்ரோனின் எல்லைமட்டுமுள்ள பெலிஸ்தரின் எல்லா எல்லைகளும், கெசூரிம் முழுவதும்,

fullscreen3 காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களிலிருக்கிற பெலிஸ்தருடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியரின் நாடும்,

fullscreen4 தெற்கே துவக்கி ஆப்பெக்மட்டும் எமோரியர் எல்லைவரைக்கும் இருக்கிற கானானியரின் சகல தேசமும், சீதோனியருக்கடுத்த மெயாரா நாடும்,

fullscreen5 கிப்லியரின் நாடும், சூரியோதயமாய்ப் புறத்தில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதற்கொண்டு ஆமாத்துக்குள் பிரவேசிக்குமட்டுமுள்ள லீபனோன் முழுவதும்,

fullscreen6 லீபனோன் துவக்கி மிஸ்ரபோத்மாயீம் மட்டும் மலைகளில் குடியிருக்கிற யாவருடைய நாடும், சீதோனியருடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகச் சீட்டுகளைமாத்திரம் போட்டுத் தேசத்தைப் பங்கிடவேண்டும்.

fullscreen7 ஆதலால் இந்தத் தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகப் பங்கிடு என்றார்.

fullscreen8 மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும் ரூபனியரும் காத்தியரும் தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.

fullscreen9 அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், நதியின் மத்தியிலிருக்கிற பட்டணமும் துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற மெதபாவின் சமனான பூமியாவையும்,

fullscreen10 எஸ்போனிலிருந்து அம்மோன் புத்திரரின் எல்லைமட்டும் ஆண்ட எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குரிய சகல பட்டணங்களையும்,

fullscreen11 கீலேயாத்தையும், கெசூரியர் மாகாத்தியருடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும்,

fullscreen12 அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு, மோசே முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.

fullscreen13 இஸ்ரவேல் புத்திரரோ கெசூரியரையும் மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை, கெசூரியரும் மாகாத்தியரும் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவே குடியிருக்கிறார்கள்.

fullscreen14 லேவியரின் கோத்திரத்துக்குமாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம்.

fullscreen15 மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத் தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்.

fullscreen16 அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், ஆற்றின் மத்தியிலிருக்கிற பட்டணம் தொடங்கி மெதெபாவரைக்கும்முள்ள சமபூமி முழுவதும்,

fullscreen17 சமபூமியிலிருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப்பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால்மெயோன்,

fullscreen18 யாக்சா, கெதெமோத், மேபாகாத்,

fullscreen19 கீரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரெத்சகார்,

fullscreen20 பெத்பெயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான

fullscreen21 சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆண்டிருந்த சீகோன் என்னும் எமோரியருடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று, அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாயிருந்த ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.

fullscreen22 இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங் கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.

fullscreen23 அப்படியே யோர்தானும் அதற்கடுத்ததும் ரூபன் புத்திரரின் எல்லையாயிற்று, இந்தப்பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த சுதந்தரம்.

fullscreen24 காத்புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத் தக்கதாகக் கொடுத்தது என்னவெனில்:

fullscreen25 யாசேரும், கீலேயாத்தின் சகல பட்டணங்களும், ரபாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்மட்டுமுள்ள அம்மோன் புத்திரரின் பாதித் தேசமும்,

fullscreen26 எஸ்போன் துவக்கி ராமாத் மிஸ்பேமட்டும் பெத்தொனீம் வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவக்கித் தெபீரின் எல்லைமட்டும் இருக்கிறதும்,

fullscreen27 எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப்பங்காகிய பள்ளத்தாக்கிலிருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்மட்டும் இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாய்க் கின்னரேத் கடலின் கடையாந்தரமட்டும் இருக்கிறதும், அவர்கள் எல்லைகுள்ளாயிற்று.

fullscreen28 இந்தப்பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் காத் புத்திரருக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி வந்த சுதந்தரம்.

fullscreen29 மனாசே புத்திரரின் பாதிக்கோத்திரத்துக்கும் மோசே அவர்கள் வம்சத்துக்குத் தக்கதாகக் கொடுத்தான்.

fullscreen30 மகனாயீம் துவக்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாயிருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் சகல ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று.

fullscreen31 பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஒரு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் பாதிபேருக்கு அவர்களின் வம்சங்களின்படியே கொடுத்தான்.

fullscreen32 மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையிலிருக்கிற மோவாபின் சமனான வெளிகளில் சுதந்தரமாகக் கொடுத்தவைகள் இவைகளே.

fullscreen33 லேவிகோத்திரத்திற்கு மோசே சுதந்தரம் கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி, அவரே அவர்களுடைய சுதந்தரம்.