Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Boomiyin Narkudigalae Kartharai - பூமியின் நற்குடிகளே கர்த்தரை

பல்லவி

பூமியின் நற்குடிகளே,-கர்த்தரை என்றும்
போற்றிப்பாடிக் கொண்டாடுங்கள்.

அனுபல்லவி

ஸ்வாமியின் சந்நிதியில் சந்தோஷ முகத்துடன்
சாஷ்டாங்கம் செய்து மிகச்சேவித்துப் பணியுங்கள். – பூமி

சரணங்கள்

1. கர்த்தரே தெய்வமென்று கண்டுமே கொள்வீர்கள்,
காசினியில் நாமல்ல கடவுளே சிருஷ்டித்தார்.
அற்புத தேவனின் அரிய ஜனங்களாவோம்,
ஆண்டவர் ஆடுகளாய் அவனியில் இருக்கின்றோம். – பூமி

2. ஆலய வாசல்களில் அரிய துதிகளோடும்,
அவர் பிரகாரங்களில் அதிபுகழ்ச்சிகளோடும்,
சீல முடனே வந்து சிறப்புடனே பணிந்து
சீர் பெரும் ஆண்டவரைச்சேர்ந்துமே துதியுங்கள். – பூமி

3. கர்த்தர் மகாவல்லவர், கர்த்தர் அருட்கிருபை,
காசினியில் தேடினும் காண்பீரோ பெரியது.
தற்பரன் உண்மையோ தலை முறைக்கு முள்ளது,
தலை வணங்கியே பரன் தாள் பணிந்து மகிழ்வீர். – பூமி

4. ஆதி பிதா தமக்கும் அரிய குமாரனுக்கும்,
அரூபியான தேவனின் ஆவி பரிசுத்தர்க்கும்,
நீதி முறை வழுவா நிமல திரியேகர்க்கும்
நித்திய மகிமையும் புகழுண்டாகவே. ஆமென்.

பூமியின் நற்குடிகளே கர்த்தரை – Boomiyin Narkudigalae Kartharai Lyrics in English

Pallavi

Poomiyin narkutikalae,-karththarai entum
Pottippaatik konndaadungal.

Anupallavi

Svaamiyin sannithiyil santhosha mukaththudan
Saashdaangam seythu mikachchaேviththup panniyungal. – poomi

Saranangal

1. Karththarae theyvamentu kanndumae kolveerkal,
Kaasiniyil naamalla kadavulae sirushtiththaar.
Arputha thaevanin ariya janangalaavom,
Aanndavar aadukalaay avaniyil irukkintom. – poomi

2. Aalaya vaasalkalil ariya thuthikalodum,
Avar pirakaarangalil athipukalchchikalodum,
Seela mudanae vanthu sirappudanae panninthu
Seer perum aanndavaraichchaேrnthumae thuthiyungal. – poomi

3. Karththar makaavallavar, Karththar arutkirupai,
Kaasiniyil thaetinum kaannpeero periyathu.
Tharparan unnmaiyo thalai muraikku mullathu,
Thalai vanangiyae paran thaal panninthu makilveer. – poomi

4. Aathi pithaa thamakkum ariya kumaaranukkum,
Aroopiyaana thaevanin aavi Parisuththarkkum,
Neethi murai valuvaa nimala thiriyaekarkkum
Niththiya makimaiyum pukalunndaakavae. Amen.

PowerPoint Presentation Slides for the song பூமியின் நற்குடிகளே கர்த்தரை – Boomiyin Narkudigalae Kartharai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Boomiyin Narkudigalae Kartharai – பூமியின் நற்குடிகளே கர்த்தரை PPT
Boomiyin Narkudigalae Kartharai PPT

பூமி அரிய காசினியில் தேவனின் பணிந்து கர்த்தர் தலை பல்லவி பூமியின் நற்குடிகளேகர்த்தரை போற்றிப்பாடிக் கொண்டாடுங்கள் அனுபல்லவி ஸ்வாமியின் சந்நிதியில் சந்தோஷ முகத்துடன் சாஷ்டாங்கம் செய்து தமிழ்