1 எபிரோனில் தாவீதுக்குப் பிறந்த புதல்வர் இவர்களே: இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாம் பெற்றெடுத்த தலைமகன் அம்னோன்; கர்மேலைச் சார்ந்த அபிகாயில் பெற்றெடுத்த தானியேல் இரண்டாமவர்;

2 கெசூரின் அரசன் தல்மாய் மகள் மாக்கா பெற்றெடுத்த அப்சலோம் மூன்றாமவர்; அகீத்து பெற்றெடுத்த அதோனியா நான்காமவர்;

3 அபித்தால் பெற்றெடுத்த செப்பத்தியா ஐந்தாமவர்; மனைவி எக்லா பெற்றெடுத்த இத்ரயாம் ஆறாமவர்.

4 இந்த ஆறு பேரும் எபிரோனில் அவருக்குப் பிறந்தவர்கள். அங்கே அவர் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் ஆட்சி செலுத்தினார். எருசலேமிலோ முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார்.⒫

5 எருசலேமில் அவருக்குப் பிறந்தோர் இவர்களே; அம்மியேலின் புதல்வி பத்சூவா பெற்றெடுத்த சிமயா, சோபாபு, நாத்தான், சாலமோன் ஆகிய நால்வர்.

6 ஏனையோர்; இப்கார், எலிசாமா, எலிப்பலேற்று,

7 நோகாகு, நெபேகு, யாப்பியா,

8 எலிசாமா, எலயாதா, எலிப்பலேற்று ஆகிய ஒன்பது பேர்.

9 இவர்கள் அனைவரும் தாவீதின் புதல்வர்: மற்றும் இவர்களின் சகோதரி தாமார்; இன்னும் மறுமனைவியர் மூலம் அவருக்கு வேறு புதல்வரும் இருந்தனர்.

10 சாலமோனின் புதல்வர்: இரகபெயாம், அவர் மகன் அபியா, அவர் மகன் ஆசா, அவர் மகன் யோசபாத்து.

11 அவர் மகன் யோராம், அவர் மகன் அகசியா, அவர் மகன் யோவாசு,

12 அவர் மகன் அமட்சியா, அவர் மகன் அசரியா, அவர் மகன் யோத்தாம்,

13 அவர் மகன் ஆகாசு, அவர் மகன் எசேக்கியா, அவர் மகன் மனாசே,

14 அவர் மகன் ஆமோன், அவர் மகன் யோசியா.

15 யோசியாவின் புதல்வர்: தலைமகன் யோகனான், இரண்டாமவர் யோயாக்கிம், மூன்றாமவர் செதேக்கியா, நான்காமவர் சல்லூம்.

16 யோயாக்கிமின் புதல்வர்: அவர் மகன் எக்கொனியா;* அவர் மகன் செதேக்கியா.

17 சிறைப்பட்ட எக்கோனியாவின் புதல்வர்: அவர் மகள் செயல்தியேல்,

18 மல்கிராம், பெதாயா, செனாட்சர், எக்கமியா, ஒசாமா, நெதமியா.

19 பெதாயாவின் புதல்வர்: செருபாபேல், சிமயி; செருபாபேலின் புதல்வர்: மெசுல்லாம், அனனியா, அவர்களின் சகோதரி செலோமித்து

20 மற்றும் ஆசுபா, ஒகேல், பெரக்கியா, அசதியா, ‘யூசபு கெசேது’ என்னும் ஐவர்.⒫

21 அனனியாவின் புதல்வர்: பெலற்றியா, ஏசாயா; அவர் மகன் இரபாயா; அவர் மகன் அர்னான்; அவர் மகன் ஒபதியா; அவர் மகன் செக்கனியா.

22 செக்கனியாவின் புதல்வர்: செமாயா; அவர் புதல்வர்: அற்றூசு, இகால், பாரியகு, நெயரியா, சாபாற்று ஆக மொத்தம் அறுவர்.

23 நெயரியாவின் புதல்வர்: எலியோவனாய், எசேக்கியா, அஸ்ரிக்காம் என்னும் மூவர்.

24 எலியோவனாயின் புதல்வர்: ஓதவியா, எலியாசிபு, பெலாயா, அக்கூபு, யோகனான், தெலாயா, அனானி என்னும் எழுவர்.

1 Chronicles 3 ERV IRV TRV