1 நாளாகமம் 4
1 யூதாவின் குமாரர், பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.
2 சோபாலின் குமாரன் ராயா யாகாத்தைப் பெற்றான்; யாகாத் அகுமாயியையும் லாகாதையும் பெற்றான்; சோராத்தியரின் வம்சங்கள் இவைகளே.
3 ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பேர் அத்செலெல்போனி;
4 கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.
5 தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு பெண்ஜாதிகள் இருந்தார்கள்.
6 நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும, ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் குமாரர்கள் இவர்களே.
7 ஏலாளின் குமாரர், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.
8 கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் குமாரனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.
9 யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.
10 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசிர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
11 சூகாவின் சகோதரனாகிய கேலுூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன்.
12 எஸ்தோன் பெத்ராபாவையும், பசேயாகையும், இர்நாகாஷின் தகப்பனாகிய தெகினாகையும் பெற்றான்; இவர்கள் ரேகாவூர் மனுஷர்.
13 கேனாசின் குமாரர், ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் குமாரரில் ஒருவன் ஆத்தாத்.
14 மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளிகளாயிருந்தார்கள்.
15 எப்புன்னேயின் குமாரனாகிய காலேபின் குமாரர், ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் குமாரரில் ஒருவன் கேனாஸ்.
16 எகலெலேலின் குமாரர், சீப், சீப்பா, திரியா, அசாரெயேல்.
17 எஸ்றாவின் குமாரர், யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் பெண்ஜாதி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.
18 அவன் பெண்ஜாதியாகிய எகுதியாள், கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும, சனோவாவின் தகப்பனாகிய எக்குகதியேலையும் பெற்றாள்; மேரேத் விவாகம் பண்ணின பார்வோனின் குமாரத்தியாகிய பித்தியாளின் குமாரர் இவர்களே.
19 நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய பெண்ஜாதியின் குமாரர் கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தினாகிய எஸ்தேமோவாவுமே.
20 ஷீமோனின் குமாரர், அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன் என்பவர்கள், இஷியின் குமாரர், சோகேதும் பென்சோகேதுமே.
21 யூதாவின் குமாரனாகிய சேலாகின் புத்திரர்: லேக்காவூர் மூப்பனான ஏரும் மரேசார் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டுவம்சங்களும்,
22 யோயாக்கீமும், கோசேபாவின் மனுஷரும், மோவாபியரை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் பூர்வகாலத்தின் செய்திகள்.
23 இவர்கள் குயவராயிருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்கு அங்கே வாசம்பண்ணினார்கள்
24 சிமியோனின் குமாரர், நெமுவேல்,யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
25 இவன் குமாரன் சல்லுூம்; இவன் குமாரன் மிப்சாம்; இவன் குமாரன் மிஸ்மா.
26 மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி.
27 சீமேயிக்குப் பதினாறு குமாரரும் குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரைப்போலப் பெருகினதுமில்லை.
28 அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆதசார்குவாவிலும்,
29 பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும்,
30 பெத்தூவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும்,
31 பெத்மார்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகுமட்டும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தது.
32 அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள்.
33 அந்த பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்மட்முள்ள அவர்களுடைய எல்லாப் பேட்டைகளும், அவர்களுடைய வாசஸ்தலங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே.
34 மசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும்,
35 யோவேலும், ஆசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் குமாரன் ஏகூவும்,
36 எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகாயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும் பெனாயாவும்,
37 செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் புத்திரனாகிய சீப்பியின் குமாரன் சீசாவும் என்று,
38 பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் வம்சங்களில் பிரபுக்களாயிருந்தார்கள், இவர்கள் பிதாக்களின் வீட்டார் ஏராளமாய்ப் பரம்பினார்கள்.
39 தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படிக்கு தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கீழ்ப்புறமட்டும் போய்,
40 நல்ல செழிப்பான மேய்ச்சலையும், அமரிக்கையும், சுகமுமுள்ள விஸ்தாரமான தேசத்தையும் கண்டுபிடித்தார்கள்; பூர்வத்திலே காமின் சந்ததியார் அங்கே குடியிருந்தார்கள்.
41 பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே, கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும், தாபரங்களையும் அழித்து, இந்நாளிலே இருக்கிறதுபோல, அவர்களைச் சங்காரம்பண்ணி, அங்கே தங்கள் ஆடுகளுக்குமேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்.
42 சிமியோனின் புத்திரராகிய இவர்களில் ஐந்நூறு மனுஷரும், அவர்கள் தலைமைக்காரராகிய இஷியின் குமாரரான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,
43 அமலேக்கியரில் தப்பி மீதியாயிருந்தவர்களை மடங்கடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள்.
Tamil Indian Revised Version
பரலோகத்தின் தேவனுக்கு சர்வாங்க தகனபலிகளை செலுத்தத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சைரசம், எண்ணெய் ஆகியவை அனுதினம் அவர்கள் கேட்கிற விதத்தில் குறையில்லாமல் கொடுக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுங்கள். அவர்களுக்கு இளங்காளைகள், ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள் ஆகியவை பரலோகத்தின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடத் தேவைப்படுமானால் அவற்றைக் கொடுங்கள். எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் கோதுமை, திராட்சைரசம், உப்பு, ஒலிவ எண்ணெய் போன்றனவற்றைக் கேட்டால் ஒவ்வொரு நாளும் தவறாமல் கொடுக்கவும்.
Thiru Viviliam
மேலும் விண்ணகக் கடவுளுக்கு எரிபலி ஒப்புக் கொடுக்கத் தேவையான இளங்காளைகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ஆகியவையும் எருசலேமின் குருக்கள் தேவையென்று கேட்கும் கோதுமை, உப்பு, திராட்சை இரசம், எண்ணெய் முதலியவையும் நாள்தோறும் தவறாது கொடுக்கப்படட்டும்.
King James Version (KJV)
And that which they have need of, both young bullocks, and rams, and lambs, for the burnt offerings of the God of heaven, wheat, salt, wine, and oil, according to the appointment of the priests which are at Jerusalem, let it be given them day by day without fail:
American Standard Version (ASV)
And that which they have need of, both young bullocks, and rams, and lambs, for burnt-offerings to the God of heaven; `also’ wheat, salt, wine, and oil, according to the word of the priests that are at Jerusalem, let it be given them day by day without fail;
Bible in Basic English (BBE)
And whatever they have need of, young oxen and sheep and lambs, for burned offerings to the God of heaven, grain, salt, wine, and oil, whatever the priests in Jerusalem say is necessary, is to be given to them day by day regularly:
Darby English Bible (DBY)
And that which they have need of, both young bullocks and rams and lambs, for the burnt-offerings to the God of the heavens, wheat, salt, wine, and oil, according to the appointment of the priests that are at Jerusalem, let it be given them day by day without fail;
Webster’s Bible (WBT)
And that which they have need of, both young bullocks, and rams, and lambs, for the burnt-offerings of the God of heaven, wheat, salt, wine, and oil, according to the appointment of the priests who are at Jerusalem, let it be given to them day by day without fail:
World English Bible (WEB)
That which they have need of, both young bulls, and rams, and lambs, for burnt offerings to the God of heaven; [also] wheat, salt, wine, and oil, according to the word of the priests who are at Jerusalem, let it be given them day by day without fail;
Young’s Literal Translation (YLT)
and what they are needing — both young bullocks, and rams, and lambs for burnt-offerings to the God of heaven, wheat, salt, wine, and oil according to the saying of the priests who `are’ in Jerusalem — let be given to them day by day without fail,
எஸ்றா Ezra 6:9
பரலோகத்தின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளையிடத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலானவை தினந்தினம் அவர்கள் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படக்கடவது.
And that which they have need of, both young bullocks, and rams, and lambs, for the burnt offerings of the God of heaven, wheat, salt, wine, and oil, according to the appointment of the priests which are at Jerusalem, let it be given them day by day without fail:
And that which | וּמָ֣ה | ûmâ | oo-MA |
of, need have they | חַשְׁחָ֡ן | ḥašḥān | hahsh-HAHN |
both young | וּבְנֵ֣י | ûbĕnê | oo-veh-NAY |
bullocks, | תוֹרִ֣ין | tôrîn | toh-REEN |
and rams, | וְדִכְרִ֣ין | wĕdikrîn | veh-deek-REEN |
lambs, and | וְאִמְּרִ֣ין׀ | wĕʾimmĕrîn | veh-ee-meh-REEN |
for the burnt offerings | לַֽעֲלָוָ֣ן׀ | laʿălāwān | la-uh-la-VAHN |
God the of | לֶֽאֱלָ֪הּ | leʾĕlāh | leh-ay-LA |
of heaven, | שְׁמַיָּ֟א | šĕmayyāʾ | sheh-ma-YA |
wheat, | חִנְטִ֞ין | ḥinṭîn | heen-TEEN |
salt, | מְלַ֣ח׀ | mĕlaḥ | meh-LAHK |
wine, | חֲמַ֣ר | ḥămar | huh-MAHR |
and oil, | וּמְשַׁ֗ח | ûmĕšaḥ | oo-meh-SHAHK |
appointment the to according | כְּמֵאמַ֨ר | kĕmēʾmar | keh-may-MAHR |
of the priests | כָּֽהֲנַיָּ֤א | kāhănayyāʾ | ka-huh-na-YA |
which | דִי | dî | dee |
Jerusalem, at are | בִירֽוּשְׁלֶם֙ | bîrûšĕlem | vee-roo-sheh-LEM |
let it be | לֶֽהֱוֵ֨א | lehĕwēʾ | leh-hay-VAY |
given | מִתְיְהֵ֥ב | mityĕhēb | meet-yeh-HAVE |
day them | לְהֹ֛ם | lĕhōm | leh-HOME |
by day | י֥וֹם׀ | yôm | yome |
without | בְּי֖וֹם | bĕyôm | beh-YOME |
דִּי | dî | dee | |
fail: | לָ֥א | lāʾ | la |
שָׁלֽוּ׃ | šālû | sha-LOO |