கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்,
அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.
அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.
அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லால், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலேகொண்டுபோய் வைத்தான்.
தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.
கர்த்தருடைய பெட்டியைச் சுமந்துபோகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.
தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.
அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீதுபோட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான்.
தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களை ஆசீர்வதித்து,
| These | אֵ֚לֶּה | ʾēlle | A-leh |
| are the generations | תּוֹלְדֹ֣ת | tôlĕdōt | toh-leh-DOTE |
| of Noah: | נֹ֔חַ | nōaḥ | NOH-ak |
| Noah | נֹ֗חַ | nōaḥ | NOH-ak |
| was | אִ֥ישׁ | ʾîš | eesh |
| a just | צַדִּ֛יק | ṣaddîq | tsa-DEEK |
| man | תָּמִ֥ים | tāmîm | ta-MEEM |
| and perfect | הָיָ֖ה | hāyâ | ha-YA |
| in his generations, | בְּדֹֽרֹתָ֑יו | bĕdōrōtāyw | beh-doh-roh-TAV |
| and Noah | אֶת | ʾet | et |
| walked | הָֽאֱלֹהִ֖ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| with | הִֽתְהַלֶּךְ | hitĕhallek | HEE-teh-ha-lek |
| God. | נֹֽחַ׃ | nōaḥ | NOH-ak |