Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Judges 7:14 in Tamil

Home Bible Judges Judges 7 Judges 7:14

நியாயாதிபதிகள் 7:14
அப்பொழுது மற்றவன்: இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியரையும், இந்தச் சேனை அனைத்தையும் அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மற்றவன்; இது யோவாசின் மகனான கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியர்களையும், இந்த ராணுவம் அனைத்தையும், அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.

Tamil Easy Reading Version
அம்மனிதனின் நண்பன் கனவின் பொருளை அறிந்திருந்தான். அம்மனிதனின் நண்பன், “உன் கனவிற்கு ஒரே ஒரு பொருளுண்டு. உனது கனவு இஸ்ரவேலின் மனிதனைப் பற்றியது. அது யோவாஸின் மகனாகிய கிதியோனைக் குறித்து உணர்த்துகிறது. மீதியானியரின் எல்லா சேனைகளையும் கிதியோன் தோற்கடிப்பதற்கு தேவன் அனுமதிப்பார் என்று இது பொருள்படுகிறது” என்றான்.

Thiru Viviliam
அவன் தோழன் மறுமொழியாக, “இஸ்ரயேலனும் யோவாசின் மகனுமாகிய கிதியோனின் வாளைத் தவிர இது வேறொன்றுமில்லை. கடவுள் மிதியானியரையும் பாளையம் முழுவதையும் அவர் கையில் ஒப்படைத்துவிட்டார்” என்று கூறினான்.⒫

Judges 7:13Judges 7Judges 7:15

King James Version (KJV)
And his fellow answered and said, This is nothing else save the sword of Gideon the son of Joash, a man of Israel: for into his hand hath God delivered Midian, and all the host.

American Standard Version (ASV)
And his fellow answered and said, This is nothing else save the sword of Gideon the son of Joash, a man of Israel: into his hand God hath delivered Midian, and all the host.

Bible in Basic English (BBE)
And his friend in answer said, This is certainly the sword of Gideon, the son of Joash, the men of Israel: into their hands God has given up all the army of Midian.

Darby English Bible (DBY)
And his comrade answered, “This is no other than the sword of Gideon the son of Jo’ash, a man of Israel; into his hand God has given Mid’ian and all the host.”

Webster’s Bible (WBT)
And his fellow answered, and said, This is nothing else save the sword of Gideon the son of Joash, a man of Israel: for into his hand hath God delivered Midian, and all the host.

World English Bible (WEB)
His fellow answered, This is nothing else save the sword of Gideon the son of Joash, a man of Israel: into his hand God has delivered Midian, and all the host.

Young’s Literal Translation (YLT)
And his companion answereth and saith, `This is nothing save the sword of Gideon son of Joash, a man of Israel; God hath given into his hand Midian and all the camp.’

நியாயாதிபதிகள் Judges 7:14
அப்பொழுது மற்றவன்: இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியரையும், இந்தச் சேனை அனைத்தையும் அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.
And his fellow answered and said, This is nothing else save the sword of Gideon the son of Joash, a man of Israel: for into his hand hath God delivered Midian, and all the host.

וַיַּ֨עַןwayyaʿanva-YA-an
רֵעֵ֤הוּrēʿēhûray-A-hoo
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
אֵ֣יןʾênane
זֹ֔אתzōtzote
בִּלְתִּ֗יbiltîbeel-TEE
אִםʾimeem
חֶ֛רֶבḥerebHEH-rev
גִּדְע֥וֹןgidʿônɡeed-ONE
בֶּןbenben
יוֹאָ֖שׁyôʾāšyoh-ASH
אִ֣ישׁʾîšeesh
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
נָתַ֤ןnātanna-TAHN
הָֽאֱלֹהִים֙hāʾĕlōhîmha-ay-loh-HEEM
בְּיָד֔וֹbĕyādôbeh-ya-DOH
אֶתʾetet
מִדְיָ֖ןmidyānmeed-YAHN
וְאֶתwĕʾetveh-ET
כָּלkālkahl
הַֽמַּחֲנֶֽה׃hammaḥăneHA-ma-huh-NEH

Cross Reference

யோசுவா 2:9
கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்கள் என்றும் அறிவேன்.

யோபு 1:10
நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.

2 இராஜாக்கள் 7:6
ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப் பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி,

யோசுவா 5:1
இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.

யோசுவா 2:24
கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்குமுன்பாகச் சோர்ந்துபோனார்கள் என்று அவனோடே சொன்னார்கள்.

எண்ணாகமம் 24:10
அப்பொழுது பாலாக் பிலேயாமின் மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன். நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.

எண்ணாகமம் 23:20
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக் கூடாது.

எண்ணாகமம் 23:5
கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப்போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.

எண்ணாகமம் 22:38
அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும் ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ: தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான்.

யாத்திராகமம் 15:14
ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.


Tags அப்பொழுது மற்றவன் இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல தேவன் மீதியானியரையும் இந்தச் சேனை அனைத்தையும் அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்
Judges 7:14 in Tamil Concordance Judges 7:14 in Tamil Interlinear Judges 7:14 in Tamil Image