Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 2:20 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 2 1 Samuel 2:20

1 சாமுவேல் 2:20
ஏலி எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த ஸ்திரீ கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்ததற்குப் பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே சந்தானம் கட்டளையிடுவாராக என்றான்; அவர்கள் தங்கள் ஸ்தானத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள்.

Tamil Indian Revised Version
ஏலி எல்க்கானாவையும் அவனுடைய மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த பெண் கர்த்தருக்கென்று ஒப்புக் கொடுத்ததற்குப் பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே அனேகம் பிள்ளைகளைக் கொடுப்பாராக என்றான்; அவர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள்.

Tamil Easy Reading Version
ஏலி, எல்க்கானாவையும் அவனது மனைவியையும் ஆசீர்வதித்தான். அவன், “அன்னாள் மூலமாக கர்த்தர் மேலும் பல குழந்தைகளைத் தரட்டும். கர்த்தரிடம் ஜெபித்துக்கொண்டபடி, அவருக்கே அளிக்கப்பட்ட அன்னாளின் மகனுடைய இடத்தை இந்த பிள்ளைகள் பிறந்து நிரப்பட்டும்” என்றான். எல்க்கானாவும், அன்னாளும் வீட்டிற்குத் திரும்பினார்கள்.

Thiru Viviliam
எல்கானாவுக்கும் அவர் மனைவிக்கும் ஏலி ஆசி வழங்கி எல்கானாவை நோக்கி, “ஆண்டவர் இப்பெண் வழியாக, இவள் அவருக்கு நேர்ந்தளித்தவனுக்குப் பதிலாக, உனக்கு வழிமரபை அருள்வாராக” என்று கூறுவார். பிறகு அவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்வர்.

1 Samuel 2:191 Samuel 21 Samuel 2:21

King James Version (KJV)
And Eli blessed Elkanah and his wife, and said, The LORD give thee seed of this woman for the loan which is lent to the LORD. And they went unto their own home.

American Standard Version (ASV)
And Eli blessed Elkanah and his wife, and said, Jehovah give thee seed of this woman for the petition which was asked of Jehovah. And they went unto their own home.

Bible in Basic English (BBE)
And every year Eli gave Elkanah and his wife a blessing, saying, May the Lord give you offspring by this woman in exchange for the child you have given to the Lord. And they went back to their house.

Darby English Bible (DBY)
And Eli blessed Elkanah and his wife, and said, Jehovah give thee seed of this woman for the loan which is lent to Jehovah. And they went to their own home.

Webster’s Bible (WBT)
And Eli blessed Elkanah and his wife, and said, The LORD give thee issue of this woman for the loan which is lent to the LORD. And they went to their own home.

World English Bible (WEB)
Eli blessed Elkanah and his wife, and said, Yahweh give you seed of this woman for the petition which was asked of Yahweh. They went to their own home.

Young’s Literal Translation (YLT)
And Eli blessed Elkanah, and his wife, and said, `Jehovah doth appoint for thee seed of this woman, for the petition which she asked for Jehovah;’ and they have gone to their place.

1 சாமுவேல் 1 Samuel 2:20
ஏலி எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த ஸ்திரீ கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்ததற்குப் பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே சந்தானம் கட்டளையிடுவாராக என்றான்; அவர்கள் தங்கள் ஸ்தானத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள்.
And Eli blessed Elkanah and his wife, and said, The LORD give thee seed of this woman for the loan which is lent to the LORD. And they went unto their own home.

וּבֵרַ֨ךְûbērakoo-vay-RAHK
עֵלִ֜יʿēlîay-LEE
אֶתʾetet
אֶלְקָנָ֣הʾelqānâel-ka-NA
וְאֶתwĕʾetveh-ET
אִשְׁתּ֗וֹʾištôeesh-TOH
וְאָמַר֙wĕʾāmarveh-ah-MAHR
יָשֵׂם֩yāśēmya-SAME
יְהוָ֨הyĕhwâyeh-VA
לְךָ֥lĕkāleh-HA
זֶ֙רַע֙zeraʿZEH-RA
מִןminmeen
הָֽאִשָּׁ֣הhāʾiššâha-ee-SHA
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
תַּ֚חַתtaḥatTA-haht
הַשְּׁאֵלָ֔הhaššĕʾēlâha-sheh-ay-LA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
שָׁאַ֖לšāʾalsha-AL
לַֽיהוָ֑הlayhwâlai-VA
וְהָֽלְכ֖וּwĕhālĕkûveh-ha-leh-HOO
לִמְקוֹמֽוֹ׃limqômôleem-koh-MOH

Cross Reference

1 சாமுவேல் 1:27
இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார்.

ஆதியாகமம் 14:19
அவனை ஆசீர்வதித்து, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.

ஆதியாகமம் 27:27
அவன் கிட்டப்போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல இருக்கிறது.

எண்ணாகமம் 6:23
நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:

ரூத் 2:12
உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.

ரூத் 4:11
அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.

1 சாமுவேல் 1:11
சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.

லுூக்கா 2:34
பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.


Tags ஏலி எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்து இந்த ஸ்திரீ கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்ததற்குப் பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே சந்தானம் கட்டளையிடுவாராக என்றான் அவர்கள் தங்கள் ஸ்தானத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள்
1 Samuel 2:20 in Tamil Concordance 1 Samuel 2:20 in Tamil Interlinear 1 Samuel 2:20 in Tamil Image