1 நாளாகமம் 6:8
அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.
Tamil Indian Revised Version
அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.
Tamil Easy Reading Version
அகிதூப் சாதோக்கின் தந்தை, சாதோக் அகிமாசின் தந்தை.
Thiru Viviliam
அகித்தூபுக்குச் சாதோக்கு பிறந்தார்; சாதோக்குக்கு அகிமாசு பிறந்தார்.
King James Version (KJV)
And Ahitub begat Zadok, and Zadok begat Ahimaaz,
American Standard Version (ASV)
and Ahitub begat Zadok, and Zadok begat Ahimaaz,
Bible in Basic English (BBE)
And Ahitub was the father of Zadok, and Zadok was the father of Ahimaaz,
Darby English Bible (DBY)
and Ahitub begot Zadok, and Zadok begot Ahimaaz,
Webster’s Bible (WBT)
And Ahitub begat Zadok, and Zadok begat Ahimaaz,
World English Bible (WEB)
and Ahitub became the father of Zadok, and Zadok became the father of Ahimaaz,
Young’s Literal Translation (YLT)
and Ahitub begat Zadok, and Zadok begat Ahimaaz,
1 நாளாகமம் 1 Chronicles 6:8
அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.
And Ahitub begat Zadok, and Zadok begat Ahimaaz,
| וַֽאֲחִיטוּב֙ | waʾăḥîṭûb | va-uh-hee-TOOV | |
| הוֹלִ֣יד | hôlîd | hoh-LEED | |
| אֶת | ʾet | et | |
| צָד֔וֹק | ṣādôq | tsa-DOKE | |
| וְצָד֖וֹק | wĕṣādôq | veh-tsa-DOKE | |
| הוֹלִ֥יד | hôlîd | hoh-LEED | |
| אֶת | ʾet | et | |
| אֲחִימָֽעַץ׃ | ʾăḥîmāʿaṣ | uh-hee-MA-ats |
Cross Reference
2 சாமுவேல் 15:27
பின்னும் ராஜா ஆசாரியனாகிய சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு; உன் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமாகிய உங்கள் குமாரர் இரண்டுபேரும் உங்களோடேகூடத் திரும்பிப் போகட்டும்.
2 சாமுவேல் 8:17
அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா சம்பிரதியாயிருந்தான்.
1 இராஜாக்கள் 2:35
அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் குமாரன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் ஸ்தானத்திலும் வைத்தான்.
1 இராஜாக்கள் 1:44
ராஜா ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் குமாரன் பெனாயாவையும், கிரேத்தியரையும் பிலேத்தியரையும் அவனோடே அனுப்பினார்; அவர்கள் அவனை ராஜாவுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றினார்கள்.
1 இராஜாக்கள் 1:34
அங்கே ஆசாரியாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணக்கடவர்கள்; பின்பு எக்காள்ம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள்.
1 இராஜாக்கள் 1:8
ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதோடிருக்கிற பராக்கிரமசாலிகளும், அதோனியாவுக்கு உடந்தையாயிருக்கவில்லை.
2 சாமுவேல் 20:25
சேவா சம்பிரதியும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியருமாயிருந்தார்கள்.
2 சாமுவேல் 18:27
மேலும் ஜாமங்காக்கிறவன் முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் மகன் அகிமாசுடைய ஓட்டம்போலிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.
2 சாமுவேல் 18:22
சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படிக்கு உனக்கு நல்லசெய்தி இல்லாதிருக்கையில், நீ ஓடவேண்டியது என்ன என்றான்.
2 சாமுவேல் 18:19
சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.
2 சாமுவேல் 17:20
அப்சலோமின் சேவகர் அந்த ஸ்திரீயினிடத்தில் வீட்டிற்குள் வந்து: அகிமாசும் யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்த ஸ்திரீ: வாய்க்காலுக்கு அப்பாலே போய்விட்டார்கள் என்றான்; இவர்கள் தேடிக்காணாதேபோய், எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
2 சாமுவேல் 17:17
யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு, இன்றோகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீதுராஜாவுக்கு அதை அறிவிக்கப்போனார்கள்.
2 சாமுவேல் 17:15
பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இன்ன இன்னபடி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பருக்கும் ஆலோசனைச் சொன்னான்; நானோ இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னேன்.
2 சாமுவேல் 15:35
உன்னோடே அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே பிறக்கிற ஏதேது செய்தி உண்டோ, என்னென்ன கேள்விப்படுகிறாயோ, அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு அறிவிப்பாய்.
Tags அகிதூப் சாதோக்கைப் பெற்றான் சாதோக் அகிமாசைப் பெற்றான்
1 Chronicles 6:8 in Tamil Concordance 1 Chronicles 6:8 in Tamil Interlinear 1 Chronicles 6:8 in Tamil Image