நீதிமொழிகள் 16:27
பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.
Tamil Indian Revised Version
வீணான மகன் கிண்டிவிடுகிறான்; அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது.
Tamil Easy Reading Version
பயனற்றவன் கெட்ட செயல்களைச் செய்யவே திட்டமிடுவான். அவனது அறிவுரை நெருப்பைப்போன்று அழிக்கும்.
Thiru Viviliam
⁽பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்; எரிக்கும் நெருப்புப் போன்றது அவரது நாக்கு.⁾
King James Version (KJV)
An ungodly man diggeth up evil: and in his lips there is as a burning fire.
American Standard Version (ASV)
A worthless man deviseth mischief; And in his lips there is as a scorching fire.
Bible in Basic English (BBE)
A good-for-nothing man is a designer of evil, and in his lips there is a burning fire.
Darby English Bible (DBY)
A man of Belial diggeth up evil, and on his lips there is as a scorching fire.
World English Bible (WEB)
A worthless man devises mischief. His speech is like a scorching fire.
Young’s Literal Translation (YLT)
A worthless man is preparing evil, And on his lips — as a burning fire.
நீதிமொழிகள் Proverbs 16:27
பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.
An ungodly man diggeth up evil: and in his lips there is as a burning fire.
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| בְּ֭לִיַּעַל | bĕliyyaʿal | BEH-lee-ya-al | |
| כֹּרֶ֣ה | kōre | koh-REH | |
| רָעָ֑ה | rāʿâ | ra-AH | |
| וְעַל | wĕʿal | veh-AL | |
| שְׂ֝פָת֗יוֹ | śĕpātyô | SEH-FAHT-yoh | |
| כְּאֵ֣שׁ | kĕʾēš | keh-AYSH | |
| צָרָֽבֶת׃ | ṣārābet | tsa-RA-vet |
Cross Reference
யாக்கோபு 3:6
நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
ஆபகூக் 2:13
இதோ, ஜனங்கள் அக்கினிக்கு இரையாக உழைத்து, ஜனங்கள் விருதாவாக இளைத்துப்போகிறது கர்த்தருடைய செயல் அல்லவோ?
ஏசாயா 5:18
மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டில் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டு வந்து,
நீதிமொழிகள் 6:14
அவன் இருதயத்தில் திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.
நீதிமொழிகள் 6:12
பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித் திரிகிறான்.
நீதிமொழிகள் 2:4
அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,
சங்கீதம் 57:4
என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது.
சங்கீதம் 52:2
நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
சங்கீதம் 17:14
மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.
2 சாமுவேல் 20:1
அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்குத் தாவீதினிடத்தில் பங்கும் இல்லை, ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலே, நீங்கள் அவரவர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள் என்றான்.
1 சாமுவேல் 25:17
இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான்மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக் கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான்.
Tags பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான் எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது
Proverbs 16:27 in Tamil Concordance Proverbs 16:27 in Tamil Interlinear Proverbs 16:27 in Tamil Image