Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeremiah 2:7 in Tamil

Home Bible Jeremiah Jeremiah 2 Jeremiah 2:7

எரேமியா 2:7
செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.

Tamil Indian Revised Version
செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடுவதற்கு நான் உங்களை அவ்விடத்திற்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் நுழைந்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்திரத்தை அருவருப்பாக்கினீர்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார்: “நான் உங்களை நல்ல நாட்டிற்கு கொண்டுவந்தேன், பல நன்மைகள் நிறைந்த ஒரு நாட்டிற்கு கொண்டுவந்தேன். நான் இதனைச் செய்தேன், எனவே நீ அங்கு வளர்ந்த பழங்கள் மற்றும் அறுவடைகளை உண்ணமுடியும், ஆனால் நீங்கள் என் நாட்டை ‘அசுத்தம்’ மட்டுமே செய்தீர்கள். நான் அந்த நல்ல நாட்டை உங்களுக்குக் கொடுத்தேன், ஆனால் நீங்கள் அதனை தீய இடமாகச் செய்தீர்கள்.

Thiru Viviliam
⁽செழிப்பான நாட்டுக்கு␢ அதன் கனிகளையும்␢ நலன்களையும் நுகருமாறு␢ நான் உங்களை அழைத்து வந்தேன்.␢ நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து␢ அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்;␢ எனது உரிமைச் சொத்தை நீங்கள்␢ அருவருப்புக்குள்ளாக்கினீர்கள்.⁾

Jeremiah 2:6Jeremiah 2Jeremiah 2:8

King James Version (KJV)
And I brought you into a plentiful country, to eat the fruit thereof and the goodness thereof; but when ye entered, ye defiled my land, and made mine heritage an abomination.

American Standard Version (ASV)
And I brought you into a plentiful land, to eat the fruit thereof and the goodness thereof; but when ye entered, ye defiled my land, and made my heritage an abomination.

Bible in Basic English (BBE)
And I took you into a fertile land, where you were living on its fruit and its wealth; but when you came in, you made my land unclean, and made my heritage a disgusting thing.

Darby English Bible (DBY)
And I brought you into a fruitful land, to eat the fruit thereof and the good thereof; and ye entered and defiled my land, and made my heritage an abomination.

World English Bible (WEB)
I brought you into a plentiful land, to eat the fruit of it and the goodness of it; but when you entered, you defiled my land, and made my heritage an abomination.

Young’s Literal Translation (YLT)
Yea, I bring you in to a land of fruitful fields, To eat its fruit and its goodness, And ye come in and defile My land, And Mine inheritance have made an abomination.

எரேமியா Jeremiah 2:7
செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.
And I brought you into a plentiful country, to eat the fruit thereof and the goodness thereof; but when ye entered, ye defiled my land, and made mine heritage an abomination.

וָאָבִ֤יאwāʾābîʾva-ah-VEE
אֶתְכֶם֙ʾetkemet-HEM
אֶלʾelel
אֶ֣רֶץʾereṣEH-rets
הַכַּרְמֶ֔לhakkarmelha-kahr-MEL
לֶאֱכֹ֥לleʾĕkōlleh-ay-HOLE
פִּרְיָ֖הּpiryāhpeer-YA
וְטוּבָ֑הּwĕṭûbāhveh-too-VA
וַתָּבֹ֙אוּ֙wattābōʾûva-ta-VOH-OO
וַתְּטַמְּא֣וּwattĕṭammĕʾûva-teh-ta-meh-OO
אֶתʾetet
אַרְצִ֔יʾarṣîar-TSEE
וְנַחֲלָתִ֥יwĕnaḥălātîveh-na-huh-la-TEE
שַׂמְתֶּ֖םśamtemsahm-TEM
לְתוֹעֵבָֽה׃lĕtôʿēbâleh-toh-ay-VA

Cross Reference

உபாகமம் 8:7
உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்;

எரேமியா 16:18
முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்துக்கும், அவர்களுடைய பாவத்துக்கும் இரட்டிப்பாய் நீதியைச் சரிக்கட்டுவேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தைத் சீயென்று அருவருக்கப்படத்தக்க தங்கள் காரியங்களின் நாற்றமான விக்கிரகங்களினாலே நிரப்பினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சங்கீதம் 106:38
அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தை சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது.

எண்ணாகமம் 13:27
அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.

மீகா 2:10
எழுந்திருந்து போங்கள்; இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல, இது தீட்டுப்பட்டது, இது உங்களை நாசப்படுத்தும், அந்த நாசம் மிகவும் கொடியதாயிருக்கும்.

எசேக்கியேல் 36:17
மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் சுயதேசத்திலே குடியிருக்கையில் அதைத் தங்கள் நடக்கையினாலும் தங்கள் கிரியைகளினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என் முகத்துக்கு முன்பாக தூரஸ்திரீயின் தீட்டைப்போல் இருந்தது.

எசேக்கியேல் 20:6
நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து அழைப்பேன் என்றும், அவர்களுக்காக நான் பார்த்துவைத்ததும், பாலும் தேனும் ஓடுகிறதும் எல்லா தேசங்களின் சிங்காரமுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவேன் என்றும் அந்நாளிலே ஆணையிட்டு,

எரேமியா 3:9
பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.

எரேமியா 3:1
ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய் அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சங்கீதம் 78:58
தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.

நெகேமியா 9:25
அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும் ஏராளமான திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.

உபாகமம் 21:23
இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.

உபாகமம் 11:10
நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.

உபாகமம் 6:18
நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த நல்ல தேசத்தில் நீ பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும்,

உபாகமம் 6:10
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,

எண்ணாகமம் 35:33
நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.

எண்ணாகமம் 14:7
இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்லதேசம்.

லேவியராகமம் 18:24
இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.


Tags செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன் ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்
Jeremiah 2:7 in Tamil Concordance Jeremiah 2:7 in Tamil Interlinear Jeremiah 2:7 in Tamil Image