எரேமியா 49:37
நான் ஏலாமியரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாகுமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி,
Tamil Indian Revised Version
நான் ஏலாமியரை அவர்கள் எதிரிகளுக்கு முன்பாகவும், அவர்கள் உயிரை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கச்செய்து, என் கோபத்தின் கடுமையாகிய தீங்கை அவர்கள்மேல் வரச்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிக்கும்வரை பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி,
Tamil Easy Reading Version
நான் ஏலாமை, அவர்களின் பகைவர்கள் கவனிக்கும்போதே துண்டுகளாக உடைப்பேன். அவர்களைக் கொல்ல விரும்பும் ஜனங்களின் முன்னால் ஏலாமை நான் உடைப்பேன். நான் அவர்களுக்குப் பயங்கரமானவற்றைக் கொண்டு வருவேன். நான் எவ்வளவு கோபமாக இருக்கிறேன் என்பதைக் காட்டுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் ஏலாமைத் துரத்தும்படி வாளை அனுப்புவேன். நான் அவர்கள் அனைவரையும் கொல்லும்வரை அந்த வாள் அவர்களைத் துரத்தும்.
Thiru Viviliam
⁽ஏலாமின் எதிரிகள் முன்னும்,␢ அதன் உயிரைப்␢ பறிக்கத் தேடுவோர் முன்னும்␢ நான் அதை நடுங்கச்செய்வேன்;␢ அவர்கள்மேல் தண்டனை வருவிப்பேன்.␢ என் சினம் அவர்கள் மேல்␢ மூண்டெழும், என்கிறார் ஆண்டவர்.␢ அவர்களை முற்றிலும்␢ அழித்துத் தீர்க்கும்வரை,␢ அவர்களைப் பின்தொடருமாறு␢ வாளை அனுப்பி வைப்பேன்.⁾
King James Version (KJV)
For I will cause Elam to be dismayed before their enemies, and before them that seek their life: and I will bring evil upon them, even my fierce anger, saith the LORD; and I will send the sword after them, till I have consumed them:
American Standard Version (ASV)
And I will cause Elam to be dismayed before their enemies, and before them that seek their life; and I will bring evil upon them, even my fierce anger, saith Jehovah; and I will send the sword after them, till I have consumed them;
Bible in Basic English (BBE)
And I will let Elam be broken before their haters, and before those who are making designs against their lives: I will send evil on them, even my burning wrath, says the Lord; and I will send the sword after them till I have put an end to them:
Darby English Bible (DBY)
And I will cause Elam to be dismayed before their enemies, and before them that seek their life; and I will bring evil upon them, my fierce anger, saith Jehovah; and I will send the sword after them, till I have consumed them.
World English Bible (WEB)
I will cause Elam to be dismayed before their enemies, and before those who seek their life; and I will bring evil on them, even my fierce anger, says Yahweh; and I will send the sword after them, until I have consumed them;
Young’s Literal Translation (YLT)
And I have affrighted Elam before their enemies, And before those seeking their life, And I have brought in against them evil, The heat of Mine anger, An affirmation of Jehovah, And I have sent after them the sword, Till I have consumed them;
எரேமியா Jeremiah 49:37
நான் ஏலாமியரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாகுமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி,
For I will cause Elam to be dismayed before their enemies, and before them that seek their life: and I will bring evil upon them, even my fierce anger, saith the LORD; and I will send the sword after them, till I have consumed them:
| וְהַחְתַּתִּ֣י | wĕhaḥtattî | veh-hahk-ta-TEE | |
| אֶת | ʾet | et | |
| עֵ֠ילָם | ʿêlom | A-lome | |
| לִפְנֵ֨י | lipnê | leef-NAY | |
| אֹיְבֵיהֶ֜ם | ʾôybêhem | oy-vay-HEM | |
| וְלִפְנֵ֣י׀ | wĕlipnê | veh-leef-NAY | |
| מְבַקְשֵׁ֣י | mĕbaqšê | meh-vahk-SHAY | |
| נַפְשָׁ֗ם | napšām | nahf-SHAHM | |
| וְהֵבֵאתִ֨י | wĕhēbēʾtî | veh-hay-vay-TEE | |
| עֲלֵיהֶ֧ם׀ | ʿălêhem | uh-lay-HEM | |
| רָעָ֛ה | rāʿâ | ra-AH | |
| אֶת | ʾet | et | |
| חֲר֥וֹן | ḥărôn | huh-RONE | |
| אַפִּ֖י | ʾappî | ah-PEE | |
| נְאֻם | nĕʾum | neh-OOM | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וְשִׁלַּחְתִּ֤י | wĕšillaḥtî | veh-shee-lahk-TEE | |
| אַֽחֲרֵיהֶם֙ | ʾaḥărêhem | ah-huh-ray-HEM | |
| אֶת | ʾet | et | |
| הַחֶ֔רֶב | haḥereb | ha-HEH-rev | |
| עַ֥ד | ʿad | ad | |
| כַּלּוֹתִ֖י | kallôtî | ka-loh-TEE | |
| אוֹתָֽם׃ | ʾôtām | oh-TAHM |
Cross Reference
எரேமியா 9:16
அவர்களும், அவர்கள் பிதாக்களும் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் அதை அவர்களுக்குப்பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 48:2
எஸ்போனைக்குறித்து மோவாபுக்கு இருந்த பெத்தரிக்கம் இனி இராது; அது ஒரு ஜாதியாயிராதபடிக்கு அதை நிர்மூலமாக்குவேன் வாருங்களென்று அதற்கு விரோதமாகப் பொல்லாப்பை நினைத்திருக்கிறார்கள்; மத்மேனே, நீயும் சங்காரமாவாய்; பட்டயம் உன்னைத்தொடரும்.
எசேக்கியேல் 32:23
பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய கூட்டம் கிடக்கிறது, ஜீவனுள்ளோருடைய தேசத்திலே செடியுண்டாக்கின அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டு விழுந்தவர்கள்தானே.
எசேக்கியேல் 12:14
அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் சகல திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.
எசேக்கியேல் 5:12
உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.
எசேக்கியேல் 5:2
மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிக்கைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றக்கடவாய்; அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன்.
எரேமியா 50:36
பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள் மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.
எரேமியா 49:29
அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுடைய மந்தைகளையும் வாங்கி, அவர்களுடைய திரைகளையும் அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் அவர்களுடைய ஒட்டகங்களையும் தங்களுக்கென்று கொண்டுபோய், எத்திசையும் பயம் என்று சொல்லி, அவர்கள்மேல் ஆர்ப்பரிப்பார்கள்.
எரேமியா 49:24
தமஸ்கு தளர்ந்துபோம், புறங்காட்டி ஓடிப்போம்; திகில் அதைப்பிடித்தது; பிரசவ ஸ்திரீயைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது.
எரேமியா 49:22
இதோ, ஒரு கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் செட்டைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான்; அந்நாளிலே ஏதோமுடைய பராகிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும் என்கிறார்.
எரேமியா 49:5
இதோ, உன் சுற்றுப்புறத்தார் எல்லாராலும் உன்மேல் திகிலை வரப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் அவரவர் தம்தம் முன் இருக்கும் வழியே ஓடத் துரத்தப்படுவீர்கள்; வலசைவாங்கி ஓடுகிறவர்களைச் சேர்ப்பார் ஒருவருமில்லை.
எரேமியா 48:39
மோவாப் எவ்வளவாய் முறிந்துபோயிற்றென்று அலறுகிறார்கள்; அது முதுகைக்காட்டி எவ்வளவாய் வெட்கப்படும்? இப்படி மோவாப் தன் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் பரியாசமும் திகைப்புமாயிருக்கும்
எரேமியா 34:20
நான் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவர்களுடைய பிரேதம் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
எரேமியா 30:24
கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது; கடைசி நாட்களில் அதை உணர்ந்து கொள்ளுவீர்கள்.
சங்கீதம் 48:4
இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.
லேவியராகமம் 26:33
ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.
Tags நான் ஏலாமியரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் நான் அவர்களை நிர்மூலமாகுமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி
Jeremiah 49:37 in Tamil Concordance Jeremiah 49:37 in Tamil Interlinear Jeremiah 49:37 in Tamil Image