பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.
குருவிக்குத் தரையிலே சுருக்குப்போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ?
நாங்கள் சமாரியாவின் பர்வதங்களில வந்து கூடி, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரமனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரமனைகள்மேலும் கூறுங்கள்.
அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆகையால் நீங்கள் கேட்டு யாக்கோபு வம்சத்தாருக்குள்ளே சாட்சியாக அறிவிக்கவேண்டியது: சேனைகளின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்,
நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும்நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும்.
| And I will smite | וְהִכֵּיתִ֥י | wĕhikkêtî | veh-hee-kay-TEE |
| the winter | בֵית | bêt | vate |
| house | הַחֹ֖רֶף | haḥōrep | ha-HOH-ref |
| with | עַל | ʿal | al |
| the summer | בֵּ֣ית | bêt | bate |
| house; | הַקָּ֑יִץ | haqqāyiṣ | ha-KA-yeets |
| and the houses | וְאָבְד֞וּ | wĕʾobdû | veh-ove-DOO |
| of ivory | בָּתֵּ֣י | bottê | boh-TAY |
| shall perish, | הַשֵּׁ֗ן | haššēn | ha-SHANE |
| and the great | וְסָפ֛וּ | wĕsāpû | veh-sa-FOO |
| houses | בָּתִּ֥ים | bottîm | boh-TEEM |
| shall have an end, | רַבִּ֖ים | rabbîm | ra-BEEM |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |