1இவையெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலுங்கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல்புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள்.Now when all this was finished, all Israel that were present went out to the cities of Judah, and brake the images in pieces, and cut down the groves, and threw down the high places and the altars out of all Judah and Benjamin, in Ephraim also and Manasseh, until they had utterly destroyed them all. Then all the children of Israel returned, every man to his possession, into their own cities.
2எசேக்கியா ஆசாரியர் லேவியருடைய வகுப்புகளை அவர்கள் வரிசைகளின்படியேயும் அவரவரை அவர்கள் ஊழியத்தின்படியேயும் திட்டப்படுத்தி, ஆசாரியரையும் லேவியரையும், சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும், கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குப்படுத்தினான்.And Hezekiah appointed the courses of the priests and the Levites after their courses, every man according to his service, the priests and Levites for burnt offerings and for peace offerings, to minister, and to give thanks, and to praise in the gates of the tents of the LORD.
3ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே அந்திசந்திகளில் செலுத்தவேண்டிய சர்வாங்கதனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான.He appointed also the king's portion of his substance for the burnt offerings, to wit, for the morning and evening burnt offerings, and the burnt offerings for the sabbaths, and for the new moons, and for the set feasts, as it is written in the law of the LORD.
4ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான்.Moreover he commanded the people that dwelt in Jerusalem to give the portion of the priests and the Levites, that they might be encouraged in the law of the LORD.
5இந்த வார்த்தை பிரசித்தமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரத்திலும் முதற்பலன்களை திரளாகக்கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாய்க் கொடுத்தார்கள்.And as soon as the commandment came abroad, the children of Israel brought in abundance the firstfruits of corn, wine, and oil, and honey, and of all the increase of the field; and the tithe of all things brought they in abundantly.
6யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் புத்திரரும், யூதாபுத்திரரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள்.And concerning the children of Israel and Judah, that dwelt in the cities of Judah, they also brought in the tithe of oxen and sheep, and the tithe of holy things which were consecrated unto the LORD their God, and laid them by heaps.
7மூன்றாம் மாதத்தில் குவியல் செய்யத்தொடங்கி ஏழாம் மாதத்தில் முடித்தார்கள்.In the third month they began to lay the foundation of the heaps, and finished them in the seventh month.
8எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைக் காணும்போது, கர்த்தருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள்.And when Hezekiah and the princes came and saw the heaps, they blessed the LORD, and his people Israel.
9அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா ஆசாரியரையும் லேவியரையும் விசாரித்தபோது,Then Hezekiah questioned with the priests and the Levites concerning the heaps.
10சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திர்ப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்.And Azariah the chief priest of the house of Zadok answered him, and said, Since the people began to bring the offerings into the house of the LORD, we have had enough to eat, and have left plenty: for the LORD hath blessed his people; and that which is left is this great store.
11அப்பொழுது எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் பண்டகசாலைகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான்.Then Hezekiah commanded to prepare chambers in the house of the LORD; and they prepared them,
12அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான்.And brought in the offerings and the tithes and the dedicated things faithfully: over which Cononiah the Levite was ruler, and Shimei his brother was the next.
13ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, யெகியேலும், அகசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.And Jehiel, and Azaziah, and Nahath, and Asahel, and Jerimoth, and Jozabad, and Eliel, and Ismachiah, and Mahath, and Benaiah, were overseers under the hand of Cononiah and Shimei his brother, at the commandment of Hezekiah the king, and Azariah the ruler of the house of God.
14கிழக்கு வாசலைக் காக்கிற இம்னாவின் குமாரனாகிய கோரே என்னும் லேவியன், கர்த்தருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் மகா பரிசுத்தமானவைகளையும் பங்கிடும்படிக்கு, தேவனுக்குச் செலுத்தும் உற்சாகக் காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தான்.And Kore the son of Imnah the Levite, the porter toward the east, was over the freewill offerings of God, to distribute the oblations of the LORD, and the most holy things.
15அவனுடைய கைக்கு உதவியாக ஆசாரியரின் பட்டணங்களில் வகுப்புகளின்படியிருக்கிற தங்கள் சகோதரரிலே பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரிசமானமாய்க் கொடுக்கும்படிக்கு, உண்மையுள்ளவர்களாக எண்ணப்பட்ட ஏதேனும், மின்யமீனும், யெசுவாவும், செமாயாவும், அமரியாவும், செக்கனியாவும் ஏற்படுத்தப்பட்டார்கள்.And next him were Eden, and Miniamin, and Jeshua, and Shemaiah, Amariah, and Shecaniah, in the cities of the priests, in their set office, to give to their brethren by courses, as well to the great as to the small:
16வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத் தவிர, கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் வகுப்புகளின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாய் அநுதின படி கொடுக்கப்பட்டது.Beside their genealogy of males, from three years old and upward, even unto every one that entereth into the house of the LORD, his daily portion for their service in their charges according to their courses;
17தங்கள் பிதாக்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் வகுப்புகளின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியருக்கும், லேவியருக்கும்,Both to the genealogy of the priests by the house of their fathers, and the Levites from twenty years old and upward, in their charges by their courses;
18அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாய் விசாரித்தார்கள்.And to the genealogy of all their little ones, their wives, and their sons, and their daughters, through all the congregation: for in their set office they sanctified themselves in holiness:
19ஆசாரியரில் எல்லா ஆண்பிள்ளைகளுக்கும் லேவியருக்குள்ளே அட்டவணையில் எழுதப்பட்டவர்கள் எல்லாருக்கும் படிகொடுக்க, ஆசாரியருடைய ஒவ்வொரு பட்டணத்துக்கடுத்த வெளிநிலங்களிலும் ஆரோன் புத்திரரில் பேர்பேராகக் குறிக்கப்பட்ட மனுஷர் இருந்தார்கள்.Also of the sons of Aaron the priests, which were in the fields of the suburbs of their cities, in every several city, the men that were expressed by name, to give portions to all the males among the priests, and to all that were reckoned by genealogies among the Levites.
20இந்தப்பிரகாரமாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான்.And thus did Hezekiah throughout all Judah, and wrought that which was good and right and truth before the LORD his God.
21அவன் தேவனுடைய ஆலயத்தின்வேலையிலும், தன் தேவனைத் தேடும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்னசெய்யத் தொடங்கினானோ, அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து சித்திபெற்றான்.And in every work that he began in the service of the house of God, and in the law, and in the commandments, to seek his God, he did it with all his heart, and prospered.
1Ivaiyellaam mutinthapinpu, vanthiruntha isravaelar ellaarum yoothaavin pattanangalukkup purappattuppoy, yoothaa penyameen engum eppiraayeemilum manaaseyilungaூda unndaana silaikalai utaiththu, vikkirakath thoppukalai vetti, maetaikalaiyum peedangalaiyum itiththu, avaikalaiyellaam thakarththuppottarkal; pinpu Israelpuththirar ellaarum avaravar thangal oorkalilirukkira thangal kaanniyaatchikkuth thirumpinaarkal.Now when all this was finished, all Israel that were present went out to the cities of Judah, and brake the images in pieces, and cut down the groves, and threw down the high places and the altars out of all Judah and Benjamin, in Ephraim also and Manasseh, until they had utterly destroyed them all. Then all the children of Israel returned, every man to his possession, into their own cities.
2Esekkiyaa aasaariyar laeviyarutaiya vakuppukalai avarkal varisaikalinpatiyaeyum avaravarai avarkal ooliyaththinpatiyaeyum thittappaduththi, aasaariyaraiyum laeviyaraiyum, sarvaangathakanapalikalaiyum samaathaanapalikalaiyum seluththavum, karththarutaiya paalayaththin vaasalkalil ooliyanjaெythu thuthiththu sthoththirikkavum olunguppaduththinaan.And Hezekiah appointed the courses of the priests and the Levites after their courses, every man according to his service, the priests and Levites for burnt offerings and for peace offerings, to minister, and to give thanks, and to praise in the gates of the tents of the LORD.
3Raajaa karththarutaiya niyaayappiramaanaththil eluthiyirukkirapatiyae anthisanthikalil seluththavaenntiya sarvaangathanapalikalukkum, oyvunaatkalilum maathappirappukalilum panntikaikalilum seluththavaenntiya sarvaanga thakanapalikalukkum than aasthiyiliruntheduththuth than pangaik koduththaana.He appointed also the king's portion of his substance for the burnt offerings, to wit, for the morning and evening burnt offerings, and the burnt offerings for the sabbaths, and for the new moons, and for the set feasts, as it is written in the law of the LORD.
4Aasaariyarum laeviyarum karththarutaiya niyaayappiramaanaththai ursaakamaayk kaikkollumpati avarkalukkuriya paakaththaik kodukka janangalukkum erusalaemin kutikalukkum kattalaiyittan.Moreover he commanded the people that dwelt in Jerusalem to give the portion of the priests and the Levites, that they might be encouraged in the law of the LORD.
5Intha vaarththai pirasiththamaanapothu, Israel puththirar thaaniyaththilum, thiraatcharasaththilum, ennnneyilum, thaenilum, nilaththin ellaa varaththilum mutharpalankalai thiralaakakkonnduvanthu, sakalaththilum thasamapaakaththaip paripooranamaayk koduththaarkal.And as soon as the commandment came abroad, the children of Israel brought in abundance the firstfruits of corn, wine, and oil, and honey, and of all the increase of the field; and the tithe of all things brought they in abundantly.
6Yoothaavin pattanangalil kutiyiruntha Israel puththirarum, yoothaapuththirarum, maadukalilum aadukalilum thasamapaakaththaiyum, thangal thaevanaakiya karththarukkup Parisuththampannnappattavaikalil thasamapaakaththaiyum konnduvanthu kuviyal kuviyalaaka vaiththaarkal.And concerning the children of Israel and Judah, that dwelt in the cities of Judah, they also brought in the tithe of oxen and sheep, and the tithe of holy things which were consecrated unto the LORD their God, and laid them by heaps.
7Moontam maathaththil kuviyal seyyaththodangi aelaam maathaththil mutiththaarkal.In the third month they began to lay the foundation of the heaps, and finished them in the seventh month.
8Esekkiyaavum pirapukkalum vanthu, anthak kuviyalkalaik kaanumpothu, karththarukku sthoththiranjaெluththi, avarutaiya janamaakiya isravaelaip pukalnthaarkal.And when Hezekiah and the princes came and saw the heaps, they blessed the LORD, and his people Israel.
9Anthak kuviyalkalaik kuriththu esekkiyaa aasaariyaraiyum laeviyaraiyum visaariththapothu,Then Hezekiah questioned with the priests and the Levites concerning the heaps.
10Saathokkin santhathiyaanaakiya asariyaa ennum pirathaana aasaariyan avanai Nnokki: inthak kaannikkaiyaik karththarutaiya aalayaththirkuk konnduvarath thodanginathumuthal naangal saappittuth thirpthiyatainthom; innum michchamum irukkirathu; Karththar thammutaiya janaththai aaseervathiththathinaal inthath thiratchiyaana ampaaram meenthirukkirathu entan.And Azariah the chief priest of the house of Zadok answered him, and said, Since the people began to bring the offerings into the house of the LORD, we have had enough to eat, and have left plenty: for the LORD hath blessed his people; and that which is left is this great store.
11Appoluthu esekkiyaa karththarutaiya aalayaththil panndakasaalaikalai aayaththappaduththach sonnaan.Then Hezekiah commanded to prepare chambers in the house of the LORD; and they prepared them,
12Avarkal avaikalai aayaththappaduththinapinpu, avaikalilae kaannikkaikalaiyum, thasama paakaththaiyum, Parisuththampannnappattavaikalaiyum unnmaiyaay eduththuvaiththaarkal; avaikalinmael laeviyanaakiya konaniyaa thalaivanum, avan thampiyaakiya simaeyi iranndaavathumaayirunthaan.And brought in the offerings and the tithes and the dedicated things faithfully: over which Cononiah the Levite was ruler, and Shimei his brother was the next.
13Raajaavaakiya esekkiyaavum, thaevanutaiya aalaya visaarannaikkaaranaakiya asariyaavum pannnnina kattalaiyinpatiyae, yekiyaelum, akasiyaavum, naakaaththum, aasakaelum, yerimoththum, yosapaaththum, aeliyaelum, ismakiyaavum, maakaaththum, penaayaavum, konaniyaavin geelum avan thampiyaakiya simaeyiyin geelum visaarippukkaararaayirunthaarkal.And Jehiel, and Azaziah, and Nahath, and Asahel, and Jerimoth, and Jozabad, and Eliel, and Ismachiah, and Mahath, and Benaiah, were overseers under the hand of Cononiah and Shimei his brother, at the commandment of Hezekiah the king, and Azariah the ruler of the house of God.
14Kilakku vaasalaik kaakkira imnaavin kumaaranaakiya korae ennum laeviyan, karththarukkuch seluththappatta kaannikkaikalaiyum makaa Parisuththamaanavaikalaiyum pangidumpatikku, thaevanukkuch seluththum ursaakak kaannikkaikalmael athikaariyaayirunthaan.And Kore the son of Imnah the Levite, the porter toward the east, was over the freewill offerings of God, to distribute the oblations of the LORD, and the most holy things.
15Avanutaiya kaikku uthaviyaaka aasaariyarin pattanangalil vakuppukalinpatiyirukkira thangal sakothararilae periyavanukkum siriyavanukkum sarisamaanamaayk kodukkumpatikku, unnmaiyullavarkalaaka ennnappatta aethaenum, minyameenum, yesuvaavum, semaayaavum, amariyaavum, sekkaniyaavum aerpaduththappattarkal.And next him were Eden, and Miniamin, and Jeshua, and Shemaiah, Amariah, and Shecaniah, in the cities of the priests, in their set office, to give to their brethren by courses, as well to the great as to the small:
16Vamsa attavannaikalil eluthappatta moontu vayathumuthal, atharku maerpatta aannpillaikalaith thavira, karththarutaiya aalayaththirkul piravaesikkira avaravarukkum thangal vakuppukalinpatiyae, thangal muraikalilae thaangal seykira thangal pannivitaikkuththakkathaay anuthina pati kodukkappattathu.Beside their genealogy of males, from three years old and upward, even unto every one that entereth into the house of the LORD, his daily portion for their service in their charges according to their courses;
17Thangal pithaakkalin vamsa attavannaikalil eluthappatta thangal vakuppukalinpatiyae thangal muraikalilirukkira irupathu vayathumuthal, atharku maerpatta aasaariyarukkum, laeviyarukkum,Both to the genealogy of the priests by the house of their fathers, and the Levites from twenty years old and upward, in their charges by their courses;
18Avarkalutaiya ellaak koottaththin attavannaiyilum eluthappatta avarkalutaiya ellaak kulanthaikalukkum, manaivikalukkum, kumaararukkum, kumaaraththikalukkum pangu koduththaarkal; avarkal Parisuththamaanathai unnmaiyinpati Parisuththamaay visaariththaarkal.And to the genealogy of all their little ones, their wives, and their sons, and their daughters, through all the congregation: for in their set office they sanctified themselves in holiness:
19Aasaariyaril ellaa aannpillaikalukkum laeviyarukkullae attavannaiyil eluthappattavarkal ellaarukkum patikodukka, aasaariyarutaiya ovvoru pattanaththukkaduththa velinilangalilum aaron puththiraril paerpaeraakak kurikkappatta manushar irunthaarkal.Also of the sons of Aaron the priests, which were in the fields of the suburbs of their cities, in every several city, the men that were expressed by name, to give portions to all the males among the priests, and to all that were reckoned by genealogies among the Levites.
20Inthappirakaaramaaka esekkiyaa yoothaavengum nadappiththu, than thaevanaakiya karththarukku munpaaka nanmaiyum semmaiyum unnmaiyumaanathaich seythaan.And thus did Hezekiah throughout all Judah, and wrought that which was good and right and truth before the LORD his God.
21Avan thaevanutaiya aalayaththinvaelaiyilum, than thaevanaith thaedumpatikku niyaayappiramaanaththirkum karpanaikkum aduththa kaariyaththilum ennaseyyath thodanginaano, athaiyellaam than mulu iruthayaththodum seythu siththipettaாn.And in every work that he began in the service of the house of God, and in the law, and in the commandments, to seek his God, he did it with all his heart, and prospered.