1மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்துவருஷம் எருசலேமில் அரசாண்டான்.Manasseh was twelve years old when he began to reign, and he reigned fifty and five years in Jerusalem:
2கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.But did that which was evil in the sight of the LORD, like unto the abominations of the heathen, whom the LORD had cast out before the children of Israel.
3அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் சேனையையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளைச் சேவித்து,For he built again the high places which Hezekiah his father had broken down, and he reared up altars for Baalim, and made groves, and worshipped all the host of heaven, and served them.
4எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று கர்த்தர் சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி,Also he built altars in the house of the LORD, whereof the LORD had said, In Jerusalem shall my name be for ever.
5கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.And he built altars for all the host of heaven in the two courts of the house of the LORD.
6அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான்.And he caused his children to pass through the fire in the valley of the son of Hinnom: also he observed times, and used enchantments, and used witchcraft, and dealt with a familiar spirit, and with wizards: he wrought much evil in the sight of the LORD, to provoke him to anger.
7இந்த ஆலயத்திலும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்றும்,And he set a carved image, the idol which he had made, in the house of God, of which God had said to David and to Solomon his son, In this house, and in Jerusalem, which I have chosen before all the tribes of Israel, will I put my name for ever:
8நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்.Neither will I any more remove the foot of Israel from out of the land which I have appointed for your fathers; so that they will take heed to do all that I have commanded them, according to the whole law and the statutes and the ordinances by the hand of Moses.
9அப்படியே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப்பண்ணினான்.So Manasseh made Judah and the inhabitants of Jerusalem to err, and to do worse than the heathen, whom the LORD had destroyed before the children of Israel.
10கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்.And the LORD spake to Manasseh, and to his people: but they would not hearken.
11ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.Wherefore the LORD brought upon them the captains of the host of the king of Assyria, which took Manasseh among the thorns, and bound him with fetters, and carried him to Babylon.
12இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக்கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்குமுன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.And when he was in affliction, he besought the LORD his God, and humbled himself greatly before the God of his fathers,
13அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.And prayed unto him: and he was intreated of him, and heard his supplication, and brought him again to Jerusalem into his kingdom. Then Manasseh knew that the LORD he was God.
14பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்குதொடங்கி மீன்வாசல்மட்டும் கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தலைவரை வைத்து,Now after this he built a wall without the city of David, on the west side of Gihon, in the valley, even to the entering in at the fish gate, and compassed about Ophel, and raised it up a very great height, and put captains of war in all the fenced cities of Judah.
15கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லா பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப்புறம்பாகப் போடுவித்து,And he took away the strange gods, and the idol out of the house of the LORD, and all the altars that he had built in the mount of the house of the LORD, and in Jerusalem, and cast them out of the city.
16கர்த்தருடைய பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதின்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.And he repaired the altar of the LORD, and sacrificed thereon peace offerings and thank offerings, and commanded Judah to serve the LORD God of Israel.
17ஆகிலும் ஜனங்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; என்றாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள்.Nevertheless the people did sacrifice still in the high places, yet unto the LORD their God only.
18மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப்பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.Now the rest of the acts of Manasseh, and his prayer unto his God, and the words of the seers that spake to him in the name of the LORD God of Israel, behold, they are written in the book of the kings of Israel.
19அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்குமுன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது.His prayer also, and how God was intreated of him, and all his sins, and his trespass, and the places wherein he built high places, and set up groves and graven images, before he was humbled: behold, they are written among the sayings of the seers.
20மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆமோன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.So Manasseh slept with his fathers, and they buried him in his own house: and Amon his son reigned in his stead.
21ஆமோன் ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.Amon was two and twenty years old when he began to reign, and reigned two years in Jerusalem.
22அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான் தன் தகப்பனாகிய மனாசே பண்ணுவித்திருந்த விக்கிரகங்களுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளைச் சேவித்தான்.But he did that which was evil in the sight of the LORD, as did Manasseh his father: for Amon sacrificed unto all the carved images which Manasseh his father had made, and served them;
23தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான்.And humbled not himself before the LORD, as Manasseh his father had humbled himself; but Amon trespassed more and more.
24அவன் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் அரமனையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.And his servants conspired against him, and slew him in his own house.
25அப்பொழுது தேசத்து ஜனங்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபாண்ணின யாவரையும் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.But the people of the land slew all them that had conspired against king Amon; and the people of the land made Josiah his son king in his stead.
1Manaase raajaavaakirapothu panniranndu vayathaayirunthu, aimpaththainthuvarusham erusalaemil arasaanndaan.Manasseh was twelve years old when he began to reign, and he reigned fifty and five years in Jerusalem:
2Karththar Israel puththirarukku munpaakath thuraththina jaathikalutaiya aruvaruppukalinpatiyae, avan karththarin paarvaikkup pollaappaanathaich seythaan.But did that which was evil in the sight of the LORD, like unto the abominations of the heathen, whom the LORD had cast out before the children of Israel.
3Avan than thakappanaakiya esekkiyaa thakarththuppotta maetaikalaith thirumpavum katti, paakaalkalukkup palipeedangalai eduppiththu, vikkirakaththoppukalai unndaakki, vaanaththin senaiyaiyellaam panninthukonndu, avaikalaich seviththu,For he built again the high places which Hezekiah his father had broken down, and he reared up altars for Baalim, and made groves, and worshipped all the host of heaven, and served them.
4Erusalaemilae en naamam ententaikkum vilangum entu Karththar sonna thammutaiya aalayaththilae palipeedangalaik katti,Also he built altars in the house of the LORD, whereof the LORD had said, In Jerusalem shall my name be for ever.
5Karththarutaiya aalayaththin iranndu piraakaarangalilum vaanaththin senaikalukkellaam palipeedangalaik kattinaan.And he built altars for all the host of heaven in the two courts of the house of the LORD.
6Avan innom kumaararin pallaththaakkilae than kumaararaith theemithikkappannnni, naalum nimiththamum paarththu, pillisooniyangalai anusariththu, anjanam paarkkiravarkalaiyum kurisollukiravarkalaiyum vaiththu, karththarukkuk kopamunndaaka avar paarvaikku mikuthiyum pollaappaanathaich seythaan.And he caused his children to pass through the fire in the valley of the son of Hinnom: also he observed times, and used enchantments, and used witchcraft, and dealt with a familiar spirit, and with wizards: he wrought much evil in the sight of the LORD, to provoke him to anger.
7Intha aalayaththilum, Israel koththirangalilellaam naan therinthukonnda erusalaemilum, en naamaththai ententaikkum vilangappannnuvaen entum,And he set a carved image, the idol which he had made, in the house of God, of which God had said to David and to Solomon his son, In this house, and in Jerusalem, which I have chosen before all the tribes of Israel, will I put my name for ever:
8Naan Mosesyaikkonndu isravaelukkuk koduththa sakala niyaayappiramaanaththirkum kattalaikalukkum niyaayangalukkum oththapatiyae avarkalukku naan karpiththavaikalaiyellaam avarkal seyyach saavathaanamaay irunthaarkalaeyaakil, naan ini avarkal kaalai avarkal pithaakkalukku nilaippaduththivaiththa thaesaththilirunthu vilakappannnuvathillaiyentum, Dhevan thaaveethodum avan kumaaranaakiya saalomonodum solliyiruntha thaevanutaiya aalayaththilthaanae, avan thaan pannnuviththa vikkirakamaakiya silaiyai sthaapiththaan.Neither will I any more remove the foot of Israel from out of the land which I have appointed for your fathers; so that they will take heed to do all that I have commanded them, according to the whole law and the statutes and the ordinances by the hand of Moses.
9Appatiyae Karththar Israel puththirarukku munpaaka aliththa jaathikalaippaarkkilum, yoothaavum erusalaemin kutikalum pollaappuch seyyaththakkathaay, manaase avarkalai valithappippokappannnninaan.So Manasseh made Judah and the inhabitants of Jerusalem to err, and to do worse than the heathen, whom the LORD had destroyed before the children of Israel.
10Karththar manaaseyodum avanutaiya janaththodum paesinapothilum, avarkal kavanikkaathaeponaarkal.And the LORD spake to Manasseh, and to his people: but they would not hearken.
11Aakaiyaal Karththar aseeriyaa raajaavin senaapathikalai avarkalmael varappannnninaar; avarkal manaaseyai mutchedikalil pitiththu, iranndu vennkalachchangiliyaal avanaik kattip paapilonukkuk konnduponaarkal.Wherefore the LORD brought upon them the captains of the host of the king of Assyria, which took Manasseh among the thorns, and bound him with fetters, and carried him to Babylon.
12Ippati avan nerukkappadukaiyil, than thaevanaakiya karththarai Nnokkikkenji, than pithaakkalin thaevanukkumunpaaka mikavum thannaith thaalththinaan.And when he was in affliction, he besought the LORD his God, and humbled himself greatly before the God of his fathers,
13Avarai Nnokki, avan vinnnappampannnnikkonntirukkirapothu, avar avan kenjuthalukku irangi, avan jepaththaik kaettu, avanaith thirumpa erusalaemilulla thannutaiya raajyaththirku varappannnninaar; karththarae Dhevan entu appoluthu manaase arinthaan.And prayed unto him: and he was intreated of him, and heard his supplication, and brought him again to Jerusalem into his kingdom. Then Manasseh knew that the LORD he was God.
14Pinpu avan Davidtaiya nakaraththin veli alangaththaik geeyonukku maerkaeyirukkira pallaththaakkuthodangi meenvaasalmattum katti, opaelaich suttilum athai valaiththu, athai mikavum uyarththi, yoothaavilulla arannaana pattanangalilellaam iraanuvaththalaivarai vaiththu,Now after this he built a wall without the city of David, on the west side of Gihon, in the valley, even to the entering in at the fish gate, and compassed about Ophel, and raised it up a very great height, and put captains of war in all the fenced cities of Judah.
15Karththarutaiya aalayaththilirunthu anniya thaevarkalaiyum antha vikkirakaththaiyum eduththuppottu, karththarutaiya aalayamulla malaiyilum erusalaemilum thaan kattiyiruntha ellaa palipeedangalaiyum akatti, pattanaththirkuppurampaakap poduviththu,And he took away the strange gods, and the idol out of the house of the LORD, and all the altars that he had built in the mount of the house of the LORD, and in Jerusalem, and cast them out of the city.
16Karththarutaiya palipeedaththaich seppanittu, athinmael samaathaanapalikalaiyum sthoththirapalikalaiyum seluththi, isravaelin thaevanaakiya karththaraich sevikkavaenndum entu yoothaavukkuk kattalaiyittan.And he repaired the altar of the LORD, and sacrificed thereon peace offerings and thank offerings, and commanded Judah to serve the LORD God of Israel.
17Aakilum janangal innum maetaikalil paliyittuvanthaarkal; entalum thangal thaevanaakiya karththarukkente appatich seythaarkal.Nevertheless the people did sacrifice still in the high places, yet unto the LORD their God only.
18Manaaseyin matta varththamaanangalum, avan than thaevanai Nnokkippannnnina vinnnappamum, isravaelin thaevanaakiya karththarin naamaththil avanotae paesina njaanathirushtikkaararin vaarththaikalum, Israel raajaakkalin pusthakaththil eluthiyirukkirathu.Now the rest of the acts of Manasseh, and his prayer unto his God, and the words of the seers that spake to him in the name of the LORD God of Israel, behold, they are written in the book of the kings of Israel.
19Avanutaiya vinnnappamum, avan kenjuthalukkuk Karththar iranginathum, avan thannaith thaalththinatharkumunnae pannnnina avanutaiya ellaap paavamum thurokamum, avan maetaikalaik katti vikkirakath thoppukalaiyum silaikalaiyum sthaapiththa idangalum, osaayin pirapanthaththil eluthiyirukkirathu.His prayer also, and how God was intreated of him, and all his sins, and his trespass, and the places wherein he built high places, and set up groves and graven images, before he was humbled: behold, they are written among the sayings of the seers.
20Manaase than pithaakkalotae niththiraiyatainthapinpu, avanai avan veettilae adakkampannnninaarkal; avan kumaaranaakiya aamon avan sthaanaththil raajaavaanaan.So Manasseh slept with his fathers, and they buried him in his own house: and Amon his son reigned in his stead.
21Aamon raajaavaakirapothu irupaththiranndu vayathaayirunthu, iranndu varusham erusalaemil arasaanndaan.Amon was two and twenty years old when he began to reign, and reigned two years in Jerusalem.
22Avan than thakappanaakiya manaase seythathupola karththarin paarvaikkup pollaappaanathaich seythaan than thakappanaakiya manaase pannnuviththiruntha vikkirakangalukkellaam aamon paliyittu, avaikalaich seviththaan.But he did that which was evil in the sight of the LORD, as did Manasseh his father: for Amon sacrificed unto all the carved images which Manasseh his father had made, and served them;
23Than thakappanaakiya manaase thannaith thaalththikkonndathupola, intha aamon enpavan karththarukku munpaakath thannaith thaalththaamal maenmaelum akkiramam seythuvanthaan.And humbled not himself before the LORD, as Manasseh his father had humbled himself; but Amon trespassed more and more.
24Avan ooliyakkaarar avanukku virothamaayk kattuppaadupannnni, avan aramanaiyilae avanaik kontupottarkal.And his servants conspired against him, and slew him in his own house.
25Appoluthu thaesaththu janangal aamon ennum raajaavukku virothamaayk kattuppaadupaannnnina yaavaraiyum vettippottu, avan kumaaranaakiya yosiyaavai avan sthaanaththil raajaavaakkinaarkal.But the people of the land slew all them that had conspired against king Amon; and the people of the land made Josiah his son king in his stead.