1பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான், அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்.And it came to pass after this, that David inquired of the LORD, saying, Shall I go up into any of the cities of Judah? And the LORD said unto him, Go up. And David said, Whither shall I go up? And he said, Unto Hebron.
2அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊரானான அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்திற்குப் போனான்.So David went up thither, and his two wives also, Ahinoam the Jezreelitess, and Abigail Nabal's wife the Carmelite.
3அன்றியும் தன்னோடிருந்த மனுஷரையும் அவர்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனின் சுற்றூர்களிலே குடியேறினார்கள்.And his men that were with him did David bring up, every man with his household: and they dwelt in the cities of Hebron.
4அப்பொழுது யூதாவின் மனுஷர் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷர் சவுலை அடக்கம்பண்ணினவர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்த போது,And the men of Judah came, and there they anointed David king over the house of Judah. And they told David, saying, That the men of Jabeshgilead were they that buried Saul.
5தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷரிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி, நீங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து அவரை அடக்கம்பண்ணினபடியினலே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.And David sent messengers unto the men of Jabeshgilead, and said unto them, Blessed be ye of the LORD, that ye have showed this kindness unto your lord, even unto Saul, and have buried him.
6கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், நானும் இந்த நன்மைக்குத்தக்கதாக உங்களை நடத்துவேன்.And now the LORD show kindness and truth unto you: and I also will requite you this kindness, because ye have done this thing.
7இப்போதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.Therefore now let your hands be strengthened, and be ye valiant: for your master Saul is dead, and also the house of Judah have anointed me king over them.
8சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீக்கு அழைத்துக்கொண்டுபோய்,But Abner the son of Ner, captain of Saul's host, took Ishbosheth the son of Saul, and brought him over to Mahanaim;
9அவனைக் கீலேயாத்தின்மேலும் அஷூரியர்மேலும், யெஸ்ரயேலின்மேலும், எப்பிராயீமின்மேலும், பென்யமீனின்மேலும், இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாகிக்கினான்.And made him king over Gilead, and over the Ashurites, and over Jezreel, and over Ephraim, and over Benjamin, and over all Israel.
10சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; அவன் இரண்டு வருடம் ராஜ்யபாரம்பண்ணினான்; யூதா கோத்திரத்தார்மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள்.Ishbosheth Saul's son was forty years old when he began to reign over Israel, and reigned two years. But the house of Judah followed David.
11தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம்.And the time that David was king in Hebron over the house of Judah was seven years and six months.
12நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் சேவகரைக் கூட்டிக்கொண்டு மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப் போனான்.And Abner the son of Ner, and the servants of Ishbosheth the son of Saul, went out from Mahanaim to Gibeon.
13அப்பொழுது செருயாவின் குமாரனாகிய யோவாபும் தாவீதின் சேவகரும் புறப்பட்டுப்போய் கிபியோனின் குளத்தண்டையில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டு குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும் குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள்.And Joab the son of Zeruiah, and the servants of David, went out, and met together by the pool of Gibeon: and they sat down, the one on the one side of the pool, and the other on the other side of the pool.
14அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர் எழுந்து நமக்கு முன்பாகச் சிலம்பம் பண்ணட்டும் என்றான்; அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து அப்படிச் செய்யட்டும் என்றான்.And Abner said to Joab, Let the young men now arise, and play before us. And Joab said, Let them arise.
15அப்பொழுது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும், தாவீதுடைய சேவகரிலே பன்னிரண்டுபேரும் எழுந்து ஒரு பக்கமாய் போய்,Then there arose and went over by number twelve of Benjamin, which pertained to Ishbosheth the son of Saul, and twelve of the servants of David.
16ஒருவர் தலையை ஒருவர் பிடித்து ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத் அசூரிம் என்னப்பட்டது.And they caught every one his fellow by the head, and thrust his sword in his fellow's side; so they fell down together: wherefore that place was called Helkathhazzurim, which is in Gibeon.
17அன்றையதினம் மிகவும் கடினமான யுத்தமாகி அப்பேனரும் இஸ்ரவேல் மனுஷரும் தாவீதின் சேவகரால் முறிய அடிக்கப்பட்டார்கள்.And there was a very sore battle that day; and Abner was beaten, and the men of Israel, before the servants of David.
18அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாயும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான்.And there were three sons of Zeruiah there, Joab, and Abishai, and Asahel: and Asahel was as light of foot as a wild roe.
19அவன் அப்னேரைப் பின் தொடர்ந்து வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும் அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.And Asahel pursued after Abner; and in going he turned not to the right hand nor to the left from following Abner.
20அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான்; அவன்: நான்தான் என்றான்,Then Abner looked behind him, and said, Art thou Asahel? And he answered, I am.
21அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலது பக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி வாலிபரில் ஒருவனைப் பிடித்து அவனை உரிந்துகொள் என்றான் ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.And Abner said to him, Turn thee aside to thy right hand or to thy left, and lay thee hold on one of the young men, and take thee his armor. But Asahel would not turn aside from following of him.
22பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ, நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்? பிற்பாடு உன் சகோதரனாகிய யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.And Abner said again to Asahel, Turn thee aside from following me: wherefore should I smite thee to the ground? how then should I hold up my face to Joab thy brother?
23ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியினால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற அலகினால் அவன் வயிற்றிலே குத்தினான்; ஈட்டி முதுகிலே புறப்பட்டது அவன் அங்கேதானே விழுந்து செத்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திலே வந்தவர்களெல்லாரும் தரித்து நின்றார்கள்.Howbeit he refused to turn aside: wherefore Abner with the hinder end of the spear smote him under the fifth rib, that the spear came out behind him; and he fell down there, and died in the same place: and it came to pass, that as many as came to the place where Asahel fell down and died stood still.
24யோவாபும் அபிசாயும் சூரியன் அஸ்தமிக்குமட்டும் அப்னேரைப் பின் தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்தர வழிக்கு அருகான கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுமட்டும் வந்தார்கள்.Joab also and Abishai pursued after Abner: and the sun went down when they were come to the hill of Ammah, that lieth before Giah by the way of the wilderness of Gibeon.
25அப்பொழுது அப்னேரைப் பின் சென்ற பென்யமீன் புத்திரர் ஒரே படையாகக் கூடி ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.And the children of Benjamin gathered themselves together after Abner, and became one troop, and stood on the top of an hill.
26அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு: பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ, தங்கள் சகோதரரை விட்டுப் பின்வாங்கும்படிக்கு எந்த மட்டும் ஜனங்களுக்குச் சொல்லாதிருப்பீர் என்றான்.Then Abner called to Joab, and said, Shall the sword devour for ever? knowest thou not that it will be bitterness in the latter end? how long shall it be then, ere thou bid the people return from following their brethren?
27அதற்கு யோவாப்: இன்று காலமே நீர் பேசாதிருந்தீரானால் ஜனங்கள் அவரவர் தங்கள் சகோதரரைப் பின்தொடராமல் அப்பொழுதே திரும்பிவிடுவார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.And Joab said, As God liveth, unless thou hadst spoken, surely then in the morning the people had gone up every one from following his brother.
28யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் இஸ்ரவேலைத் தொடராமலும் யுத்தம்பண்ணாமலும் நின்றுவிட்டார்கள்.So Joab blew a trumpet, and all the people stood still, and pursued after Israel no more, neither fought they any more.
29அன்று ராமுழுதும் அப்னேரும் அவன் மனுஷரும் அந்தரவெளி வழியாய்ப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோனை உருவ நடந்து தாண்டி, மகனாயீமுக்குப் போனார்கள்.And Abner and his men walked all that night through the plain, and passed over Jordan, and went through all Bithron, and they came to Mahanaim.
30யோவாப் அப்னேரைத் தொடராமல் ஜனங்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் சேவகரில் பத்தொண்பதுபேரும் ஆகசேலும் குறைந்திருந்தார்கள்.And Joab returned from following Abner: and when he had gathered all the people together, there lacked of David's servants nineteen men and Asahel.
31தாவீதின் சேகவரோ பென்யமீனரிலும் அப்னேரின் மனுஷரிலும் முந்நூற்றறுபதுபேரை மடங்கடித்தார்கள்.But the servants of David had smitten of Benjamin, and of Abner's men, so that three hundred and threescore men died.
32அவர்கள் ஆசகேலை எடுத்து பெத்லெகேமிலுள்ள அவனுடைய தகப்பன் கல்லறையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; யோவாபும் அவன் மனுஷரும் இரா முழுவதும் நடந்து, பொழுது விடியும்போது எப்ரோனிலே சேர்ந்தார்கள்.And they took up Asahel, and buried him in the sepulchre of his father, which was in Bethlehem. And Joab and his men went all night, and they came to Hebron at break of day.
1Pinpu David karththarai Nnokki: naan yoothaavin pattanangal ontilae poy irukkalaamaa entu visaariththaan, atharkuk Karththar: po entar; evvidaththirkup pokalaam entu David kaettatharku, avar: epronukkup po entar.And it came to pass after this, that David inquired of the LORD, saying, Shall I go up into any of the cities of Judah? And the LORD said unto him, Go up. And David said, Whither shall I go up? And he said, Unto Hebron.
2Appatiyae David than iranndu manaivikalaakiya yesrayael ooraanaana akinovaamodum, naapaalin manaiviyaayiruntha karmael ooraalaana apikaayilodumkooda avvidaththirkup ponaan.So David went up thither, and his two wives also, Ahinoam the Jezreelitess, and Abigail Nabal's wife the Carmelite.
3Antiyum thannotiruntha manusharaiyum avarkal kudumpangalaiyum koottikkonnduponaan; avarkal epronin suttaூrkalilae kutiyaerinaarkal.And his men that were with him did David bring up, every man with his household: and they dwelt in the cities of Hebron.
4Appoluthu yoothaavin manushar vanthu, angae thaaveethai yoothaa vamsaththaarinmael raajaavaaka apishaekampannnninaarkal. Geelaeyaaththaesaththu yaapaesin manushar savulai adakkampannnninavarkal entu avarkal Davidkku ariviththa pothu,And the men of Judah came, and there they anointed David king over the house of Judah. And they told David, saying, That the men of Jabeshgilead were they that buried Saul.
5David geelaeyaaththaesaththu yaapaesin manusharidaththil sthaanaapathikalai anuppi, neengal ungal aanndavanaakiya savulukku inthath thayavaich seythu avarai adakkampannnninapatiyinalae Karththar ungalai aaseervathippaaraaka.And David sent messengers unto the men of Jabeshgilead, and said unto them, Blessed be ye of the LORD, that ye have showed this kindness unto your lord, even unto Saul, and have buried him.
6Karththar ungalaik kirupaiyum unnmaiyumaay nadaththuvaaraaka; neengal inthak kaariyaththaich seythapatiyinaal, naanum intha nanmaikkuththakkathaaka ungalai nadaththuvaen.And now the LORD show kindness and truth unto you: and I also will requite you this kindness, because ye have done this thing.
7Ippothum neengal ungal kaikalaith thidappaduththikkonndu nalla sevakaraayirungal; ungal aanndavanaakiya savul mariththapinpu, yoothaa vamsaththaar ennaith thangalmael raajaavaaka apishaekampannnninaarkal entu avarkalukkuch sollachchaொnnaan.Therefore now let your hands be strengthened, and be ye valiant: for your master Saul is dead, and also the house of Judah have anointed me king over them.
8Savulin pataiththalaivanaana naerin kumaaranaakiya apnaer savulin kumaaranaakiya isposeththai makanaayeekku alaiththukkonndupoy,But Abner the son of Ner, captain of Saul's host, took Ishbosheth the son of Saul, and brought him over to Mahanaim;
9Avanaik geelaeyaaththinmaelum ashooriyarmaelum, yesrayaelinmaelum, eppiraayeeminmaelum, penyameeninmaelum, isravaelanaiththin maelum raajaavaakikkinaan.And made him king over Gilead, and over the Ashurites, and over Jezreel, and over Ephraim, and over Benjamin, and over all Israel.
10Savulin kumaaranaakiya isposeth isravaelinmael raajaavaakirapothu naarpathu vayathaayirunthaan; avan iranndu varudam raajyapaarampannnninaan; yoothaa koththiraththaarmaaththiram thaaveethaip pinpattinaarkal.Ishbosheth Saul's son was forty years old when he began to reign over Israel, and reigned two years. But the house of Judah followed David.
11David epronilae yoothaa koththiraththinmael raajaavaayiruntha naatkalin ilakkam aelu varushamum aaraு maathamumaam.And the time that David was king in Hebron over the house of Judah was seven years and six months.
12Naerin kumaaranaakiya apnaer savulin kumaaranaakiya isposeththin sevakaraik koottikkonndu makanaayeemilirunthu kipiyonukkup purappattup ponaan.And Abner the son of Ner, and the servants of Ishbosheth the son of Saul, went out from Mahanaim to Gibeon.
13Appoluthu seruyaavin kumaaranaakiya yovaapum thaaveethin sevakarum purappattuppoy kipiyonin kulaththanntaiyil oruvarukkoruvar ethirppattu kulaththirku anthappakkaththil avarkalum kulaththirku inthappakkaththil ivarkalum iranginaarkal.And Joab the son of Zeruiah, and the servants of David, went out, and met together by the pool of Gibeon: and they sat down, the one on the one side of the pool, and the other on the other side of the pool.
14Apnaer yovaapai Nnokki: vaalipar elunthu namakku munpaakach silampam pannnattum entan; atharku yovaap: avarkal elunthu appatich seyyattum entan.And Abner said to Joab, Let the young men now arise, and play before us. And Joab said, Let them arise.
15Appoluthu savulin kumaaranaakiya isposeththin pakkaththirkup penyameen manusharil panniranndupaerum, Davidtaiya sevakarilae panniranndupaerum elunthu oru pakkamaay poy,Then there arose and went over by number twelve of Benjamin, which pertained to Ishbosheth the son of Saul, and twelve of the servants of David.
16Oruvar thalaiyai oruvar pitiththu oruvarutaiya vilaavilae oruvar pattayaththinaalae kuththi orumikka vilunthaarkal; athinaalae kipiyonilirukkira antha sthalam elkaath asoorim ennappattathu.And they caught every one his fellow by the head, and thrust his sword in his fellow's side; so they fell down together: wherefore that place was called Helkathhazzurim, which is in Gibeon.
17Antaiyathinam mikavum katinamaana yuththamaaki appaenarum Israel manusharum thaaveethin sevakaraal muriya atikkappattarkal.And there was a very sore battle that day; and Abner was beaten, and the men of Israel, before the servants of David.
18Angae seruyaavin moontu kumaararaakiya yovaayum apisaayum aasakaelum irunthaarkal; aasakael veliyilirukkira kalaimaankalil ontaippola vaekamaay odukiravanaayirunthaan.And there were three sons of Zeruiah there, Joab, and Abishai, and Asahel: and Asahel was as light of foot as a wild roe.
19Avan apnaeraip pin thodarnthu valathupuraththilaakilum idathupuraththilaakilum avanaivittu vilakaamal thuraththikkonnduponaan.And Asahel pursued after Abner; and in going he turned not to the right hand nor to the left from following Abner.
20Apnaer thirumpip paarththu: nee aasakael allavaa entan; avan: naanthaan entan,Then Abner looked behind him, and said, Art thou Asahel? And he answered, I am.
21Appoluthu apnaer avanai Nnokki: nee valathu pakkaththirkaakilum idathupakkaththirkaakilum vilaki vaaliparil oruvanaip pitiththu avanai urinthukol entan aasakaelo vidamaattaேn entu thodarnthuponaan.And Abner said to him, Turn thee aside to thy right hand or to thy left, and lay thee hold on one of the young men, and take thee his armor. But Asahel would not turn aside from following of him.
22Pinnum apnaer aasakaelai Nnokki: nee ennai vittuppo, naan unnaith tharaiyotae aen vettavaenndum? Pirpaadu un sakotharanaakiya yovaapin mukaththilae eppati vilippaen entan.And Abner said again to Asahel, Turn thee aside from following me: wherefore should I smite thee to the ground? how then should I hold up my face to Joab thy brother?
23Aanaalum avan vilakippokamaattaேn entapatiyinaal, apnaer avanai eettiyin pinpura alakinaal avan vayittilae kuththinaan; eetti muthukilae purappattathu avan angaethaanae vilunthu seththaan; aasakael vilunthukidakkira idaththilae vanthavarkalellaarum thariththu nintarkal.Howbeit he refused to turn aside: wherefore Abner with the hinder end of the spear smote him under the fifth rib, that the spear came out behind him; and he fell down there, and died in the same place: and it came to pass, that as many as came to the place where Asahel fell down and died stood still.
24Yovaapum apisaayum sooriyan asthamikkumattum apnaeraip pin thodarnthaarkal; kipiyon vanaanthara valikku arukaana geeyaavukku ethirae irukkira ammaa maedumattum vanthaarkal.Joab also and Abishai pursued after Abner: and the sun went down when they were come to the hill of Ammah, that lieth before Giah by the way of the wilderness of Gibeon.
25Appoluthu apnaeraip pin senta penyameen puththirar orae pataiyaakak kooti oru malaiyin uchchiyilae nintarkal.And the children of Benjamin gathered themselves together after Abner, and became one troop, and stood on the top of an hill.
26Appoluthu apnaer yovaapaip paarththuk kooppittu: pattayam eppothum sangaaram pannnnikkonntirukkavaenndumo, mutivilae kasappunndaakum entu ariyeero, thangal sakothararai vittup pinvaangumpatikku entha mattum janangalukkuch sollaathiruppeer entan.Then Abner called to Joab, and said, Shall the sword devour for ever? knowest thou not that it will be bitterness in the latter end? how long shall it be then, ere thou bid the people return from following their brethren?
27Atharku yovaap: intu kaalamae neer paesaathiruntheeraanaal janangal avaravar thangal sakothararaip pinthodaraamal appoluthae thirumpividuvaarkal entu thaevanutaiya jeevanaikkonndu sollukiraேn entan.And Joab said, As God liveth, unless thou hadst spoken, surely then in the morning the people had gone up every one from following his brother.
28Yovaap ekkaalam oothinaan; appoluthu janangal ellaarum isravaelaith thodaraamalum yuththampannnnaamalum nintuvittarkal.So Joab blew a trumpet, and all the people stood still, and pursued after Israel no more, neither fought they any more.
29Antu raamuluthum apnaerum avan manusharum antharaveli valiyaayp poy, yorthaanaik kadanthu, pithronai uruva nadanthu thaannti, makanaayeemukkup ponaarkal.And Abner and his men walked all that night through the plain, and passed over Jordan, and went through all Bithron, and they came to Mahanaim.
30Yovaap apnaeraith thodaraamal janangalaiyellaam kootivarachcheythaan; thaaveethin sevakaril paththonnpathupaerum aakaselum kurainthirunthaarkal.And Joab returned from following Abner: and when he had gathered all the people together, there lacked of David's servants nineteen men and Asahel.
31Thaaveethin sekavaro penyameenarilum apnaerin manusharilum munnoottaraுpathupaerai madangatiththaarkal.But the servants of David had smitten of Benjamin, and of Abner's men, so that three hundred and threescore men died.
32Avarkal aasakaelai eduththu pethlekaemilulla avanutaiya thakappan kallaraiyilae avanai adakkampannnninaarkal; yovaapum avan manusharum iraa muluvathum nadanthu, poluthu vitiyumpothu epronilae sernthaarkal.And they took up Asahel, and buried him in the sepulchre of his father, which was in Bethlehem. And Joab and his men went all night, and they came to Hebron at break of day.