1நாங்கள் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருஷத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாந்தேதியாகிய அன்றே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை அவ்விடத்துக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது நகரம் அழிக்கப்பட்டுப் பதினாலு வருஷமாயிற்று.In the five and twentieth year of our captivity, in the beginning of the year, in the tenth day of the month, in the fourteenth year after that the city was smitten, in the selfsame day the hand of the LORD was upon me, and brought me thither.
2தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்கிறதுபோல் காணப்பட்டது.In the visions of God brought he me into the land of Israel, and set me upon a very high mountain, by which was as the frame of a city on the south.
3அவர் என்னை அங்கே கொண்டுபோனார்; இதோ, அங்கே ஒரு புருஷன் இருந்தார்; அவருடைய தோற்றம் வெண்கலமாயிருந்தது; அவர் கையில் சணற்கயிறும் ஒரு அளவுகோலுமிருந்தது; அவர் வாசலிலே நின்றார்.And he brought me thither, and, behold, there was a man, whose appearance was like the appearance of brass, with a line of flax in his hand, and a measuring reed; and he stood in the gate.
4அந்தப் புருஷன் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக் கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின் மேலும் உன் மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிக்கும்படி நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி என்றார்.And the man said unto me, Son of man, behold with thine eyes, and hear with thine ears, and set thine heart upon all that I shall shew thee; for to the intent that I might shew them unto thee art thou brought hither: declare all that thou seest to the house of Israel.
5இதோ, ஆலயத்துக்குப் புறம்பே சுற்றிலும் ஒரு மதில் இருந்தது; அந்தப் புருஷன் கையிலே ஆறுமுழ நீழமான ஒரு அளவுகோல் இருந்தது; ஒவ்வொரு முழமும் நமது கைமுழத்திலும் நாலுவிரற்கடை அதிகமானது; அவர் அந்த மதிலை அளந்தார்; அகலம் ஒரு கோலாகவும் உயரம் ஒரு கோலாகவும் இருந்தது.And behold a wall on the outside of the house round about, and in the man's hand a measuring reed of six cubits long by the cubit and an hand breadth: so he measured the breadth of the building, one reed; and the height, one reed.
6பின்பு அவர் கிழக்குமுக வாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒருகோல் அகலமாகவும் அளந்தார்.Then came he unto the gate which looketh toward the east, and went up the stairs thereof, and measured the threshold of the gate, which was one reed broad; and the other threshold of the gate, which was one reed broad.
7ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாயிருந்தது, அறைவீடுகளுக்கு நடுவே ஐந்துமுழ இடம் விட்டிருந்தது; வாசலின் மண்டபத்தருகே உள்வாசற்படி ஒரு கோலளவாயிருந்தது.And every little chamber was one reed long, and one reed broad; and between the little chambers were five cubits; and the threshold of the gate by the porch of the gate within was one reed.
8வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.He measured also the porch of the gate within, one reed.
9பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது.Then measured he the porch of the gate, eight cubits; and the posts thereof, two cubits; and the porch of the gate was inward.
10கீழ்த்திசைக்கெதிரான வாசலின் அறைகள் இந்தப்புறத்தில் மூன்றும் அந்தப்புறத்தில் மூன்றுமாயிருந்தது, அவைகள் மூன்றுக்கும் ஒரே அளவும், இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலுமிருந்த தூணாதாரங்களுக்கு ஒரே அளவும் இருந்தது.And the little chambers of the gate eastward were three on this side, and three on that side; they three were of one measure: and the posts had one measure on this side and on that side.
11பின்பு வாசல் நடையின் அகலத்தைப் பத்துமுழமாகவும், வாசலின் நீளத்தைப் பதின்மூன்று முழமாகவும் அளந்தார்.And he measured the breadth of the entry of the gate, ten cubits; and the length of the gate, thirteen cubits.
12அறைகளுக்கு முன்னே இந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் அந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் இருந்தது; ஒவ்வொரு அறை இந்தப்புறத்தில் ஆறு முழமும் அந்தப்புறத்தில் ஆறுமுழமுமாயிருந்தது.The space also before the little chambers was one cubit on this side, and the space was one cubit on that side: and the little chambers were six cubits on this side, and six cubits on that side.
13பின்பு வாசலில் இருந்த அறையின் மெத்தையினின்று மற்ற அறையின் மெத்தைமட்டும் இருபத்தைந்துமுழமாக அளந்தார்; கதவுக்குக் கதவு நேராயிருந்தது.He measured then the gate from the roof of one little chamber to the roof of another: the breadth was five and twenty cubits, door against door.
14தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது.He made also posts of threescore cubits, even unto the post of the court round about the gate.
15பிரவேச வாசலின் முகப்புத்துவக்கி உட்புறவாசல் மண்டபமுகப்புமட்டும் ஐம்பது முழமாயிருந்தது.And from the face of the gate of the entrance unto the face of the porch of the inner gate were fifty cubits.
16வாசலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமுள்ள அறைகளுக்கும் அவைகளின் தூணாதாரங்களுக்கும் ஒடுக்கமான ஜன்னல்கள் இருந்தது; மண்டபங்களிலும் அப்படியே இருந்தது; உட்புறமாய்ச் சுற்றிலும் அந்த ஜன்னல்களும் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது.And there were narrow windows to the little chambers, and to their posts within the gate round about, and likewise to the arches: and windows were round about inward: and upon each post were palm trees.
17பின்பு என்னை வெளிப்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே அறைவீடுகளும், பிராகாரத்தின் சுற்றிலும் பதித்த தளவரிசையும் இருந்தது; அந்தத் தளவரிசையின்மேல் முப்பது அறைவீடுகள் இருந்தது.Then brought he me into the outward court, and, lo, there were chambers, and a pavement made for the court round about: thirty chambers were upon the pavement.
18வாசலுக்குப் பக்கத்திலும் வாசல்களின் நீளத்துக்கு எதிரிலுமுள்ள அந்தத் தளவரிசை தாழ்வான தளவரிசையாயிருந்தது.And the pavement by the side of the gates over against the length of the gates was the lower pavement.
19பின்பு அவர் கீழ்வாசலின் முகப்புத்துவக்கி, உட்பிராகாரத்துப் புறமுகப்புமட்டுமுள்ள விசாலத்தை அளந்தார்; அது கிழக்கும் வடக்கும் நூறுமுழமாயிருந்தது.Then he measured the breadth from the forefront of the lower gate unto the forefront of the inner court without, an hundred cubits eastward and northward.
20வெளிப்பிராகாரத்துக்கு அடுத்த வடதிசைக்கு எதிரான வாசலின் நீளத்தையும் அகலத்தையும் அளந்தார்.And the gate of the outward court that looked toward the north, he measured the length thereof, and the breadth thereof.
21அதற்கு இப்புறத்தில் மூன்று அறைகளும் அப்புறத்தில் மூன்று அறைகளும் இருந்தது; அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் முதல் வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதின் நீளம் ஐம்பது முழமும், அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.And the little chambers thereof were three on this side and three on that side; and the posts thereof and the arches thereof were after the measure of the first gate: the length thereof was fifty cubits, and the breadth five and twenty cubits.
22அதின் ஜன்னல்களும், அதின் மண்டபங்களும், அதின்மேல் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் கீழ்த்திசைக்கு எதிரான வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகளிருந்தது; அதின் மண்டபங்கள் அவைகளுக்கு முன்னாக இருந்தது.And their windows, and their arches, and their palm trees, were after the measure of the gate that looketh toward the east; and they went up unto it by seven steps; and the arches thereof were before them.
23வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உட்பிராகாரத்துக்கும் வாசல்களிருந்தது; ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறு முழமாக அளந்தார்.And the gate of the inner court was over against the gate toward the north, and toward the east; and he measured from gate to gate an hundred cubits.
24பின்பு என்னைத் தென்திசைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே தென்திசைக்கு எதிரான வாசல் இருந்த அதின் தூணாதாரங்களையும் அதின் மண்டபங்களையும் அதற்குரிய அளவின்படி அளந்தார்.After that he brought me toward the south, and behold a gate toward the south: and he measured the posts thereof and the arches thereof according to these measures.
25அந்த ஜன்னல்களுக்குச் சரியாக அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பதுமுழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.And there were windows in it and in the arches thereof round about, like those windows: the length was fifty cubits, and the breadth five and twenty cubits.
26அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகளிருந்தது; அதற்கு முன்பாக அதின்மண்டபங்களும் இருந்தது, அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இந்தப் புறத்தில் ஒன்றும் அந்தப்புறத்தில் ஒன்றுமாக இருந்தது.And there were seven steps to go up to it, and the arches thereof were before them: and it had palm trees, one on this side, and another on that side, upon the posts thereof.
27உட்பிராகாரத்துக்கும் ஒரு வாசல் தென்திசைக்கு எதிராக, இருந்தது; தென்திசையிலுள்ள ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறுமுழமாக அளந்தார்.And there was a gate in the inner court toward the south: and he measured from gate to gate toward the south an hundred cubits.
28பின்பு அவர் தெற்கு வாசலால் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாகத் தெற்கு வாசலையும் அளந்தார்.And he brought me to the inner court by the south gate: and he measured the south gate according to these measures;
29அதின் அறைகளும், அதின் தூணாதாரங்களும், அதின் மண்டபங்களும், அந்த அளவுக்குச் சரியாக இருந்தது, அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.And the little chambers thereof, and the posts thereof, and the arches thereof, according to these measures: and there were windows in it and in the arches thereof round about: it was fifty cubits long, and five and twenty cubits broad.
30இருபத்தைந்து முழ நீளமும் ஐந்துமுழ அகலமுமான மண்டபங்கள் சுற்றிலும் இருந்தது;And the arches round about were five and twenty cubits long, and five cubits broad.
31அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது.And the arches thereof were toward the utter court; and palm trees were upon the posts thereof: and the going up to it had eight steps.
32பின்பு அவர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.And he brought me into the inner court toward the east: and he measured the gate according to these measures.
33அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அந்த அளவுகளுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.And the little chambers thereof, and the posts thereof, and the arches thereof, were according to these measures: and there were windows therein and in the arches thereof round about: it was fifty cubits long, and five and twenty cubits broad.
34அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப் படிகள் இருந்தது.And the arches thereof were toward the outward court; and palm trees were upon the posts thereof, on this side, and on that side: and the going up to it had eight steps.
35பின்பு அவர் என்னை வடக்குவாசலுக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாய் அதின் வாசலை அளந்தார்.And he brought me to the north gate, and measured it according to these measures;
36அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அளக்கப்பட்டது; அதைச் சுற்றி ஜன்னல்களும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது.The little chambers thereof, the posts thereof, and the arches thereof, and the windows to it round about: the length was fifty cubits, and the breadth five and twenty cubits.
37அதின் தூணாதாரங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; இந்தப் புறத்திலும் அந்தப்புறத்திலும் அதின் தூணாதாரங்களில் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப் படிகள் இருந்தது.And the posts thereof were toward the utter court; and palm trees were upon the posts thereof, on this side, and on that side: and the going up to it had eight steps.
38அதின் அறைகளும் அதின் கதவுகளும் வாசல்களின் தூணாதாரங்களுக்கு அருகில் இருந்தது; அங்கே தகனபலிகளைக் கழுவுவார்கள்.And the chambers and the entries thereof were by the posts of the gates, where they washed the burnt offering.
39வாசலின் மண்டபத்திலே இந்தப்புறத்தில் இரண்டு பீடங்களும் அந்தப்புறத்தில் இரண்டு பீடங்களும் இருந்தது; அவைகளின்மேல் தகனபலியையும் பாவநிவாரண பலியையும் குற்றநிவாரண பலியையும் செலுத்துவார்கள்.And in the porch of the gate were two tables on this side, and two tables on that side, to slay thereon the burnt offering and the sin offering and the trespass offering.
40வடக்குவாசலுக்குள் பிரவேசிக்கிறதற்கு ஏறிப்போகிற வெளிப்புறத்திலே இரண்டு பீடங்களும் வாசலின் மண்டபத்திலுள்ள மறுபுறத்திலே இரண்டுபீடங்களும் இருந்தது.And at the side without, as one goeth up to the entry of the north gate, were two tables; and on the other side, which was at the porch of the gate, were two tables.
41வாசலின் அருகே இந்தப்புறத்தில் நாலு பீடங்களும், அந்தப்புறத்தில் நாலு பீடங்களும், ஆக எட்டுப்பீடங்கள் இருந்தது; அவைகளின்மேல் பலிகளைச் செலுத்துவார்கள்.Four tables were on this side, and four tables on that side, by the side of the gate; eight tables, whereupon they slew their sacrifices.
42தகனபலிக்குரிய நாலு பீடங்கள் வெட்டின கல்லாயிருந்தது; அவைகள் ஒன்றரை முழ நீளமும், ஒன்றரை முழ அகலமும், ஒரு முழ உயரமுமாயிருந்தது; அவைகளின்மேல் தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்துகிற ஆயுதங்களை வைப்பார்கள்.And the four tables were of hewn stone for the burnt offering, of a cubit and an half long, and a cubit and an half broad, and one cubit high: whereupon also they laid the instruments wherewith they slew the burnt offering and the sacrifice.
43நாலு விரற்கடையான முளைகள் உள்ளே சுற்றிலும் வரிசையாய் அடிக்கப்பட்டிருந்தது; செலுத்தும் பலிகளின் மாம்சம் பீடங்களின்மேல் வைக்கப்படும்.And within were hooks, an hand broad, fastened round about: and upon the tables was the flesh of the offering.
44உட்பிராகாரத்திலே உள்வாசலுக்குப் புறம்பாகச் சங்கீதக்காரரின் அறைவீடுகள் இருந்தது; அவைகளில் வடக்குவாசலின் பக்கமாக இருந்தவைகள் தென் திசைக்கு எதிராகவும், கிழக்குவாசலின் பக்கமாக இருந்த வேறொரு வரிசை வடதிசைக்கு எதிராகவும் இருந்தது.And without the inner gate were the chambers of the singers in the inner court, which was at the side of the north gate; and their prospect was toward the south: one at the side of the east gate having the prospect toward the north.
45பின்பு அவர் என்னை நோக்கி: தன் திசைக்கு எதிராயிருக்கிற இந்த அறை ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது.And he said unto me, This chamber, whose prospect is toward the south, is for the priests, the keepers of the charge of the house.
46வடதிசைக்கு எதிராயிருக்கிற அறையோ, பலிபீடத்தின் காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது; இவர்கள் லேவியின் புத்திரரில் கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்காக அவரிடத்தில் சேருகிற சாதோக்கின் புத்திரர் என்றார்.And the chamber whose prospect is toward the north is for the priests, the keepers of the charge of the altar: these are the sons of Zadok among the sons of Levi, which come near to the LORD to minister unto him.
47அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார், அது சதுரமாயிருந்தது; பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது.So he measured the court, an hundred cubits long, and an hundred cubits broad, foursquare; and the altar that was before the house.
48பின்பு அவர் என்னை ஆலய மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டுபோய் மண்டபத்தின் தூணாதாரத்தை இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப்புறத்தில் ஐந்து முழமுமாக அளந்தார்; வாசலின் அகலம் இந்தப்புறம் மூன்றுமுழமும் அந்தப்புறம் மூன்றுமுழமுமாயிருந்தது.And he brought me to the porch of the house, and measured each post of the porch, five cubits on this side, and five cubits on that side: and the breadth of the gate was three cubits on this side, and three cubits on that side.
49மண்டபத்தின் நீளம் இருபதுமுழமும், அகலம் பதினொரு முழமுமாயிருந்தது; அதற்கு ஏறிப்போகிற படிகளும் இருந்தது; தூணாதாரங்களிலே இந்தப்புறத்தில் ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.The length of the porch was twenty cubits, and the breadth eleven cubits, and he brought me by the steps whereby they went up to it: and there were pillars by the posts, one on this side, and another on that side.
1Naangal siraippattuppona irupaththainthaam varushaththin aarampaththil muthalaam maatham paththaanthaethiyaakiya ante karththarutaiya kai enmael amarnthathu, avar ennai avvidaththukkuk konnduponaar; appoluthu nakaram alikkappattup pathinaalu varushamaayittaு.In the five and twentieth year of our captivity, in the beginning of the year, in the tenth day of the month, in the fourteenth year after that the city was smitten, in the selfsame day the hand of the LORD was upon me, and brought me thither.
2Thaevatharisanangalil avar ennai Israel thaesaththukkuk konndupoy, ennai makaa uyaramaana oru malaiyinmael niraுththinaar; athinmael therkaaka oru nakaram kattiyirukkirathupol kaanappattathu.In the visions of God brought he me into the land of Israel, and set me upon a very high mountain, by which was as the frame of a city on the south.
3Avar ennai angae konnduponaar; itho, angae oru purushan irunthaar; avarutaiya thottam vennkalamaayirunthathu; avar kaiyil sanarkayiraுm oru alavukolumirunthathu; avar vaasalilae nintar.And he brought me thither, and, behold, there was a man, whose appearance was like the appearance of brass, with a line of flax in his hand, and a measuring reed; and he stood in the gate.
4Anthap purushan ennai Nnokki: manupuththiranae, nee kannnnaarappaarththu, kaathaarak kaettu, naan unakkuk kaannpippathellaavattin maelum un manathai vai; naan unakku avaikalaik kaannpikkumpati nee ingae konnduvarappattay; nee kaannpathaiyellaam Israel vamsaththaarukkuth therivi entar.And the man said unto me, Son of man, behold with thine eyes, and hear with thine ears, and set thine heart upon all that I shall shew thee; for to the intent that I might shew them unto thee art thou brought hither: declare all that thou seest to the house of Israel.
5Itho, aalayaththukkup purampae suttilum oru mathil irunthathu; anthap purushan kaiyilae aaraுmula neelamaana oru alavukol irunthathu; ovvoru mulamum namathu kaimulaththilum naaluvirarkatai athikamaanathu; avar antha mathilai alanthaar; akalam oru kolaakavum uyaram oru kolaakavum irunthathu.And behold a wall on the outside of the house round about, and in the man's hand a measuring reed of six cubits long by the cubit and an hand breadth: so he measured the breadth of the building, one reed; and the height, one reed.
6Pinpu avar kilakkumuka vaasalukku vanthu, athin patikalinmael aeri, vaasarpatiyai oru kol akalamaakavum, maraுvaasarpatiyai orukol akalamaakavum alanthaar.Then came he unto the gate which looketh toward the east, and went up the stairs thereof, and measured the threshold of the gate, which was one reed broad; and the other threshold of the gate, which was one reed broad.
7Ovvoru araiyum oru kol neelamum oru kol akalamumaayirunthathu, araiveedukalukku naduvae ainthumula idam vittirunthathu; vaasalin manndapaththarukae ulvaasarpati oru kolalavaayirunthathu.And every little chamber was one reed long, and one reed broad; and between the little chambers were five cubits; and the threshold of the gate by the porch of the gate within was one reed.
8Vaasalin manndapaththaiyum ullae kolalavaaka alanthaar.He measured also the porch of the gate within, one reed.
9Pinpu vaasalin manndapaththai ettumulamaakavum, athin thoonnaathaarangalai iranndu mulamaakavum alanthaar; vaasalin manndapam utpuraththilirunthathu.Then measured he the porch of the gate, eight cubits; and the posts thereof, two cubits; and the porch of the gate was inward.
10Geelththisaikkethiraana vaasalin araikal inthappuraththil moontum anthappuraththil moontumaayirunthathu, avaikal moontukkum orae alavum, inthappuraththilum anthappuraththilumiruntha thoonnaathaarangalukku orae alavum irunthathu.And the little chambers of the gate eastward were three on this side, and three on that side; they three were of one measure: and the posts had one measure on this side and on that side.
11Pinpu vaasal nataiyin akalaththaip paththumulamaakavum, vaasalin neelaththaip pathinmoontu mulamaakavum alanthaar.And he measured the breadth of the entry of the gate, ten cubits; and the length of the gate, thirteen cubits.
12Araikalukku munnae inthappuraththil oru mula idamum anthappuraththil oru mula idamum irunthathu; ovvoru arai inthappuraththil aaraு mulamum anthappuraththil aaraுmulamumaayirunthathu.The space also before the little chambers was one cubit on this side, and the space was one cubit on that side: and the little chambers were six cubits on this side, and six cubits on that side.
13Pinpu vaasalil iruntha araiyin meththaiyinintu matta araiyin meththaimattum irupaththainthumulamaaka alanthaar; kathavukkuk kathavu naeraayirunthathu.He measured then the gate from the roof of one little chamber to the roof of another: the breadth was five and twenty cubits, door against door.
14Thoonnaathaarangalai araுpathu mulamaaka alanthaar; inthath thoonnaathaarangalin arukae suttilum munvaasalin muttam irunthathu.He made also posts of threescore cubits, even unto the post of the court round about the gate.
15Piravaesa vaasalin mukappuththuvakki utpuravaasal manndapamukappumattum aimpathu mulamaayirunthathu.And from the face of the gate of the entrance unto the face of the porch of the inner gate were fifty cubits.
16Vaasalukku utpuramaakach suttilumulla araikalukkum avaikalin thoonnaathaarangalukkum odukkamaana jannalkal irunthathu; manndapangalilum appatiyae irunthathu; utpuramaaych suttilum antha jannalkalum thoonnaathaarangalil siththirikkappatta paereechchamarangalum irunthathu.And there were narrow windows to the little chambers, and to their posts within the gate round about, and likewise to the arches: and windows were round about inward: and upon each post were palm trees.
17Pinpu ennai velippiraakaaraththukku alaiththukkonnduponaar; angae araiveedukalum, piraakaaraththin suttilum pathiththa thalavarisaiyum irunthathu; anthath thalavarisaiyinmael muppathu araiveedukal irunthathu.Then brought he me into the outward court, and, lo, there were chambers, and a pavement made for the court round about: thirty chambers were upon the pavement.
18Vaasalukkup pakkaththilum vaasalkalin neelaththukku ethirilumulla anthath thalavarisai thaalvaana thalavarisaiyaayirunthathu.And the pavement by the side of the gates over against the length of the gates was the lower pavement.
19Pinpu avar geelvaasalin mukappuththuvakki, utpiraakaaraththup puramukappumattumulla visaalaththai alanthaar; athu kilakkum vadakkum nooraுmulamaayirunthathu.Then he measured the breadth from the forefront of the lower gate unto the forefront of the inner court without, an hundred cubits eastward and northward.
20Velippiraakaaraththukku aduththa vadathisaikku ethiraana vaasalin neelaththaiyum akalaththaiyum alanthaar.And the gate of the outward court that looked toward the north, he measured the length thereof, and the breadth thereof.
21Atharku ippuraththil moontu araikalum appuraththil moontu araikalum irunthathu; athin thoonnaathaarangalum athin manndapangalum muthal vaasalin alavukkuch sariyaayirunthathu; athin neelam aimpathu mulamum, akalam irupaththainthu mulamumaayirunthathu.And the little chambers thereof were three on this side and three on that side; and the posts thereof and the arches thereof were after the measure of the first gate: the length thereof was fifty cubits, and the breadth five and twenty cubits.
22Athin jannalkalum, athin manndapangalum, athinmael siththirikkappatta paereechchamarangalum geelththisaikku ethiraana vaasalin alavukkuch sariyaayirunthathu; athil aeraுkiratharku aelu patikalirunthathu; athin manndapangal avaikalukku munnaaka irunthathu.And their windows, and their arches, and their palm trees, were after the measure of the gate that looketh toward the east; and they went up unto it by seven steps; and the arches thereof were before them.
23Vadathisaiyilum geelththisaiyilumulla ovvoru vaasalukku ethiraaka utpiraakaaraththukkum vaasalkalirunthathu; oru vaasalthuvakki matta vaasalmattum nooraு mulamaaka alanthaar.And the gate of the inner court was over against the gate toward the north, and toward the east; and he measured from gate to gate an hundred cubits.
24Pinpu ennaith thenthisaikku alaiththukkonnduponaar; angae thenthisaikku ethiraana vaasal iruntha athin thoonnaathaarangalaiyum athin manndapangalaiyum atharkuriya alavinpati alanthaar.After that he brought me toward the south, and behold a gate toward the south: and he measured the posts thereof and the arches thereof according to these measures.
25Antha jannalkalukkuch sariyaaka atharkum athin manndapangalukkum jannalkal suttilum irunthathu; neelam aimpathumulamum akalam irupaththainthu mulamumaayirunthathu.And there were windows in it and in the arches thereof round about, like those windows: the length was fifty cubits, and the breadth five and twenty cubits.
26Athil aeraுkiratharku aelu patikalirunthathu; atharku munpaaka athinmanndapangalum irunthathu, athin thoonnaathaarangalil siththirikkappatta paereechchamarangalum inthap puraththil ontum anthappuraththil ontumaaka irunthathu.And there were seven steps to go up to it, and the arches thereof were before them: and it had palm trees, one on this side, and another on that side, upon the posts thereof.
27Utpiraakaaraththukkum oru vaasal thenthisaikku ethiraaka, irunthathu; thenthisaiyilulla oru vaasalthuvakki matta vaasalmattum nooraுmulamaaka alanthaar.And there was a gate in the inner court toward the south: and he measured from gate to gate toward the south an hundred cubits.
28Pinpu avar therku vaasalaal ennai utpiraakaaraththukku alaiththukkonndupoy, antha alavukkuch sariyaakath therku vaasalaiyum alanthaar.And he brought me to the inner court by the south gate: and he measured the south gate according to these measures;
29Athin araikalum, athin thoonnaathaarangalum, athin manndapangalum, antha alavukkuch sariyaaka irunthathu, atharkum athin manndapangalukkum jannalkal suttilum irunthathu; neelam aimpathu mulamum akalam irupaththainthu mulamumaayirunthathu.And the little chambers thereof, and the posts thereof, and the arches thereof, according to these measures: and there were windows in it and in the arches thereof round about: it was fifty cubits long, and five and twenty cubits broad.
30Irupaththainthu mula neelamum ainthumula akalamumaana manndapangal suttilum irunthathu;And the arches round about were five and twenty cubits long, and five cubits broad.
31Athin manndapangal velippiraakaaraththil irunthathu; athin thoonnaathaarangalil siththirikkappatta paereechchamarangalum irunthathu; athil aeraுkiratharku ettuppatikal irunthathu.And the arches thereof were toward the utter court; and palm trees were upon the posts thereof: and the going up to it had eight steps.
32Pinpu avar geelththisai valiyaay ennai utpiraakaaraththukku alaiththukkonndupoy, antha alavukkuch sariyaaka antha vaasalaiyum alanthaar.And he brought me into the inner court toward the east: and he measured the gate according to these measures.
33Athin araikalum athin thoonnaathaarangalum athin manndapangalum antha alavukalukkuch sariyaaka irunthathu; atharkum athin manndapangalukkum jannalkal suttilum irunthathu; neelam aimpathu mulamum akalam irupaththainthu mulamumaayirunthathu.And the little chambers thereof, and the posts thereof, and the arches thereof, were according to these measures: and there were windows therein and in the arches thereof round about: it was fifty cubits long, and five and twenty cubits broad.
34Athin manndapangal velippiraakaaraththil irunthathu; athin thoonnaathaarangalil inthappuraththilum anthappuraththilum siththirikkappatta paereechchamarangalum irunthathu; athil aeraுkiratharku ettup patikal irunthathu.And the arches thereof were toward the outward court; and palm trees were upon the posts thereof, on this side, and on that side: and the going up to it had eight steps.
35Pinpu avar ennai vadakkuvaasalukku alaiththukkonndupoy, antha alavukkuch sariyaay athin vaasalai alanthaar.And he brought me to the north gate, and measured it according to these measures;
36Athin araikalum athin thoonnaathaarangalum athin manndapangalum alakkappattathu; athaich sutti jannalkalum irunthathu; neelam aimpathu mulamum akalam irupaththainthu mulamumaayirunthathu.The little chambers thereof, the posts thereof, and the arches thereof, and the windows to it round about: the length was fifty cubits, and the breadth five and twenty cubits.
37Athin thoonnaathaarangal velippiraakaaraththil irunthathu; inthap puraththilum anthappuraththilum athin thoonnaathaarangalil paereechchamarangalum siththirikkappattirunthathu; athil aeraுkiratharku ettup patikal irunthathu.And the posts thereof were toward the utter court; and palm trees were upon the posts thereof, on this side, and on that side: and the going up to it had eight steps.
38Athin araikalum athin kathavukalum vaasalkalin thoonnaathaarangalukku arukil irunthathu; angae thakanapalikalaik kaluvuvaarkal.And the chambers and the entries thereof were by the posts of the gates, where they washed the burnt offering.
39Vaasalin manndapaththilae inthappuraththil iranndu peedangalum anthappuraththil iranndu peedangalum irunthathu; avaikalinmael thakanapaliyaiyum paavanivaarana paliyaiyum kuttanivaarana paliyaiyum seluththuvaarkal.And in the porch of the gate were two tables on this side, and two tables on that side, to slay thereon the burnt offering and the sin offering and the trespass offering.
40Vadakkuvaasalukkul piravaesikkiratharku aerippokira velippuraththilae iranndu peedangalum vaasalin manndapaththilulla maraுpuraththilae iranndupeedangalum irunthathu.And at the side without, as one goeth up to the entry of the north gate, were two tables; and on the other side, which was at the porch of the gate, were two tables.
41Vaasalin arukae inthappuraththil naalu peedangalum, anthappuraththil naalu peedangalum, aaka ettuppeedangal irunthathu; avaikalinmael palikalaich seluththuvaarkal.Four tables were on this side, and four tables on that side, by the side of the gate; eight tables, whereupon they slew their sacrifices.
42Thakanapalikkuriya naalu peedangal vettina kallaayirunthathu; avaikal ontarai mula neelamum, ontarai mula akalamum, oru mula uyaramumaayirunthathu; avaikalinmael thakanapalikalaiyum mattap palikalaiyum seluththukira aayuthangalai vaippaarkal.And the four tables were of hewn stone for the burnt offering, of a cubit and an half long, and a cubit and an half broad, and one cubit high: whereupon also they laid the instruments wherewith they slew the burnt offering and the sacrifice.
43Naalu virarkataiyaana mulaikal ullae suttilum varisaiyaay atikkappattirunthathu; seluththum palikalin maamsam peedangalinmael vaikkappadum.And within were hooks, an hand broad, fastened round about: and upon the tables was the flesh of the offering.
44Utpiraakaaraththilae ulvaasalukkup purampaakach sangaீthakkaararin araiveedukal irunthathu; avaikalil vadakkuvaasalin pakkamaaka irunthavaikal then thisaikku ethiraakavum, kilakkuvaasalin pakkamaaka iruntha vaeroru varisai vadathisaikku ethiraakavum irunthathu.And without the inner gate were the chambers of the singers in the inner court, which was at the side of the north gate; and their prospect was toward the south: one at the side of the east gate having the prospect toward the north.
45Pinpu avar ennai Nnokki: than thisaikku ethiraayirukkira intha arai aalayakkaavalaik kaakkira aasaariyarkalutaiyathu.And he said unto me, This chamber, whose prospect is toward the south, is for the priests, the keepers of the charge of the house.
46Vadathisaikku ethiraayirukkira araiyo, palipeedaththin kaavalaik kaakkira aasaariyarkalutaiyathu; ivarkal laeviyin puththiraril karththarukku aaraathanai seykiratharkaaka avaridaththil serukira saathokkin puththirar entar.And the chamber whose prospect is toward the north is for the priests, the keepers of the charge of the altar: these are the sons of Zadok among the sons of Levi, which come near to the LORD to minister unto him.
47Avar piraakaaraththai nooraுmula neelamaakavum nooraுmula akalamaakavum alanthaar, athu sathuramaayirunthathu; palipeedamo aalayaththukku munpaaka irunthathu.So he measured the court, an hundred cubits long, and an hundred cubits broad, foursquare; and the altar that was before the house.
48Pinpu avar ennai aalaya manndapaththukku alaiththukkonndupoy manndapaththin thoonnaathaaraththai inthappuraththil ainthu mulamum anthappuraththil ainthu mulamumaaka alanthaar; vaasalin akalam inthappuram moontumulamum anthappuram moontumulamumaayirunthathu.And he brought me to the porch of the house, and measured each post of the porch, five cubits on this side, and five cubits on that side: and the breadth of the gate was three cubits on this side, and three cubits on that side.
49Manndapaththin neelam irupathumulamum, akalam pathinoru mulamumaayirunthathu; atharku aerippokira patikalum irunthathu; thoonnaathaarangalilae inthappuraththil oru thoonum anthappuraththil oru thoonum irunthathu.The length of the porch was twenty cubits, and the breadth eleven cubits, and he brought me by the steps whereby they went up to it: and there were pillars by the posts, one on this side, and another on that side.