ஆதி மெய் தேவனே
உம் அன்பிற்கோர் எல்லையுண்டோ?
நீதியாம் ஜோதி அநாதி தேவனே
உம் நீதிக்கோர் எல்லையுண்டோ?
1. பாவத்தில் மாண்ட என்னை
கோபத்தால் அழிக்காமல்
இரட்சித்த உந்தன் அன்பை
நினைத்து நான் பட்சமாய்
போற்றிடுவேன்
2. எத்தனையோ பாவங்கள்
கர்த்தாவே அகற்றினீர்
பத்தில் ஓர் பங்கு
போதாதென்றெண்ணி
நான் தத்தம் செய்தேன்
உமக்கே!
3. பாவமாம் கடலிலே
அமிழ்ந்து போன என்னை
தூக்கி எடுத்த உம் அன்பை
நினைத்தே என் துதிகள் தான்
போதுமோ?
4. எண்ணும் நன்மை எதுவும்
என்னிலே இல்லை ஐயா
பின்னே ஏன் என்னை நேசித்தீரோ
என்னில் கொண்ட உம் அன்பு
தானே!
Aathi Mei Devane Lyrics in English
Aathi mey thaevanae um anpirkor ellaiyunntoo? Neethiyaam jothi anaathi thaevanae um neethikkor ellaiyunntoo? 1. Paavaththil maannda ennai kopaththaal alikkaamal iratchiththa unthan anpai ninaiththu naan patchamaay pottiduvaen 2. Eththanaiyo paavangal karththaavae akattineer paththil or pangu pothaathentennnni naan thaththam seythaen umakkae! 3. Paavamaam kadalilae amilnthu pona ennai thookki eduththa um anpai ninaiththae en thuthikal thaan pothumo? 4. Ennnum nanmai ethuvum ennilae illai aiyaa pinnae aen ennai naesiththeero ennil konnda um anpu thaanae!
PowerPoint Presentation Slides for the song Aathi Mei Devane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathi Mei Devane – ஆதி மெய் தேவனே PPT
Aathi Mei Devane PPT

