Full Screen ?
 

En Meetpar Uyiroodu - என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்

என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்
கென்ன குறைவுண்டு ? நீ சொல் , மனமே

1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் ,
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் ;
விண்ணுல குயர்ந்தோர் , உன்னதஞ்சிறந்தோர் ,
மித்திரனே சுகபத்திர மருளும் — என் மீட்பர்

2. பாவமோ, மரணமோ , நரகமோ ,பேயோ ,
பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர் ,
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன் ;
சஞ்சலமினியேன்? நெஞ்சமே , மகிழாய் — என் மீட்பர்

3. ஆசி செய்திடுவார் , அருள்மிக அளிப்பார் ,
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார் ;
மோசமே மறைப்பார் , முன்னமே நடப்பார் ;
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும் — என் மீட்பர்

4. கவலைகள் தீர்ப்பார் , கண்ணீர் துடைப்பார் ,
கடைசிமட்டுங் கைவிடா திருப்பார் ;
பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார் ,
பரம பதவியினுள் என்றனை எடுப்பார் — என் மீட்பர்

5. போனது போகட்டும் , புவிவசை பேசட்டும் ,
பொல்லான் அம்புக ளெய்திடட்டும் ,
ஆனது ஆகட்டும் , அருள்மழை பெய்திடும் ,

அன்புமிகும் பேரின்ப மெனக்கருள் — என் மீட்பர்

En Meetpar Uyiroodu Lyrics in English

En meetpar uyirotirukkaiyilae enak kenna kuraivunndu ? Nee sol , manamae 1. Ennuyir meetkavae thannuyir koduththor , ennotirukkavae elunthirunthor ; vinnnula kuyarnthor , unnathanjiranthor , miththiranae sukapaththira marulum — en meetpar 2. Paavamo, maranamo , narakamo ,paeyo , payanthu nadungida jeyanj siranthor , saapamae theerththor sarkurunaathan ; sanjalaminiyaen? Nenjamae , makilaay — en meetpar 3. Aasi seythiduvaar , arulmika alippaar , amparan thanilenakkaay jepippaar ; mosamae maraippaar , munnamae nadappaar ; motchavali sathyam vaasal uyirenum — en meetpar 4. Kavalaikal theerppaar , kannnneer thutaippaar , kataisimattung kaividaa thiruppaar ; pavamanippalippaar, paakkiyang koduppaar , parama pathaviyinul entanai eduppaar — en meetpar 5. Ponathu pokattum , puvivasai paesattum , pollaan ampuka leythidattum , aanathu aakattum , arulmalai peythidum , anpumikum paerinpa menakkarul — en meetpar

PowerPoint Presentation Slides for the song En Meetpar Uyiroodu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meetpar Uyiroodu – என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் PPT
En Meetpar Uyiroodu PPT

மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கென்ன குறைவுண்டு சொல் மனமே என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ்சிறந்தோர் மித்திரனே சுகபத்திர மருளும் பாவமோ தமிழ்