மாறணும் மனம் மாறணும்
மனம் இன்றே மாறணும்
அலை பாய்ந்திடும் மனம் மாறணும்
தடுமாறியே சிறையாகிடும்
மனம் இன்றே மாறணும்
அடியோடு மாறணும்
மனம் மனம் கல்மனம் மாறணும்
வக்கிர சிலைகளை ஓழிக்கணும்
ஆவியின் அலை புரண்டோடணும்
சத்திய வசனம் பதிக்கணும்
கனிந்த இதயம் காணணும்!
1. சத்திய ஒளிப் பார்வையில்
தன் நிலை உணரனும்
பரமனுக்கெதிராய் செய்த குற்றம்
ஒப்புக்கொள்ளணும் – 2
திருமகன் சிலுவை பிராயச்சித்தம்
சொந்தம் கொண்டாடனும்
பிதா வழங்கும் மன்னிப்பை
ஆரத் தழுவணும் – அவர்
அன்புக்குச் சரணாகணும்!
2. ஆவியின் தின ஊட்டத்திலே
தனிவேறாய் துலங்கணும்
ஜெப வசனப் பயிற்சியினால்
திருவார்ப்பாய் மாறணும் – 2
பூரண வெற்றிப்பாட்டாக
வாழ்வைத் தொடரணும்
கிறிஸ்துவின் தூய அடிச்சுவட்டில்
நித்தம் பின் செல்லணும்
புகழ் ஆராதனை செய்யணும்!
3. தேவ அன்பினில் அசைவின்றி
நிலை உறுதி காக்கணும்
சகமனிதருடன் நல்லுறவை
கட்டியெழுப்பணும் – 2
தூய ஆவியின் மெருகேற்றம்
இயேசுவைக் காட்டணும்
தேவன் அழைத்த பந்தயத்தின்
இலக்கை அடையணும்
என்றும் பரலோகம் பூரிக்கணும்!
Maaranum Manam Maaranum Lyrics in English
Maaranum manam maaranum manam inte maaranum alai paaynthidum manam maaranum thadumaariyae siraiyaakidum manam inte maaranum atiyodu maaranum manam manam kalmanam maaranum vakkira silaikalai olikkanum aaviyin alai puranntoodanum saththiya vasanam pathikkanum kanintha ithayam kaananum! 1. Saththiya olip paarvaiyil than nilai unaranum paramanukkethiraay seytha kuttam oppukkollanum – 2 thirumakan siluvai piraayachchiththam sontham konndaadanum pithaa valangum mannippai aarath thaluvanum – avar anpukkuch sarannaakanum! 2. Aaviyin thina oottaththilae thanivaeraay thulanganum jepa vasanap payirsiyinaal thiruvaarppaay maaranum – 2 poorana vettippaattaka vaalvaith thodaranum Kristhuvin thooya atichchuvattil niththam pin sellanum pukal aaraathanai seyyanum! 3. Thaeva anpinil asaivinti nilai uraுthi kaakkanum sakamanitharudan nalluravai kattiyeluppanum – 2 thooya aaviyin merukaettam Yesuvaik kaattanum Dhevan alaiththa panthayaththin ilakkai ataiyanum entum Paralokam poorikkanum!
PowerPoint Presentation Slides for the song Maaranum Manam Maaranum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maaranum Manam Maaranum – மாறணும் மனம் மாறணும் PPT
Maaranum Manam Maaranum PPT

