Full Screen ?
 

Thanthen Yennai Yesuve - தந்தேன் என்னை ஏசுவே

Thanthen Yennai Yesuve
தந்தேன் என்னை ஏசுவே
இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியம் செய்ய
தந்தேன் என்னை தாங்கியருளும்

1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
ஊரில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன்

2. உந்தன் சித்தம் நான் செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்கு கட்டினும்
ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன்

3. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீடருக்கு அளித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் – தந்தேன்

4. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் – தந்தேன்

5. கஷ்டம், நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடி சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் – தந்தேன்

Thanthen Yennai Yesuve – தந்தேன் என்னை ஏசுவே Lyrics in English

Thanthen Yennai Yesuve thanthaen ennai aesuvae intha naeramae umakkae unthanukkae ooliyam seyya thanthaen ennai thaangiyarulum1. Jeeva kaalam muluthum thaeva panni seythiduvaen ooril kadum por purikaiyil kaavum unthan karanthanil vaiththu – thanthaen2. Unthan siththam naan seyvaen enthan siththam oliththiduvaen entha idam enakku kattinum aesuvae angae itho pokiraேn – thanthaen3. Ontumillai naan aiyaa ummaal anti ontum seyyaen antu seedarukku aliththa aaviyaal inte atiyaenai nirappum – thanthaen4. Ulakor ennai nerukkip palamaay yuththam seythitinum nalamaay sarva aayutham poonndu naanilaththinil naathaa velluvaen – thanthaen5. Kashdam, nashdam vanthaalum thushdar kooti soolnthittalum ashdathikkum aalum thaevanae atiyaen ummil amarach seythidum – thanthaen

PowerPoint Presentation Slides for the song Thanthen Yennai Yesuve – தந்தேன் என்னை ஏசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanthen Yennai Yesuve – தந்தேன் என்னை ஏசுவே PPT
Thanthen Yennai Yesuve PPT

தந்தேன் என்னை ஏசுவே உந்தன் சித்தம் Thanthen Yennai Yesuve நேரமே உமக்கே உந்தனுக்கே ஊழியம் செய்ய தாங்கியருளும் ஜீவ காலம் முழுதும் தேவ தமிழ்