Full Screen Chords ?
 

Vaarum Naam Ellarum - வாரும் நாம் எல்லாரும் கூடி

Vaarum Naam Ellarum
வாரும் நாம் எல்லாரும் கூடி
மகிழ் கொண்டாடுவோம் – சற்றும்
மாசிலா நம் இயேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம் ஆ!

1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் – வாரும்

2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் – வாரும்

3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் – வாரும்

4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே – இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் – வாரும்

5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர்
பட்சம் வைத்துறும் தொழும் பரை ரட்சை செய்கிறார் – வாரும்

Vaarum Naam Ellarum – வாரும் நாம் எல்லாரும் Lyrics in English

Vaarum Naam Ellarum vaarum naam ellaarum kooti makil konndaaduvom – sattaுm maasilaa nam Yesu naatharai vaalththip paaduvom aa!1. Thaarakam atta aelaikal thalaikka naayanaar – inthath thaaranni yilae manudava thaaram aayinaar – vaarum2. Maa pathaviyai ilanthu variyar aana naam – angae maatchi ura vaenntiyae avar thaalchchi aayinaar – vaarum3. Njaalamathil avarkkinnai nannpar yaarular – paarum nam uyirai meetkavae avar tham uyir vittar – vaarum4. Maa kotiya saavathin valimai neekkiyae – intha manndalaththi nintuyirth thavar vinndalanj sentar – vaarum5. Paavikat kaayp paranidam parinthu vaenntiyae – avar patcham vaiththuraுm tholum parai ratchaை seykiraar – vaarum

PowerPoint Presentation Slides for the song Vaarum Naam Ellarum – வாரும் நாம் எல்லாரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarum Naam Ellarum – வாரும் நாம் எல்லாரும் கூடி PPT
Vaarum Naam Ellarum PPT

வாரும் நம் ஆயினார் மா வேண்டியே Vaarum Naam Ellarum எல்லாரும் கூடி மகிழ் கொண்டாடுவோம் சற்றும் மாசிலா இயேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம் தமிழ்