உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத்துரத்துகையில், நீ உன் இருதயத்திலே: என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்தி விடுகிறார்.
கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.
அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; அது வணங்காக் கழுத்துள்ள ஜனம்.
நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன்.
கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போலும் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.
கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல் கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:
| Understand | וְיָֽדַעְתָּ֣ | wĕyādaʿtā | veh-ya-da-TA |
| therefore this day, | הַיּ֗וֹם | hayyôm | HA-yome |
| that | כִּי֩ | kiy | kee |
| the Lord | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| thy God | אֱלֹהֶ֜יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| is he | הֽוּא | hûʾ | hoo |
| which goeth over | הָעֹבֵ֤ר | hāʿōbēr | ha-oh-VARE |
| before | לְפָנֶ֙יךָ֙ | lĕpānêkā | leh-fa-NAY-HA |
| thee; as a consuming | אֵ֣שׁ | ʾēš | aysh |
| fire | אֹֽכְלָ֔ה | ʾōkĕlâ | oh-heh-LA |
| he | ה֧וּא | hûʾ | hoo |
| shall destroy | יַשְׁמִידֵ֛ם | yašmîdēm | yahsh-mee-DAME |
| them, and he | וְה֥וּא | wĕhûʾ | veh-HOO |
| shall bring them down | יַכְנִיעֵ֖ם | yaknîʿēm | yahk-nee-AME |
| before thy face: | לְפָנֶ֑יךָ | lĕpānêkā | leh-fa-NAY-ha |
| so shalt thou drive them out, | וְהֽוֹרַשְׁתָּ֤ם | wĕhôraštām | veh-hoh-rahsh-TAHM |
| and destroy | וְהַֽאַבַדְתָּם֙ | wĕhaʾabadtām | veh-ha-ah-vahd-TAHM |
| them quickly, | מַהֵ֔ר | mahēr | ma-HARE |
| as | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| the Lord | דִּבֶּ֥ר | dibber | dee-BER |
| hath said | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| unto thee. | לָֽךְ׃ | lāk | lahk |