பிரசங்கி 3:5
கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு;
Tamil Indian Revised Version
கற்களை எறிந்துவிட ஒரு காலம் உண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலம் உண்டு; தழுவ ஒரு காலம் உண்டு, தழுவாமல் இருக்க ஒரு காலம் உண்டு;
Tamil Easy Reading Version
ஆயுதங்களை எறிவதற்கு ஒரு காலமுண்டு, ஆயுதங்களை எடுப்பதற்கு ஒரு காலமுண்டு. தழுவிக்கொள்ள ஒரு காலமுண்டு, தழுவிக்கொள்ளாமல் இருக்கவும் ஒரு காலமுண்டு.
Thiru Viviliam
⁽கற்களை எறிய ஒரு காலம்,␢ கற்களைச் சேர்க்க ஒரு காலம்;␢ அரவணைக்க ஒரு காலம்,␢ அரவணையாதிருக்க ஒரு காலம்;⁾
King James Version (KJV)
A time to cast away stones, and a time to gather stones together; a time to embrace, and a time to refrain from embracing;
American Standard Version (ASV)
a time to cast away stones, and a time to gather stones together; a time to embrace, and a time to refrain from embracing;
Bible in Basic English (BBE)
A time to take stones away and a time to get stones together; a time for kissing and a time to keep from kissing;
Darby English Bible (DBY)
A time to cast away stones, and a time to gather stones together; A time to embrace, and a time to refrain from embracing;
World English Bible (WEB)
A time to cast away stones, And a time to gather stones together; A time to embrace, And a time to refrain from embracing;
Young’s Literal Translation (YLT)
A time to cast away stones, And a time to heap up stones. A time to embrace, And a time to be far from embracing.
பிரசங்கி Ecclesiastes 3:5
கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு;
A time to cast away stones, and a time to gather stones together; a time to embrace, and a time to refrain from embracing;
| עֵ֚ת | ʿēt | ate | |
| לְהַשְׁלִ֣יךְ | lĕhašlîk | leh-hahsh-LEEK | |
| אֲבָנִ֔ים | ʾăbānîm | uh-va-NEEM | |
| וְעֵ֖ת | wĕʿēt | veh-ATE | |
| כְּנ֣וֹס | kĕnôs | keh-NOSE | |
| אֲבָנִ֑ים | ʾăbānîm | uh-va-NEEM | |
| עֵ֣ת | ʿēt | ate | |
| לַחֲב֔וֹק | laḥăbôq | la-huh-VOKE | |
| וְעֵ֖ת | wĕʿēt | veh-ATE | |
| לִרְחֹ֥ק | lirḥōq | leer-HOKE | |
| מֵחַבֵּֽק׃ | mēḥabbēq | may-ha-BAKE |
Cross Reference
2 இராஜாக்கள் 3:25
பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலே மாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது; கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள்.
யோவேல் 2:16
ஜனத்தைக் கட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக.
யாத்திராகமம் 19:15
அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.
யோசுவா 4:3
இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியரின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில்தங்கும் ஸ்தானத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார்.
யோசுவா 10:27
சூரியன் அஸ்தமிக்கிறவேளையிலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளித்துக்கொண்டிருந்த கெபியிலே அவர்களைப் போட்டு; இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களை கெபியின் வாயிலே அடைத்தார்கள்.
1 சாமுவேல் 21:4
ஆசாரியன் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே ஒழிய, சாதாரண அப்பம் என் கையில் இல்லை; வாலிபர் ஸ்திரீகளோடேமாத்திரம் சேராதிருந்தால் கொடுப்பேன் என்றான்.
2 சாமுவேல் 18:17
அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரியகற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
உன்னதப்பாட்டு 2:6
அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது.
1 கொரிந்தியர் 7:5
உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.
Tags கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு தழுவ ஒரு காலமுண்டு தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு
Ecclesiastes 3:5 in Tamil Concordance Ecclesiastes 3:5 in Tamil Interlinear Ecclesiastes 3:5 in Tamil Image