இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள்; ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.
சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.
அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டாரென்று எழுதியிருந்தது.
அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது.
| And he wrote | וַיִּכְתֹּ֗ב | wayyiktōb | va-yeek-TOVE |
| in the king | בְּשֵׁם֙ | bĕšēm | beh-SHAME |
| Ahasuerus' | הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek |
| name, | אֲחַשְׁוֵרֹ֔שׁ | ʾăḥašwērōš | uh-hahsh-vay-ROHSH |
| and sealed | וַיַּחְתֹּ֖ם | wayyaḥtōm | va-yahk-TOME |
| it with the king's | בְּטַבַּ֣עַת | bĕṭabbaʿat | beh-ta-BA-at |
| ring, | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| and sent | וַיִּשְׁלַ֣ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| letters | סְפָרִ֡ים | sĕpārîm | seh-fa-REEM |
| by | בְּיַד֩ | bĕyad | beh-YAHD |
| posts | הָֽרָצִ֨ים | hārāṣîm | ha-ra-TSEEM |
| on horseback, | בַּסּוּסִ֜ים | bassûsîm | ba-soo-SEEM |
| and riders | רֹֽכְבֵ֤י | rōkĕbê | roh-heh-VAY |
| on mules, | הָרֶ֙כֶשׁ֙ | hārekeš | ha-REH-HESH |
| camels, | הָֽאֲחַשְׁתְּרָנִ֔ים | hāʾăḥaštĕrānîm | ha-uh-hahsh-teh-ra-NEEM |
| and young | בְּנֵ֖י | bĕnê | beh-NAY |
| dromedaries: | הָֽרַמָּכִֽים׃ | hārammākîm | HA-ra-ma-HEEM |