அப்படியே வடபக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாயிருக்க வேண்டும்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும்.
அங்கே ஒரு புறத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
மறுபுறத்துக்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.
பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாய்ச் செய்யப்பட்ட இருபதுமுழ நீளமான ஒரு தொங்குதிரையும் அதற்கு நாலு தூண்களும் அவைகளுக்கு நாலு பாதங்களும் இருக்கவேண்டும்.
சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபுறத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாயிருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாயிருக்கவேண்டும்.
| And for the breadth | וְרֹ֤חַב | wĕrōḥab | veh-ROH-hahv |
| of the court | הֶֽחָצֵר֙ | heḥāṣēr | heh-ha-TSARE |
| on the west | לִפְאַת | lipʾat | leef-AT |
| side | יָ֔ם | yām | yahm |
| shall be hangings | קְלָעִ֖ים | qĕlāʿîm | keh-la-EEM |
| of fifty | חֲמִשִּׁ֣ים | ḥămiššîm | huh-mee-SHEEM |
| cubits: | אַמָּ֑ה | ʾammâ | ah-MA |
| their pillars | עַמֻּֽדֵיהֶ֣ם | ʿammudêhem | ah-moo-day-HEM |
| ten, | עֲשָׂרָ֔ה | ʿăśārâ | uh-sa-RA |
| and their sockets | וְאַדְנֵיהֶ֖ם | wĕʾadnêhem | veh-ad-nay-HEM |
| ten. | עֲשָׂרָֽה׃ | ʿăśārâ | uh-sa-RA |