அதின் நாலு மூலைகளிலும் நாலு கொம்புகளை உண்டாக்குவாயாக; அதின் கொம்புகள் அதனோடே ஏகமாய் இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும்.
வலைப்பின்னல் போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைப் பண்ணி, அந்தச் சல்லடையின் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை உண்டாக்கி,
பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்Τால் தண்டுகளையும் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக.
சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபுறத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாயிருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாயிருக்கவேண்டும்.
வாசஸ்தலத்துக்கடுத்த சகல பணிவிடைக்குத் தேவையான எல்லாப் பணிமுட்டுகளும், அதின் எல்லா முளைகளும், பிராகாரத்தின் எல்லா முளைகளும் வெண்கலமாயிருக்கவேண்டும்.
| And thou shalt make | וְעָשִׂ֤יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta |
| his pans | סִּֽירֹתָיו֙ | sîrōtāyw | SEE-roh-tav |
| to receive his ashes, | לְדַשְּׁנ֔וֹ | lĕdaššĕnô | leh-da-sheh-NOH |
| and his shovels, | וְיָעָיו֙ | wĕyāʿāyw | veh-ya-av |
| and his basons, | וּמִזְרְקֹתָ֔יו | ûmizrĕqōtāyw | oo-meez-reh-koh-TAV |
| and his fleshhooks, | וּמִזְלְגֹתָ֖יו | ûmizlĕgōtāyw | oo-meez-leh-ɡoh-TAV |
| and his firepans: | וּמַחְתֹּתָ֑יו | ûmaḥtōtāyw | oo-mahk-toh-TAV |
| all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| the vessels | כֵּלָ֖יו | kēlāyw | kay-LAV |
| thereof thou shalt make | תַּֽעֲשֶׂ֥ה | taʿăśe | ta-uh-SEH |
| of brass. | נְחֹֽשֶׁת׃ | nĕḥōšet | neh-HOH-shet |