1அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள்.Then wrought Bezaleel and Aholiab, and every wise hearted man, in whom the LORD put wisdom and understanding to know how to work all manner of work for the service of the sanctuary, according to all that the LORD had commanded.
2பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான்.And Moses called Bezaleel and Aholiab, and every wise hearted man, in whose heart the LORD had put wisdom, even every one whose heart stirred him up to come unto the work to do it:
3அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.And they received of Moses all the offering, which the children of Israel had brought for the work of the service of the sanctuary, to make it withal. And they brought yet unto him free offerings every morning.
4அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து,And all the wise men, that wrought all the work of the sanctuary, came every man from his work which they made;
5மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.And they spake unto Moses, saying, The people bring much more than enough for the service of the work, which the LORD commanded to make.
6அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.And Moses gave commandment, and they caused it to be proclaimed throughout the camp, saying, Let neither man nor woman make any more work for the offering of the sanctuary. So the people were restrained from bringing.
7செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது.For the stuff they had was sufficient for all the work to make it, and too much.
8வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள் அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான்.And every wise hearted man among them that wrought the work of the tabernacle made ten curtains of fine twined linen, and blue, and purple, and scarlet: with cherubim of cunning work made he them.
9ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது.The length of one curtain was twenty and eight cubits, and the breadth of one curtain four cubits: the curtains were all of one size.
10ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான்.And he coupled the five curtains one unto another: and the other five curtains he coupled one unto another.
11இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான்.And he made loops of blue on the edge of one curtain from the selvedge in the coupling: likewise he made in the uttermost side of another curtain, in the coupling of the second.
12காதுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாயிருந்தது.Fifty loops made he in one curtain, and fifty loops made he in the edge of the curtain which was in the coupling of the second: the loops held one curtain to another.
13ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று.And he made fifty taches of gold, and coupled the curtains one unto another with the taches: so it became one tabernacle.
14வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்.And he made curtains of goats' hair for the tent over the tabernacle: eleven curtains he made them.
15ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருந்தது.The length of one curtain was thirty cubits, and four cubits was the breadth of one curtain: the eleven curtains were of one size.
16ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து,And he coupled five curtains by themselves, and six curtains by themselves.
17இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி,And he made fifty loops upon the uttermost edge of the curtain in the coupling, and fifty loops made he upon the edge of the curtain which coupleth the second.
18கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான்.And he made fifty taches of brass to couple the tent together, that it might be one.
19சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டு பண்ணினான்.And he made a covering for the tent of rams' skins dyed red, and a covering of badgers' skins above that.
20வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான்.And he made boards for the tabernacle of shittim wood, standing up.
21ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாயிருந்தது.The length of a board was ten cubits, and the breadth of a board one cubit and a half.
22ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு கழுந்துகள் இருந்தது; வாசஸ்தலத்தினύ பҠΕைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான்.One board had two tenons, equally distant one from another: thus did he make for all the boards of the tabernacle.
23வாசஸ்தலத்திற்காகச் செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தென்திசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி,And he made boards for the tabernacle; twenty boards for the south side southward:
24அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணினான்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும் பண்ணிவைத்து;And forty sockets of silver he made under the twenty boards; two sockets under one board for his two tenons, and two sockets under another board for his two tenons.
25வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.And for the other side of the tabernacle, which is toward the north corner, he made twenty boards,
26ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான்.And their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.
27வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும்,And for the sides of the tabernacle westward he made six boards.
28வாசஸ்தலத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான்.And two boards made he for the corners of the tabernacle in the two sides.
29அவைகள் கீழே இசைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலுமுள்ள அவ்விரண்டிற்கும் அப்படியே செய்தான்.And they were coupled beneath, and coupled together at the head thereof, to one ring: thus he did to both of them in both the corners.
30அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது.And there were eight boards; and their sockets were sixteen sockets of silver, under every board two sockets.
31சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும்,And he made bars of shittim wood; five for the boards of the one side of the tabernacle,
32வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேல்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணினான்.And five bars for the boards of the other side of the tabernacle, and five bars for the boards of the tabernacle for the sides westward.
33நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்தான்.And he made the middle bar to shoot through the boards from the one end to the other.
34பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.And he overlaid the boards with gold, and made their rings of gold to be places for the bars, and overlaid the bars with gold.
35இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்களுள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணி,And he made a vail of blue, and purple, and scarlet, and fine twined linen: with cherubim made he it of cunning work.
36அதற்குச் சீத்திம் மரத்தினால் நாலு தூண்களைச்செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால் பண்ணி, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.And he made thereunto four pillars of shittim wood, and overlaid them with gold: their hooks were of gold; and he cast for them four sockets of silver.
37கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்குதிரையையும்,And he made an hanging for the tabernacle door of blue, and purple, and scarlet, and fine twined linen, of needlework;
38அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவாணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்: அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாயிருந்தது.And the five pillars of it with their hooks: and he overlaid their chapiters and their fillets with gold: but their five sockets were of brass.
1Appoluthu Parisuththa sthalaththuth thiruppannikalukkaduththa sakala vaelaikalaiyum, Karththar karpiththapatiyellaam, pesaleyaelum akoliyaapum, seyya ariyumpatikkuk karththaraal njaanamum puththiyum petta vivaeka iruthayamulla matta anaivarum seyyaththodanginaarkal.Then wrought Bezaleel and Aholiab, and every wise hearted man, in whom the LORD put wisdom and understanding to know how to work all manner of work for the service of the sanctuary, according to all that the LORD had commanded.
2Pesaleyaelaiyum akoliyaapaiyum, karththaraal njaanamatainthu antha vaelaikalaich seyyavarumpati thangal iruthayaththil elupputhalataintha njaana iruthayaththaaraakiya ellaaraiyum, Moses varavalaiththaan.And Moses called Bezaleel and Aholiab, and every wise hearted man, in whose heart the LORD had put wisdom, even every one whose heart stirred him up to come unto the work to do it:
3Avarkal, Israel puththirar thiruppannikkaduththa sakala vaelaikalukkaakavum konnduvantha kaannikkaip porulkalaiyellaam, Mosesyinidaththil vaangikkonndaarkal. Pinnum janangal kaalaithoraுm thangalukku ishdamaana kaannikkaikalai avanidaththil konnduvanthaarkal.And they received of Moses all the offering, which the children of Israel had brought for the work of the service of the sanctuary, to make it withal. And they brought yet unto him free offerings every morning.
4Appoluthu Parisuththa sthalaththu vaelaikalaich seykira vivaekikal yaavarum avaravar seykira vaelaiyin kaariyamaay vanthu,And all the wise men, that wrought all the work of the sanctuary, came every man from his work which they made;
5Mosesyai Nnokki: Karththar seyyumpati karpiththa vaelaikku vaenntiyatharku athikamaana porulkalai janangal konnduvarukiraarkal entarkal.And they spake unto Moses, saying, The people bring much more than enough for the service of the work, which the LORD commanded to make.
6Appoluthu Moses ini purusharkalaavathu sthireekalaavathu Parisuththa sthalaththukkentu kaannikkaiyaaka oru vaelaiyum seyyavaenndaam entu paalayam engum kooraுmpati kattalaiyittan; ivvithamaay janangal konnduvarukirathu niraுththappattathu.And Moses gave commandment, and they caused it to be proclaimed throughout the camp, saying, Let neither man nor woman make any more work for the offering of the sanctuary. So the people were restrained from bringing.
7Seyyavaenntiya ellaa vaelaikalukkum pothumaana porulkal irunthathumallaamal athikamaayum irunthathu.For the stuff they had was sufficient for all the work to make it, and too much.
8Vaelaiseykiravarkalaakiya njaana iruthayamulla yaavarum vaasasthalaththai unndaakkinaarkal atharkuth thiriththa melliya panjunoolaalum ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum, viNnotha nesavuvaelaiyaakiya kaerupeenkalulla paththu mooduthiraikalaip pannnninaan.And every wise hearted man among them that wrought the work of the tabernacle made ten curtains of fine twined linen, and blue, and purple, and scarlet: with cherubim of cunning work made he them.
9Ovvoru mooduthirai irupaththettu mula neelamum naalu mula akalamumaayirunthathu; mooduthiraikalellaam orae alavaayirunthathu.The length of one curtain was twenty and eight cubits, and the breadth of one curtain four cubits: the curtains were all of one size.
10Ainthu mooduthiraikalai ontotontu innaiththu, matta ainthu mooduthiraikalaiyum ontotontu innaiththaan.And he coupled the five curtains one unto another: and the other five curtains he coupled one unto another.
11Innaikkappatta oru mooduthiraiyin oraththil ilaneelanoolaal aimpathu kaathukalai unndupannnni, appatiyae innaikkappatta matta mooduthiraiyin oraththilum unndupannnninaan.And he made loops of blue on the edge of one curtain from the selvedge in the coupling: likewise he made in the uttermost side of another curtain, in the coupling of the second.
12Kaathukal ontotontu innaikkappattavaikalaayirunthathu.Fifty loops made he in one curtain, and fifty loops made he in the edge of the curtain which was in the coupling of the second: the loops held one curtain to another.
13Aimpathu pon kokkikalaiyum pannnni, anthak kokkikalaal mooduthiraikalai ontotontu innaiththuvittan. Ivvithamaaka orae vaasasthalamaayittaு.And he made fifty taches of gold, and coupled the curtains one unto another with the taches: so it became one tabernacle.
14Vaasasthalaththinmael koodaaramaakap podumpati aattumayirinaal neytha pathinoru mooduthiraikalaiyum pannnninaan.And he made curtains of goats' hair for the tent over the tabernacle: eleven curtains he made them.
15Ovvoru mooduthirai muppathu mula neelamum naalu mula akalamumaayirunthathu. Pathinoru mooduthiraikalum orae alavaayirunthathu.The length of one curtain was thirty cubits, and four cubits was the breadth of one curtain: the eleven curtains were of one size.
16Ainthu mooduthiraikalai ontakavum, matta aaraு mooduthiraikalai ontakavum innaiththu,And he coupled five curtains by themselves, and six curtains by themselves.
17Innaikkappatta oru mooduthiraiyin oraththil aimpathu kaathukalaiyum, innaikkappatta matta mooduthiraiyin oraththil aimpathu kaathukalaiyum unndaakki,And he made fifty loops upon the uttermost edge of the curtain in the coupling, and fifty loops made he upon the edge of the curtain which coupleth the second.
18Koodaaraththai ontay innaiththuvida, aimpathu vennkalak kokkikalaiyum unndaakkinaan.And he made fifty taches of brass to couple the tent together, that it might be one.
19Sivappuththeerntha aattukkadaath tholinaal koodaaraththukku oru mootiyaiyum athinmael podath thakasuththolinaal oru mootiyaiyum unndu pannnninaan.And he made a covering for the tent of rams' skins dyed red, and a covering of badgers' skins above that.
20Vaasasthalaththukku nimirnthunirkum palakaikalaiyum seeththim maraththaal seythaan.And he made boards for the tabernacle of shittim wood, standing up.
21Ovvoru palakaiyum paththumula neelamum ontarai mula akalamumaayirunthathu.The length of a board was ten cubits, and the breadth of a board one cubit and a half.
22Ovvoru palakaikkum ontukkontu samathooramaana iranndu kalunthukal irunthathu; vaasasthalaththinaύ paҠΕைkalukkellaam ippatiyae seythaan.One board had two tenons, equally distant one from another: thus did he make for all the boards of the tabernacle.
23Vaasasthalaththirkaakach seyyappatta palakaikalil therkae thenthisaikku irupathu palakaikalai unndaakki,And he made boards for the tabernacle; twenty boards for the south side southward:
24Antha irupathu palakaikalin geelae vaikkum naarpathu vellip paathangalaiyum unndupannnninaan; oru palakaiyin geel athin iranndu kalunthukalukkum iranndu paathangalaiyum, mattap palakaiyingeel athin iranndu kalunthukalukkum iranndu paathangalaiyum pannnnivaiththu;And forty sockets of silver he made under the twenty boards; two sockets under one board for his two tenons, and two sockets under another board for his two tenons.
25Vaasasthalaththin maraுpakkamaakiya vadapuraththil irupathu palakaikalaiyum, avaikalukku naarpathu vellip paathangalaiyum seythaan.And for the other side of the tabernacle, which is toward the north corner, he made twenty boards,
26Oru palakaiyingeel iranndu paathangalum, mattap palakaiyingeel iranndu paathangalum seythaan.And their forty sockets of silver; two sockets under one board, and two sockets under another board.
27Vaasasthalaththin maelpuraththirku aaraு palakaikalaiyum,And for the sides of the tabernacle westward he made six boards.
28Vaasasthalaththin irupakkangalilulla moolaikalukku iranndu palakaikalaiyum seythaan.And two boards made he for the corners of the tabernacle in the two sides.
29Avaikal geelae isaikkappattirunthathu, maelaeyum oru valaiyaththinaal isaikkappattirunthathu; iranndu moolaikalilumulla avviranntirkum appatiyae seythaan.And they were coupled beneath, and coupled together at the head thereof, to one ring: thus he did to both of them in both the corners.
30Appatiyae ettup palakaikalum, avaikalutaiya ovvoru palakaiyin geel iranntiranndu paathangalaakap pathinaaraு vellippaathangalum irunthathu.And there were eight boards; and their sockets were sixteen sockets of silver, under every board two sockets.
31Seeththim maraththaal vaasasthalaththin oru pakkaththup palakaikalukku ainthu thaalppaalkalaiyum,And he made bars of shittim wood; five for the boards of the one side of the tabernacle,
32Vaasasthalaththin maraுpakkaththup palakaikalukku ainthu thaalppaalkalaiyum, vaasasthalaththin maelpuramaana pinpakkaththup palakaikalukku ainthu thaalppaalkalaiyum pannnninaan.And five bars for the boards of the other side of the tabernacle, and five bars for the boards of the tabernacle for the sides westward.
33Naduththaalppaal oru munaithodangi maraுmunaimattum palakaikalin maiyaththil uruvappaayumpati seythaan.And he made the middle bar to shoot through the boards from the one end to the other.
34Palakaikalaip ponthakattal mooti, thaalppaalkalin idangalaakiya avaikalin valaiyangalaip ponninaal pannnni, thaalppaalkalaip ponthakattal mootinaan.And he overlaid the boards with gold, and made their rings of gold to be places for the bars, and overlaid the bars with gold.
35Ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum thiriththa melliya panjunoolaalum seyyappattathum, visiththiravaelaiyaakiya kaerupeenkalullathumaana oru thiraichchaீlaiyai unndupannnni,And he made a vail of blue, and purple, and scarlet, and fine twined linen: with cherubim made he it of cunning work.
36Atharkuch seeththim maraththinaal naalu thoonnkalaichcheythu, avaikalaip ponthakattal mooti, avaikalin kokkikalaip ponninaal pannnni, avaikalukku naanku vellippaathangalai vaarppiththaan.And he made thereunto four pillars of shittim wood, and overlaid them with gold: their hooks were of gold; and he cast for them four sockets of silver.
37Koodaaravaasalukku ilaneelanoolaalum iraththaamparanoolaalum sivappunoolaalum thiriththa melliya panjunoolaalum seytha siththirath thaiyalvaelaiyaana oru thonguthiraiyaiyum,And he made an hanging for the tabernacle door of blue, and purple, and scarlet, and fine twined linen, of needlework;
38Athin ainthu thoonnkalaiyum, avaikalin valaivaannikalaiyum unndaakki, avaikalin kumilkalaiyum valaiyangalaiyum ponthakattal mootinaan: avaikalin ainthu paathangalum vennkalamaayirunthathu.And the five pillars of it with their hooks: and he overlaid their chapiters and their fillets with gold: but their five sockets were of brass.