அப்பொழுது நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்துகிடக்கும்படி அதைத் தரையிலே விழப்பண்ணுவேன்; உள்ளே இருக்கிற நீங்கள் நிர்மூலமாகும்படி அது விழும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
இப்படிச் சுவரிலும் அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசினவர்களுமில்லை.
எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்கள் தழுவணைகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்கள் புயங்களிலிருந்து பிடுங்கிக் கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலை பண்ணி,
உங்கள் தலையணைகளைக் கிழித்து, என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்கள் கைகளில் இரார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
நான் சஞ்சலப்படுத்தாத நீதிமானின் இருதயத்தை நீங்கள் வீணாய் முறியப்பண்ணினபடியினாலும், துன்மார்க்கன் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பவும் நான் அவனை உயிரோடே காக்கவுங் கூடாதபடிக்கு நீங்கள் அவனுடைய கைகளைத் திடப்படுத்தினபடியினாலும்,
நீங்கள் இனி அபத்தமானதைத் தரிசிப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள் என்று சொல் என்றார்.
| Because, | יַ֣עַן | yaʿan | YA-an |
| even because | וּבְיַ֜עַן | ûbĕyaʿan | oo-veh-YA-an |
| they have seduced | הִטְע֧וּ | hiṭʿû | heet-OO |
| אֶת | ʾet | et | |
| my people, | עַמִּ֛י | ʿammî | ah-MEE |
| saying, | לֵאמֹ֥ר | lēʾmōr | lay-MORE |
| Peace; | שָׁל֖וֹם | šālôm | sha-LOME |
| and there was no | וְאֵ֣ין | wĕʾên | veh-ANE |
| peace; | שָׁל֑וֹם | šālôm | sha-LOME |
| and one | וְהוּא֙ | wĕhûʾ | veh-HOO |
| built up | בֹּ֣נֶה | bōne | BOH-neh |
| a wall, | חַ֔יִץ | ḥayiṣ | HA-yeets |
| and, lo, | וְהִנָּ֛ם | wĕhinnām | veh-hee-NAHM |
| others daubed | טָחִ֥ים | ṭāḥîm | ta-HEEM |
| it with untempered | אֹת֖וֹ | ʾōtô | oh-TOH |
| morter: | תָּפֵֽל׃ | tāpēl | ta-FALE |