அவர் என்னை வடக்கு வாசல் வழியாய்ப் புறப்படப்பண்ணி, என்னை வெளியிலே கீழ்த்திசைக்கு எதிரான புறவாசல்மட்டும் சுற்றி நடத்தக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபுறத்திலிருந்து பாய்கிறதாயிருந்தது.
நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியில் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும், அவைகளின் கனிகள் புசிப்புக்கும் அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.
தேசத்தின் எல்லையாவது: வடபுறம் பெரிய சமுத்திரந்துவக்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாயிருக்கிற,
ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது.
கீழ்ப்புறத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்துக்கும் நடுவாகவும் கீழ்க்கடல்மட்டும் இருக்கும் எல்லையாய் அளப்பீர்களாக; இது கீழ்ப்புறம்.
மேற்புறம் அந்த எல்லைதுவக்கி ஆமாத்துக்கு எதிராக வந்து சேருமட்டும் இருக்கிற பெரிய சமுத்திரமே; இது மேற்புறம்.
| And the border | וְהָיָ֨ה | wĕhāyâ | veh-ha-YA |
| from | גְב֜וּל | gĕbûl | ɡeh-VOOL |
| the sea | מִן | min | meen |
| shall be | הַיָּ֗ם | hayyām | ha-YAHM |
| Hazar-enan, | חֲצַ֤ר | ḥăṣar | huh-TSAHR |
| the border | עֵינוֹן֙ | ʿênôn | ay-NONE |
| of Damascus, | גְּב֣וּל | gĕbûl | ɡeh-VOOL |
| and the north | דַּמֶּ֔שֶׂק | dammeśeq | da-MEH-sek |
| northward, | וְצָפ֥וֹן׀ | wĕṣāpôn | veh-tsa-FONE |
| and the border | צָפ֖וֹנָה | ṣāpônâ | tsa-FOH-na |
| of Hamath. | וּגְב֣וּל | ûgĕbûl | oo-ɡeh-VOOL |
| And this is the north | חֲמָ֑ת | ḥămāt | huh-MAHT |
| side. | וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE |
| פְּאַ֥ת | pĕʾat | peh-AT | |
| צָפֽוֹן׃ | ṣāpôn | tsa-FONE |