இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்குச் அறிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.
யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லுூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து:
யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான்.
இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும் இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள் செய்தார் என்றான்.
அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடப்பண்ணி, அவனுடைய முகத்துக்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான்.
அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடதுகையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.
தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு கண்டு, அது தனக்குப் பிரியமில்லாதபடியால், எப்பீராயீமுடைய தலையின்மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைக்கும்படிக்கு எடுத்து:
பின்பு, இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; தேவன் உங்களோடே இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார் என்றும்,
உன் சகோதரருக்குக் கொடுத்ததைப்பார்க்கிலும், நான் என் பட்டயத்தாலும், என் வில்லினாலும், எமோரியர் கையிலிருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காகக் கொடுத்தேன் என்றும் சொன்னான்.
| And Joseph | וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יוֹסֵ֛ף | yôsēp | yoh-SAFE |
| unto | אֶל | ʾel | el |
| his father, | אָבִ֖יו | ʾābîw | ah-VEEOO |
| Not | לֹא | lōʾ | loh |
| so, | כֵ֣ן | kēn | hane |
| my father: | אָבִ֑י | ʾābî | ah-VEE |
| for | כִּי | kî | kee |
| this | זֶ֣ה | ze | zeh |
| is the firstborn; | הַבְּכֹ֔ר | habbĕkōr | ha-beh-HORE |
| put | שִׂ֥ים | śîm | seem |
| thy right hand | יְמִֽינְךָ֖ | yĕmînĕkā | yeh-mee-neh-HA |
| upon | עַל | ʿal | al |
| his head. | רֹאשֽׁוֹ׃ | rōʾšô | roh-SHOH |