அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும் எப்பீராயீமையும் தன்னோடேகூடக் கொண்டுபோனான்.
யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லுூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து:
நான் பதானைவிட்டு வருகையில், கானான் தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னண்டையிலே மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணினேன் என்றான்.
யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான்.
முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக் கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான்.
இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும் இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள் செய்தார் என்றான்.
என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான்.
இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான்.
said And | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
Israel | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
unto | אֶל | ʾel | el |
Joseph, | יוֹסֵ֔ף | yôsēp | yoh-SAFE |
Behold, | הִנֵּ֥ה | hinnē | hee-NAY |
I | אָֽנֹכִ֖י | ʾānōkî | ah-noh-HEE |
die: | מֵ֑ת | mēt | mate |
shall be | וְהָיָ֤ה | wĕhāyâ | veh-ha-YA |
but God | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
with | עִמָּכֶ֔ם | ʿimmākem | ee-ma-HEM |
you, and bring you again | וְהֵשִׁ֣יב | wĕhēšîb | veh-hay-SHEEV |
unto | אֶתְכֶ֔ם | ʾetkem | et-HEM |
the land | אֶל | ʾel | el |
of your fathers. | אֶ֖רֶץ | ʾereṣ | EH-rets |
אֲבֹֽתֵיכֶֽם׃ | ʾăbōtêkem | uh-VOH-tay-HEM |