Full Screen ?
 

Nambikaiyinal Nee Valvu Peruvai - நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே

பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார்

1. அதிசயக் கல்வாரி சிலுவையிலே
அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய்

2. ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் -என்று
அறிக்கை செய்து சுகமடைந்தான்
ஒருத்துளி சந்தேகமில்லாமலே
ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்

3. ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெற
ஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்
வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர்
ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் -உன்

4. கட்டாந்தரையில் நடப்பதுபோல்
கடலைக் கடந்தனார் நம்பிக்கையினால்
எரிகோ மதில்கள் விழுந்தனவே
ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால்

5. உலகிலே இருக்கும் அவனை விட
உனக்குள் இருப்பவர் பெரியவரே
துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்
துரிதமாய் வெற்றி காணச் செய்வார்

6. மலையைப் பார்த்து கடலில் விழு
என்று சொன்னால் நடந்திடுமே
உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே
நம்பினால் எல்லாம் நடந்திடுமே

நம்பிக்கையினால் நாம் வாழ்வு பெறுவோம்
நலமுடன் வாழ்ந்து ஜெயம் எடுப்போம்
பயம் இல்லையே திகில் இல்லையே
படைத்தவர் நம்மை நடத்தி செல்வார்

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் – Nambikaiyinal Nee Valvu Peruvai Lyrics in English

Nampikkaiyinaal nee vaalvu peraுvaay nannpanae nee payappadaathae payam vaenndaam thikil vaenndaam pataiththavar unnai nadaththich selvaar 1. Athisayak kalvaari siluvaiyilae anaiththaiyum seythu mutiththuvittar thalumpukalaal nee sukamaanaay thayavinaal maraுpati piranthuvittay 2. Aataiyaith thottal nalam peraுvaen -entu arikkai seythu sukamatainthaan oruththuli santhaekamillaamalae otivaa Yesu intu sukam tharuvaar 3. Abraham saaraal kulanthaip pera aattal pettathu nampikkaiyinaal vaakkuthaththam seythavar nampaththakkavar aekkamellaam eppatiyum niraivaettaுvaar -un 4. Kattantharaiyil nadappathupol kadalaik kadanthanaar nampikkaiyinaal eriko mathilkal vilunthanavae aelunaal oorvalam vanthathinaal 5. Ulakilae irukkum avanai vida unakkul iruppavar periyavarae thunnai nintu unakkaay yuththam seyvaar thurithamaay vetti kaanach seyvaar 6. Malaiyaip paarththu kadalil vilu entu sonnaal nadanthidumae unnaalae koodaathathu ontumillaiyae nampinaal ellaam nadanthidumae nampikkaiyinaal naam vaalvu peraுvom nalamudan vaalnthu jeyam eduppom payam illaiyae thikil illaiyae pataiththavar nammai nadaththi selvaar

PowerPoint Presentation Slides for the song நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் – Nambikaiyinal Nee Valvu Peruvai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambikaiyinal Nee Valvu Peruvai – நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் PPT
Nambikaiyinal Nee Valvu Peruvai PPT

நம்பிக்கையினால் வாழ்வு பயம் வேண்டாம் திகில் படைத்தவர் செல்வார் செய்து செய்வார் நடந்திடுமே இல்லையே பெறுவாய் நண்பனே பயப்படாதே உன்னை நடத்திச் அதிசயக் கல்வாரி சிலுவையிலே தமிழ்