Total verses with the word எலியாசாப் : 34

1 Samuel 17:28

அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.

Leviticus 10:6

மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொழுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.

1 Chronicles 15:18

இவர்களோடுங்கூட இரண்டாவது வரிசையாகத் தங்கள் சகோதரராகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஒபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளரையும் நிறுத்தினார்கள்.

Exodus 28:1

உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக.

1 Chronicles 8:37

மோசா பினியாவைப் பெற்றான், இவன் குமாரன் ரப்பா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.

Numbers 7:24

மூன்றாம் நாளில் ஏலோனின் குமாரனாகிய எலியாப் என்னும் செபுலோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

1 Chronicles 15:20

சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருகளை வாசித்தார்கள்.

Numbers 7:47

சமாதானபலியாக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும் ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது தேகுவேலின் குமாரனாகிய எலியாசாபின் காணிக்கை.

Leviticus 10:16

பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது தகனிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாயிருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரர்மேல் அவன் கோபங்கொண்டு:

1 Chronicles 12:9

யாரென்றால், எத்சேர் என்னும் தலைவன், அவனுக்கு இரண்டாவது ஒபதியா; மூன்றாவது எலியாப்,

Numbers 4:16

ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேக தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்தஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார்.

1 Chronicles 9:43

மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பாயா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல்.

Nehemiah 12:42

மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும் அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷாகியாவும சத்தமாய்ப் பாடினார்கள்.

Numbers 16:39

அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து,

Numbers 10:16

செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான்.

Numbers 3:32

ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்.

1 Chronicles 23:21

மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள்.

1 Samuel 16:6

அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன் தானாக்கும் என்றான்.

Ezra 10:25

மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;

1 Chronicles 6:4

எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான்.

1 Chronicles 11:12

இவனுக்கு இரண்டாவது அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன்.

Numbers 26:8

பல்லுூவின் குமாரன் எலியாப்.

Matthew 1:15

எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;

Numbers 3:2

ஆரோனுடைய குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.

1 Chronicles 24:1

ஆரோன் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.

Nehemiah 13:7

எருசலேமுக்கு வந்தேன்; அப்பொழுது எலியாசிப் தொபியாவுக்கு தேவனுடைய ஆலயத்துப் பிராகாரங்களில் ஒரு அறையை ஆயத்தம்பண்ணினதினால் செய்த பொல்லாப்பை அறிந்துகொண்டேன்.

Ezra 10:36

வனியா மெராமோத், எலெயாசீப்,

Nehemiah 13:4

இதற்குமுன்னே எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளை விசாரிக்க வைக்கப்பட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடே சம்பந்தங்கலந்தவனாயிருந்து,

1 Chronicles 3:24

எலியோனாயின் குமாரர், ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்னும் ஏழுபேர்.

Nehemiah 12:10

யெசுவா யொயாசீமைப் பெற்றான், யாயசீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.

Ezra 10:27

சத்துவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத் அசிசா என்பவர்களும்;

Numbers 2:14

அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

Numbers 7:42

ஆறாம் நாளில் தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.

Numbers 1:14

காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.