2 Samuel 3:34
உன் கைகள் கட்டப்படவும் இல்லை, உன் கால்களில் விலங்கு போடப்பட்டவும் இல்லை, துஷ்டர் கையில் மடிகிறதுபோல மடிந்தாயே என்றான்; அப்பொழுது ஜனங்களளெல்லாரும் பின்னும் அதிகமாய் அவனுக்காக அழுதார்கள்.
Luke 22:52பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டுவந்தீர்களே.
1 Thessalonians 5:3சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
Job 41:30அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்.
Job 3:20மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
Job 5:14அவர்கள் பகற்காலத்திலே அந்தகாரத்துக்குள்ளாகி, மத்தியானவேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவித் திரிகிறார்கள்.
Proverbs 26:14கதவு கீல்மூளையில் ஆடுகிறதுபோல,சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
Leviticus 26:36உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சியடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.