Hosea 12 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽எப்ராயிம் காற்றை உண்டு,நாள்␢ முழுவதும் கீழைக் காற்றைப் பிடிக்க␢ ஓடுகிறான்;␢ பொய்யும் வன்செயலும்␢ அவனிடம் பெருகி விட்டன;␢ அசீரியாவோடு␢ உடன்படிக்கை செய்கின்றான்;␢ எகிப்துக்கு␢ எண்ணெய் கொடுத்தனுப்புகின்றான்.⁾2 ⁽ஆண்டவருக்கு யூதாவோடு␢ வழக்கு ஒன்று உண்டு;␢ யாக்கோபை அவன் தீய␢ வழிகளுக்கேற்பத் தண்டிப்பார்;␢ அவன் செயல்களுக்குத் தக்கபடி␢ கைம்மாறு தருவார்.⁾3 ⁽யாக்கோபு தன் தாயின் வயிற்றிலேயே␢ தமையனை முந்திக் கொண்டான்;␢ பெரியவனாக வளர்ந்த பின்போ␢ கடவுளோடு போராடினான்.⁾4 ⁽வான தூதரோடு போராடி␢ வெற்றி கொண்டான்;␢ கண்ணீர் சிந்தி,␢ அவர் அருளை வேண்டிக்கொண்டான்;␢ பெத்தேல் என்னுமிடத்தில்␢ அவரை சந்தித்தான்;␢ அவரும் அங்கே அவனுடன் பேசினார்.⁾5 ⁽அந்த ஆண்டவரே␢ படைகளின் கடவுள்;␢ ஆண்டவர் என்பதே அவரது பெயராம்.⁾6 ⁽ஆதலால், இஸ்ரயேலே!␢ உன் கடவுளிடம் திரும்பி வா;␢ இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடி;␢ எப்போதும் உன் கடவுளை␢ நம்பிக் காத்திரு.⁾7 ⁽ஆனால், இஸ்ரயேல்␢ கள்ளத் தராசைக்␢ கையில் வைத்திருக்கும்␢ கானானியன் போன்றவன்;␢ அவன் கொடுஞ்செயல் புரியவே␢ விரும்புகின்றான்.⁾8 ⁽எப்ராயிம், ‘நான்␢ பணக்காரனாகிவிட்டேன்,␢ எனக் கென்று␢ செல்வம் சேர்த்துக்கொண்டேன்’␢ என்கிறான். ஆனால்,␢ அவனது செல்வம் எல்லாம்␢ சேர்ந்தும்கூட␢ அவனது தீச்செயலின் பழியை அகற்றாது!⁾9 ⁽எகிப்து நாட்டினின்று␢ உன்னை அழைத்து வந்த நாள் முதல்␢ நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;␢ விழா நாள்களில் போல␢ மறுபடியும் உன்னைக்␢ கூடாரங்களில் வாழச் செய்வேன்.⁾10 ⁽இறைவாக்கினர்களிடம் பேசினேன்;␢ நானே காட்சிகளின்␢ எண்ணிக்கையைப் பெருக்கினேன்;␢ இறைவாக்கினர் வாயிலாக␢ உவமைகளில் பேசினேன்.⁾11 ⁽கிலயாதில்␢ தீச்செயல் மலிந்திருப்பதால்␢ அவர்கள் திண்ணமாய் அழிவார்கள்;␢ கில்காலில் காளைகளைப்␢ பலியிடுவதால்␢ உழவுசால் அருகே இருக்கும்␢ கற்குவியல் போல்␢ அவர்களுடைய பலிபீடங்கள் ஆகிவிடும்.⁾12 ⁽யாக்கோபு ஆராம் நாட்டிற்குத்␢ தப்பி ஓடினான்;␢ இஸ்ரயேல் ஒரு பெண்ணுக்காக␢ ஊழியம் செய்தான்;␢ அப்பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.⁾13 ⁽இறைவாக்கினர் ஒருவரைக் கொண்டு␢ ஆண்டவர் இஸ்ரயேலை␢ எகிப்திலிருந்து கூட்டி வந்தார்.␢ இறைவாக்கினர் ஒருவரால்␢ அவன் பாதுகாக்கப்பட்டான்.⁾14 ⁽எப்ராயிம் ஆண்டவருக்கு␢ மிகவும் சினமூட்டினான்;␢ அவனுடைய தலைவர்␢ அவனுடைய இரத்தப் பழியை␢ அவன் மேலேயே சுமத்துவார்;␢ அவனுடைய நிந்தையை␢ ஆண்டவர் அவன் மேலேயே திருப்புவார்.⁾