Hosea 13 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ⁽எப்ராயிம் பேசியபோது ஏனையோர்␢ நடுங்கினர்; இஸ்ரயேலில் அவன்␢ மிக உயர்ந்திருந்தான்; ஆனால்,␢ பாகாலை வழிபட்ட␢ குற்றத்திற்காய் மடிந்தான்.⁾2 ⁽இப்போதும், அவர்கள்␢ பாவத்தின்மேல் பாவம்␢ செய்கிறார்கள்;␢ சிலைகளைத் தங்களுக்கென␢ வார்த்துக் கொள்கிறார்கள்;␢ அவர்களுடைய வெள்ளியில்␢ செய்யப்பட்ட சிலைகள் அவை;␢ அவை யாவும்␢ தட்டானின் கைவேலைகளே;␢ “இவற்றுக்குப் பலியிடுங்கள்”*␢ என்கிறார்கள் அவர்கள்;␢ மனிதர் கன்றுக்குட்டிகளை␢ முத்தமிடுகின்றார்கள்.⁾3 ⁽ஆதலால் அவர்கள்␢ காலையில் காணும் மேகம்போலும்,␢ விரைவில் உலர்ந்துபோகும்␢ பனித்துளி போலும்,␢ சுழற்காற்றில் சிக்கிய␢ களத்துத் துரும்பு போலும்␢ பலகணி வழியாய் வெளிப்பட்ட␢ புகைபோலும் ஆவார்கள்.⁾4 ⁽எகிப்து நாட்டினின்று␢ உன்னை விடுவித்த நாள் முதல்␢ நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;␢ என்னைத்தவிர␢ வேறு கடவுளை நீ அறியாய்;␢ என்னையன்றி வேறு மீட்பரும் இல்லை.⁾5 ⁽வறண்ட நிலமாகிய பாலைவெளியில்␢ உன்னை அறிந்து ஆதரித்தவர் நானே;⁾6 ⁽வளமான மேய்ச்சல் கிடைத்தபடியால்␢ அவர்கள் மனநிறைவுற்றார்கள்;␢ மன நிறைவடைந்ததும் செருக்குற்று␢ என்னை மறந்து போனார்கள்.⁾7 ⁽ஆதலால் நான் அவர்களுக்கு␢ ஒரு சிங்கம்போலிருப்பேன்;␢ வேங்கைபோலப் பாயுமாறு␢ வழியோரத்தில் மறைந்திருப்பேன்.⁾8 ⁽குட்டியைப் பறிகொடுத்த␢ பெண் கரடிபோல்␢ அவர்கள்மேல் பாய்ந்து␢ அவர்கள் நெஞ்சைக் கிழிப்பேன்;␢ சிங்கத்தைப் போல் அங்கேயே␢ அவர்களைத் தின்றொழிப்பேன்;␢ காட்டுவிலங்கு␢ அவர்களைக் கிழித்தெறியும்.⁾9 ⁽இஸ்ரயேலே, உன்னை நான்␢ அழிக்கப் போகின்றேன்;␢ *உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்?*⁾10 ⁽‘எனக்கு அரசன் வேண்டும்,␢ தலைவர்கள் வேண்டும்’ என்று␢ என்னிடம் கேட்டாய்.␢ உன்னை மீட்கும் அரசன் எங்கே?␢ உன் நகர் அனைத்திலும் உள்ள␢ தலைவர்கள் எங்கே?*⁾11 ⁽வேண்டா வெறுப்போடு உனக்கு நான்␢ ஓர் அரசனைத் தந்தேன்;␢ என் சினத்தில் நான்␢ அவனை அகற்றிவிட்டேன்.⁾12 ⁽எப்ராயிமின் தீச்செயல்␢ சேர்த்து வைக்கப்பட்டுள்ளது;␢ அவனுடைய பாவம்␢ சேமித்து வைக்கப்பட்டுள்ளது.⁾13 ⁽அவனுக்கான பேறுகால வேதனை␢ வந்தாயிற்று; ஆனால்,␢ அவன் ஓர் அறிவற்ற பிள்ளை;␢ பிறக்கும் நேரம் வந்து விட்டது;␢ ஆனால், கருப்பையை விட்டு␢ வெளியேற மறுக்கிறான்.⁾14 ⁽பாதாளத்தின் பிடியினின்று␢ அவர்களை விடுவிப்பேனோ?␢ சாவிலிருந்து அவர்களை மீட்பேனோ?␢ சாவே! உன்␢ கொள்ளை நோய்கள் எங்கே?␢ பாதாளமே! உன்␢ அழிவு வேலை எங்கே?␢ தற்போது இரக்கம் என்னிடம் இல்லை.⁾15 ⁽எப்ராயிம் தன் சகோதரருள்␢ கனி தரும் மரம் போலிருக்கலாம்;␢ ஆயினும் ஆண்டவரின் மூச்சாகிய␢ கீழைக் காற்று␢ பாலை நிலத்திலிருந்து கிளம்பி வரும்;␢ வந்து அவனுடைய நீரோடைகளையும்,␢ நீரூற்றுகளையும்␢ வறண்டு போகச் செய்யும்.␢ அவனது கருவூலத்திலிருந்து␢ விலையுயர்ந்த பொருள்களை எல்லாம்␢ வாரிக்கொண்டு போகும்.⁾16 ⁽சமாரியா தன் கடவுளை எதிர்த்துக்␢ கலகமூட்டிற்று;␢ அது தன் குற்றப் பழியைச் சுமக்கும்;␢ அதன் குடிமக்கள்␢ வாளால் மடிவார்கள்,␢ அவர்களுடைய குழந்தைகள்␢ மோதியடிக்கப்படுவார்கள்;␢ அவர்களுடைய கர்ப்பவதிகள்␢ கிழித்தெறியப் படுவார்கள்.⁾