Full Screen ?
 

Adaikalame Yesu - அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா-Adaikalam

அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா, உன்
அடைக்கலம் அடைக்கலமே!

அனுபல்லவி

திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம்

சரணங்கள்

1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம்

2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம்

3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! — அடைக்கலம்

4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? — அடைக்கலம்

அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா-Adaikalam Adaikalame Yesu

அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா-Adaikalam Adaikalame Yesu Lyrics in English

Ataikkalam ataikkalamae Yesu naathaa, un ataikkalam ataikkalamae! Anupallavi thidanattaுp pelanattaுn atiyuttalum aelaikku — ataikkalam saranangal 1. Aasaiyodu paavamathil alainthu thirinthaenae, anpulla pithaa unai vittakantu pirinthaenae; mosamathai yaeyalaal mattaொntaiyum kaannaamalae thoshamodu sernthanan thuraththidaathu serththarul! —ataikkalam 2. Kattuppadaak kaayamathin ketta ranam polavae mattuppadaap paavamathil mayangi uranginaen; kettavanae povenak kilaththinum niyaayamae, kittivanthalaraுm aelai kenjuthal kaelayyanae! — ataikkalam 3. Sinthiya uthiramathum ainthu thirukkaayamum nonthuru kenathumanach sanjalamakattidum; panthamikum paavi entan kenjidung karaththinai enthavithamun thallaamal irangidu maiyanae! — ataikkalam 4. Ennidaththil varuvorai enthavithamum thallaen entu sonna vaakkathanil enakkum pangillaiyo antunathu pakkamathil aakiyiruntha kallanukku intupara theesiliruppaa yenturaiththaa yallavo? — ataikkalam ataikkalam ataikkalamae Yesu naathaa-Adaikalam Adaikalame Yesu

PowerPoint Presentation Slides for the song அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா-Adaikalam Adaikalame Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adaikalame Yesu – அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா-Adaikalam PPT
Adaikalame Yesu PPT

அடைக்கலம் அடைக்கலமே இயேசு பாவமதில் நாதா அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு சரணங்கள் ஆசையோடு அலைந்து திரிந்தேனே அன்புள்ள பிதா உனை விட்டகன்று தமிழ்