மரணமே உன் கூர்; எங்கே ?
பாதாளமே உன் ஜெயம் எங்கே?
மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு
எனக்குள் வந்துவிட்டர்
சாவை அழித்து அழியா வாழ்வை
எனக்குத் தந்துவிட்டார்
1. சாவுக்கு அதிபதி சாத்தானை-இயேசு
சாவாலே வென்றுவிட்டார்
மரண பயத்தினால் வாடும் மனிதரை
விடுவித்து மீட்டுக் கொண்டார்
பயமில்லையே மரணபயமில்லையே
ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார்
2. அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
அழியாமை அணிந்து கொள்ளும்
சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
சாவாமை அணிந்து கொள்ளும்
3. இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்
ஆளுகை செய்திடவே
இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்
இன்றைக்கும் ஜீவிக்கிறார்
4. கட்டளை பிறக்க தூதன் குரல் ஒலிக்க
கர்த்தர் இயேசு வந்திடுவார்
கிறிஸ்துவுக்கள் வாழ்வோர்
கிறிஸ்துவுக்கள் மரித்தோர்
எதிர் கொண்டு சென்றிடுவோம்
5. பூமிக்குரிய கூடாரமான
இவ்வீடு அழிந்தாலும்
பரமன் கட்டிய நிலையான வீடு
பரலோகத்தில் உண்டு
6. அகரமும் னகரமும் தொடக்கமும் முடிவும்
நான் தானே என்று சொன்னவர்
அவனவன் கிரியைக்குத் தகுந்த பரிசு அளிக்க
சீக்கிரத்தில் வருகின்றார்
மரணமே உன் கூர் – Maraname Un Koor Enge Lyrics in English
Maranamae un koor; engae ? Paathaalamae un jeyam engae? Maranaththai jeyiththa mannavan Yesu enakkul vanthuvittar saavai aliththu aliyaa vaalvai enakkuth thanthuvittar 1. Saavukku athipathi saaththaanai-Yesu saavaalae ventuvittar marana payaththinaal vaadum manitharai viduviththu meettuk konndaar payamillaiyae maranapayamillaiyae jeyam eduththaar Yesu jeyam eduththaar 2. Alivukkuriya ivvudal oru naal aliyaamai anninthu kollum saavukkuriya ivvudal oru naal saavaamai anninthu kollum 3. Iranthor maelum vaalvor maelum aalukai seythidavae Yesu mariththu uyirththu elunthaar intaikkum jeevikkiraar 4. Kattalai pirakka thoothan kural olikka Karththar Yesu vanthiduvaar Kristhuvukkal vaalvor Kristhuvukkal mariththor ethir konndu sentiduvom 5. Poomikkuriya koodaaramaana ivveedu alinthaalum paraman kattiya nilaiyaana veedu paralokaththil unndu 6. Akaramum nakaramum thodakkamum mutivum naan thaanae entu sonnavar avanavan kiriyaikkuth thakuntha parisu alikka seekkiraththil varukintar
PowerPoint Presentation Slides for the song மரணமே உன் கூர் – Maraname Un Koor Enge
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maraname Un Koor Enge – மரணமே உன் கூர் PPT
Maraname Un Koor Enge PPT

