தருணம் மழை ஈயும் நாதனே
சருவேசா அதி நேசா பவ நாசா ஈசா
1 தருணம் அருள் ஈசனே தவிக்கிறோம் மா ராஜனே
கிரணம் ஒளிர் உல்லாசனே கிலேசம் அகற்றும் நேசனே.
பூமி வறண்டு போனதே புற்கள் வாடல் ஆனதே
ஸ்வாமி நன் மழை ஊற்றுமே தாபம் அனைத்தும் மாற்றுமே
வெப்பம் மிகுந்த தையனே வேளை உதவாய் துய்யனே
எப்படியும் மழை பொழிந்தே இரக்கம் செய்வாய் மெய்யனே
ஜீவன் யாவும் மாளுதே தினமும் துயரம் நீளுதே
தேவே திருக்கண் பாருமே செழிக்க நல் மழை தாருமே
பஞ்சமே பறந்தோடவே பணிந்துனைக் கொண்டாடவே
கெஞ்சும் அடியர் கூடவே கிருபை அருள் நீடவே.
அல்லும்பகலும் அழுகிறோம் ஆற்றும் பரனே தொழுகிறோம்
பொல்லார் எனவே விழுகிறோம் பொழியும் மழையை எழுகிறோம்
Tharunam Mazhai Eeyum Lyrics in English
Tharunam malai eeyum naathanae saruvaesaa athi naesaa pava naasaa eesaa 1 tharunam arul eesanae thavikkirom maa raajanae kiranam olir ullaasanae kilaesam akattaுm naesanae. Poomi varanndu ponathae purkal vaadal aanathae svaami nan malai oottaுmae thaapam anaiththum maattaுmae veppam mikuntha thaiyanae vaelai uthavaay thuyyanae eppatiyum malai polinthae irakkam seyvaay meyyanae jeevan yaavum maaluthae thinamum thuyaram neeluthae thaevae thirukkann paarumae selikka nal malai thaarumae panjamae paranthodavae panninthunaik konndaadavae kenjum atiyar koodavae kirupai arul needavae. Allumpakalum alukirom aattaுm paranae tholukirom pollaar enavae vilukirom poliyum malaiyai elukirom
PowerPoint Presentation Slides for the song Tharunam Mazhai Eeyum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Tharunam Mazhai Eeyum Naathanae – தருணம் மழை ஈயும் நாதனே PPT
Tharunam Mazhai Eeyum Naathanae PPT

