Full Screen ?
 

Aruliya Perum - நாதன் அருளிய பெரும்-NATHAN

நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே – நாவினாலே
பாடிப் போற்ற நாட்கள் போதுமோ
நல் பாதைதனில் தொடந்தென்னை நடத்தியதால்

அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன்
எண்ணில்லாத நன்மைகட்காய்
அல்லேலூயா பாடிடுவேன்

1. இயேசுவே நீர் எந்தன் பக்கம் இல்லாதிருந்தால்
சோதனையாம் வெள்ளத்திலே மாண்டிருப்பேன் நான்
நிந்தை துன்ப துயர நேரங்களிலும்
உம் நீதியின் வலக்கரத்தால் என்னைத் தாங்கினீர் -அன்பின்
2. மேலோகத்தில் உம்மையல்லால் யாருண்டெனக்கு
பூலோகில் நீரல்லாது வேறாசையில்லையே
உம் ஆலோசனையின் படி என்னை நடத்தி
உந்தன் மகிமையிலே ஏற்றுக்கொள்வீரே -அன்பின்

3. ஓட்டம் முடித்த பரிசுத்தர் பரத்தில்
ஓய்ந்திருக்கின்றார் தங்கள் அறைகளிலே
தாரணியில் நானும் எந்தன் ஓட்டம் முடிக்க
தேகம் ஆத்மா ஆவியையும் ஒப்புவிக்கின்றேன்-அன்பின்

நாதன் அருளிய பெரும்-Nathan Aruliya Perum Lyrics in English

Naathan aruliya perum kirupaikatkaay nantiyaal en ullam pongi valinthiduthae – naavinaalae paatip potta naatkal pothumo nal paathaithanil thodanthennai nadaththiyathaal anpin naesarae naan ummaip pottaுvaen ennnnillaatha nanmaikatkaay Alleluya paadiduvaen 1. Yesuvae neer enthan pakkam illaathirunthaal sothanaiyaam vellaththilae maanntiruppaen naan ninthai thunpa thuyara naerangalilum um neethiyin valakkaraththaal ennaith thaangineer -anpin 2. Maelokaththil ummaiyallaal yaarunndenakku poolokil neerallaathu vaeraasaiyillaiyae um aalosanaiyin pati ennai nadaththi unthan makimaiyilae aettaுkkolveerae -anpin 3. Ottam mutiththa Parisuththar paraththil oynthirukkintar thangal araikalilae thaaranniyil naanum enthan ottam mutikka thaekam aathmaa aaviyaiyum oppuvikkinten-anpin

PowerPoint Presentation Slides for the song நாதன் அருளிய பெரும்-Nathan Aruliya Perum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aruliya Perum – நாதன் அருளிய பெரும்-NATHAN PPT
Aruliya Perum PPT

அன்பின் எந்தன் உம் ஓட்டம் நாதன் அருளிய கிருபைகட்காய் நன்றியால் உள்ளம் பொங்கி வழிந்திடுதே நாவினாலே பாடிப் போற்ற நாட்கள் போதுமோ நல் பாதைதனில் தொடந்தென்னை தமிழ்