யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியிலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.
உயர்ந்த மேடுகளின் பச்சையான மரங்களண்டையில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது.
அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே.
அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.
அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும் இரதங்களினாலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும் அவர்கள் பிரபுக்களும், தாவீதின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த வம்சம் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.
நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
that he shall be | וְהָיָ֞ה | wĕhāyâ | veh-ha-YA |
For tree a | כְּעֵ֣ץ׀ | kĕʿēṣ | keh-AYTS |
as | שָׁת֣וּל | šātûl | sha-TOOL |
planted | עַל | ʿal | al |
by the | מַ֗יִם | mayim | MA-yeem |
waters, by river, the | וְעַל | wĕʿal | veh-AL |
and out | יוּבַל֙ | yûbal | yoo-VAHL |
spreadeth | יְשַׁלַּ֣ח | yĕšallaḥ | yeh-sha-LAHK |
roots her | שָֽׁרָשָׁ֔יו | šārāšāyw | sha-ra-SHAV |
and shall not | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
see | יִרְאֶ֙ | yirʾe | yeer-EH |
when | כִּֽי | kî | kee |
cometh, | יָבֹ֣א | yābōʾ | ya-VOH |
heat | חֹ֔ם | ḥōm | home |
be shall leaf | וְהָיָ֥ה | wĕhāyâ | veh-ha-YA |
her but | עָלֵ֖הוּ | ʿālēhû | ah-LAY-hoo |
green; | רַֽעֲנָ֑ן | raʿănān | ra-uh-NAHN |
year the in | וּבִשְׁנַ֤ת | ûbišnat | oo-veesh-NAHT |
drought, of | בַּצֹּ֙רֶת֙ | baṣṣōret | ba-TSOH-RET |
not shall and | לֹ֣א | lōʾ | loh |
be careful | יִדְאָ֔ג | yidʾāg | yeed-Aɡ |
neither | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
shall cease | יָמִ֖ישׁ | yāmîš | ya-MEESH |
from yielding | מֵעֲשׂ֥וֹת | mēʿăśôt | may-uh-SOTE |
fruit. | פֶּֽרִי׃ | perî | PEH-ree |