இதினிமித்தம் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.
இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போலிருக்கிறது; அவன் குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ! நாம் பாழாக்கப்படுகிறோமே.
ஜாதிகளுக்கு அதை நீங்கள் பிரஸ்தாபம்பண்ணுங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்தசத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள்.
உன் நடக்கையும் உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணின; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயமட்டும் எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.
தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.
குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினாலே சகல ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனுஷனும் அவைகளிலே குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்.
and | שֶׁ֤בֶר | šeber | SHEH-ver |
Destruction | עַל | ʿal | al |
upon | שֶׁ֙בֶר֙ | šeber | SHEH-VER |
destruction is | נִקְרָ֔א | niqrāʾ | neek-RA |
cried; | כִּ֥י | kî | kee |
for spoiled: | שֻׁדְּדָ֖ה | šuddĕdâ | shoo-deh-DA |
is | כָּל | kāl | kahl |
whole the | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
land | פִּתְאֹם֙ | pitʾōm | peet-OME |
suddenly spoiled, are | שֻׁדְּד֣וּ | šuddĕdû | shoo-deh-DOO |
my | אֹהָלַ֔י | ʾōhālay | oh-ha-LAI |
tents a in | רֶ֖גַע | regaʿ | REH-ɡa |
moment. curtains my | יְרִיעֹתָֽי׃ | yĕrîʿōtāy | yeh-ree-oh-TAI |