மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிற வழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்.
கல்தேயா கொள்ளையாகும்; அதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லாரும் பரிபூரணமடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது கர்த்தர் வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள்.
அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்கு கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் யுத்தவீரர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது.
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் ஏகமாய் ஒடுங்குண்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின யாவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள்.
பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிகள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
தேவன் சோதோமையும் கொமோராவையும் அதின் சுற்றுப்புறங்களையும் கவிழ்த்துப்போட்டதுபோல இதையும் கவிழ்த்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஒருவரும் அதில் குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதில் தங்குவதுமில்லை.
| In those | בַּיָּמִ֨ים | bayyāmîm | ba-ya-MEEM |
| days, | הָהֵ֜מָּה | hāhēmmâ | ha-HAY-ma |
| and in that | וּבָעֵ֤ת | ûbāʿēt | oo-va-ATE |
| time, | הַהִיא֙ | hahîʾ | ha-HEE |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| the children | יָבֹ֧אוּ | yābōʾû | ya-VOH-oo |
| of Israel | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| shall come, | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| they | הֵ֥מָּה | hēmmâ | HAY-ma |
| and the children | וּבְנֵֽי | ûbĕnê | oo-veh-NAY |
| of Judah | יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| together, | יַחְדָּ֑ו | yaḥdāw | yahk-DAHV |
| going | הָל֤וֹךְ | hālôk | ha-LOKE |
| and weeping: | וּבָכוֹ֙ | ûbākô | oo-va-HOH |
| they shall go, | יֵלֵ֔כוּ | yēlēkû | yay-LAY-hoo |
| and seek | וְאֶת | wĕʾet | veh-ET |
| the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| their God. | אֱלֹהֵיהֶ֖ם | ʾĕlōhêhem | ay-loh-hay-HEM |
| יְבַקֵּֽשׁוּ׃ | yĕbaqqēšû | yeh-va-kay-SHOO |