அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.
அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.
அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.
அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவன் நிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,
யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.
அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணினார்கள்.
| Now the Lord | וַיְמַ֤ן | wayman | vai-MAHN |
| had prepared | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| a great | דָּ֣ג | dāg | dahɡ |
| fish | גָּד֔וֹל | gādôl | ɡa-DOLE |
| to swallow up | לִבְלֹ֖עַ | liblōaʿ | leev-LOH-ah |
| אֶת | ʾet | et | |
| Jonah. | יוֹנָ֑ה | yônâ | yoh-NA |
| And Jonah | וַיְהִ֤י | wayhî | vai-HEE |
| was | יוֹנָה֙ | yônāh | yoh-NA |
| in the belly | בִּמְעֵ֣י | bimʿê | beem-A |
| of the fish | הַדָּ֔ג | haddāg | ha-DAHɡ |
| three | שְׁלֹשָׁ֥ה | šĕlōšâ | sheh-loh-SHA |
| days | יָמִ֖ים | yāmîm | ya-MEEM |
| and three | וּשְׁלֹשָׁ֥ה | ûšĕlōšâ | oo-sheh-loh-SHA |
| nights. | לֵילֽוֹת׃ | lêlôt | lay-LOTE |