உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார்.
இந்நாள்மட்டும் நீங்கள் செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்.
கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான ஜாதிகளைத் துரத்தியிருக்கிறார்; இந்நாள்மட்டும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை.
உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.
ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும் அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள்.
இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே சொன்ன நல்ல காரியம் எல்லாம் உங்களிடத்திலே எப்படி நிறைவேறிற்றோ, அப்படியே, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்து கொள்ளுங்காலத்தில்,
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள் என்றான்.
| And the Lord | וַֽיהוָ֣ה | wayhwâ | vai-VA |
| your God, | אֱלֹֽהֵיכֶ֗ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
| he | ה֚וּא | hûʾ | hoo |
| shall expel | יֶהְדֳּפֵ֣ם | yehdŏpēm | yeh-doh-FAME |
| them from before | מִפְּנֵיכֶ֔ם | mippĕnêkem | mee-peh-nay-HEM |
| you, and drive | וְהוֹרִ֥ישׁ | wĕhôrîš | veh-hoh-REESH |
| them from out of your sight; | אֹתָ֖ם | ʾōtām | oh-TAHM |
| and ye shall possess | מִלִּפְנֵיכֶ֑ם | millipnêkem | mee-leef-nay-HEM |
| וִֽירִשְׁתֶּם֙ | wîrištem | vee-reesh-TEM | |
| their land, | אֶת | ʾet | et |
| as | אַרְצָ֔ם | ʾarṣām | ar-TSAHM |
| the Lord | כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| your God | דִּבֶּ֛ר | dibber | dee-BER |
| hath promised | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| unto you. | אֱלֹֽהֵיכֶ֖ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
| לָכֶֽם׃ | lākem | la-HEM |