பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்து போங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே போனார்கள்.
கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.
சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.
யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே,
சகல ஜனங்களும் யோர்தானைக்கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலுூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்து போனார்கள்.
| Behold, | הִנֵּה֙ | hinnēh | hee-NAY |
| the ark | אֲר֣וֹן | ʾărôn | uh-RONE |
| of the covenant | הַבְּרִ֔ית | habbĕrît | ha-beh-REET |
| of the Lord | אֲד֖וֹן | ʾădôn | uh-DONE |
| of all | כָּל | kāl | kahl |
| the earth | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| passeth over | עֹבֵ֥ר | ʿōbēr | oh-VARE |
| before | לִפְנֵיכֶ֖ם | lipnêkem | leef-nay-HEM |
| you into Jordan. | בַּיַּרְדֵּֽן׃ | bayyardēn | ba-yahr-DANE |