அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ ஆயியின் ராஜாவையும் அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
அப்பொழுது அவர்கள்: முன்போல நமக்கு முன்னாக முறிந்து ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு இப்பாலே வரப்பண்ணுமட்டும், அவர்களுக்கு முன்னாக ஓடுவோம்.
அப்பொழுது பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள் எல்லாரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தைவிட்டு அப்புறப்பட்டார்கள்.
அவன் தன் கையை நீட்டினவுடனே, பதிவிருந்தவர்கள் தீவிரமாய்த் தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பி ஓடி, பட்டணத்துக்கு வந்து, அதைப்பிடித்து, தீவிரத்தோடே பட்டணத்தைத் தீக்கொளுத்தினார்கள்.
பதிவிருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலரும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனுஷரை முறிய அடித்தார்கள்.
பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இப்புறத்திலும் சிலர் அப்புறத்திலுமிருந்த இஸ்ரவேலின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகையால் அவர்களில் ஒருவனும் தப்பி மீந்திராதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,
ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து, சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.
| And he commanded | וַיְצַ֨ו | wayṣǎw | vai-TSAHV |
| them, saying, | אֹתָ֜ם | ʾōtām | oh-TAHM |
| Behold, | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| ye | רְ֠אוּ | rĕʾû | REH-oo |
| shall lie in wait | אַתֶּ֞ם | ʾattem | ah-TEM |
| against the city, | אֹֽרְבִ֤ים | ʾōrĕbîm | oh-reh-VEEM |
| even behind | לָעִיר֙ | lāʿîr | la-EER |
| the city: | מֵאַֽחֲרֵ֣י | mēʾaḥărê | may-ah-huh-RAY |
| go | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
| not | אַל | ʾal | al |
| very | תַּרְחִ֥יקוּ | tarḥîqû | tahr-HEE-koo |
| far from | מִן | min | meen |
| the city, | הָעִ֖יר | hāʿîr | ha-EER |
| but be | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
| ye all | וִֽהְיִיתֶ֥ם | wihĕyîtem | vee-heh-yee-TEM |
| ready: | כֻּלְּכֶ֖ם | kullĕkem | koo-leh-HEM |
| נְכֹנִֽים׃ | nĕkōnîm | neh-hoh-NEEM |