உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் சொல்லவேண்டிய நித்திய கட்டளை.
அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.
| For | כִּ֤י | kî | kee |
| whatsoever | כָל | kāl | hahl |
| soul | הַנֶּ֙פֶשׁ֙ | hannepeš | ha-NEH-FESH |
| it be that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| shall not | לֹֽא | lōʾ | loh |
| be afflicted | תְעֻנֶּ֔ה | tĕʿunne | teh-oo-NEH |
| in that | בְּעֶ֖צֶם | bĕʿeṣem | beh-EH-tsem |
| same | הַיּ֣וֹם | hayyôm | HA-yome |
| day, | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
| he shall be cut off | וְנִכְרְתָ֖ה | wĕnikrĕtâ | veh-neek-reh-TA |
| from among his people. | מֵֽעַמֶּֽיהָ׃ | mēʿammêhā | MAY-ah-MAY-ha |