Lyrics PPT

Unnathamaanavarin PPT - 1. உன்னதமானவரின் - உயர் மறைவிலிருக்கிறவன்

1. உன்னதமானவரின் - உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே

Slide 1

1. உன்னதமானவரின் – உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே

Slide 2

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார்

Slide 3

2. தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே — அவர்

Slide 4

3. இரவின் பயங்கரத்துக்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நான் பயப்படவே மாட்டேன் — அவர்

Slide 5

4. ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும் அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே — அவர்

Slide 6

5. தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் — அவர்

Slide 7

6. உன் வழிகளிலெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவார் — அவர்

Slide 8

7. சிங்கத்தின் மேலும் நடந்து வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்து காத்திடுவார் — அவர்

Slide 9

8. ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர் — அவர்

Unnathamaanavarin PowerPoint

Unnathamaanavarin - 1. உன்னதமானவரின் - உயர் மறைவிலிருக்கிறவன் Lyrics

Unnathamaanavarin PPT

Download Unnathamaanavarin Tamil PPT